SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, July 28, 2012

TET PAPER 1 KEY ANSWERS PUBLISHED

ஆசிரியர் தகுதி தேர்வு; முதல் தாள் விடைகள் வெளியீடு


சென்னை, ஜூலை 28: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் விடைகள் இணையதளத்தில் ஜூலை 27ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காலையில் முதல் தாளும், பிற்பகலில் இரண்டாம் தாளும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வை எழுதினர்.

இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள் 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து முதல் தாளுக்கான விடைகளையும் (கீ-ஆன்சர்) நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், தேர்வர்கள் அதை உரிய ஆதாரத்துடன் ஜூலை 3ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்பிறகு, பெறப்படும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/  என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


தேர்வு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான "கீ ஆன்சரில்' பதில்கள் குழப்பமாக அமைந்துள்ளன.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான "கீ ஆன்சர்'களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வேறு வேறு பதில்கள் ஆன்சர்களாக குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, "சி' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் "மேணுபேக்ட்ர்' என்றும், "டி' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு "பிட்' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்கு விடைகள் வேறுவேறாக கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த "ஆன்சர்' சரியானது என்று தெரியவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

LIST OF HOLIDAYS 2012-13 www.testfnagai.blogspot.in

Tuesday, July 24, 2012

PRIMARY HM SELECTION GRADE CLARIFICATION FITMENT&1.86

TET ANSWER KEY FOR SECOND PAPER RELEASED


டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு விடைகள் வெளியீடு-24-07-2012


சென்னை: டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., நேற்றிரவு வெளியிட்டது. முதல் தாள் தேர்வுக்கான விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.
டி.இ.டி., தேர்வு, 12ம் தேதி நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 5 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., நேற்றிரவு, தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. தேர்வர்கள், விடைகளைப் பார்த்து, அதில் ஆட்சேபனை இருந்தால், 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்பின் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள், ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

ENGLISH MEDIUM FOR CLASSES FROM 1 TO 8 TO BE STARTED

Monday, July 23, 2012

SSA SCANDAL IN LIFE SKILL TRAINING


எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?-23-07-2012




ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.
பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.
அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.
ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

IGNOU ENTRANCE TESTS NOW ON 26.08.2012


இன்னோ: பி.எட், எம்.எட், நுழைவுத்தேர்வுக்கு தேதி நீட்டிப்பு

First Published : 23 Jul 2012 04:10:31 PM IST


டெல்லி, ஜூலை 23: இந்திரா காந்தி தேசிய நிறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2012-13ல் மாணவர் சேர்க்கைக்காக பி.எட், எம்.எட், பி.எஸ்சி, (நர்ஸிங் (PB)) போன்ற படிப்புக்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ.550 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், வரைவோலை எடுத்து இக்னோ பல்லைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் மேலும் விரிவான தகவல்களை அறிய www.ignou.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.
ENTRANCE TESTS NOW ON 26.08.2012
Entrance test  for Openmat-XXXII, B.Ed., M.Ed., B.Sc.
Nursing(PB) postponed.And is now scheduled for 26th
August, 2012
        INDIRA G
         INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY
                        ANNOUNCES ENTRANCE TESTS
To Be Held On 26


DEPLOYMENT OF SGTS WITHIN BLOCK & OTHERS WITHIN DISTRICT

Saturday, July 21, 2012

SECONDARY COUNSELLING SCHEDULE

÷21-ம் தேதி முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு ஒன்றியத்துக்குள் நடைபெறும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் நடைபெறும். 22-ம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டம் மாறுதலும், 23-ம் தேதி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வும் நடைபெறும்.       

STUDENT FORCED TO DRINK URINE IN PERAMBALUR

பள்ளி விடுதியில் கொடுமை

 

சிறுநீர் குடிக்க சொல்லி மாணவனை அடித்ததாக 3 ஆசிரியர் மீது புகார்

கருத்துகள்


கும்பகோணம் : பள்ளி விடுதியில் சிறுநீர் குடிக்க சொல்லி அடித்ததாக 3 ஆசிரியர்கள் மீது 9ம் வகுப்பு மாணவன் புகார் செய்துள்ளான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தஞ்சை மவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகை பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் பரத்ராஜ் (14). பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூரில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறான். 

நேற்று முன்தினம் இரவு விடுதியில், படிக்கும் நேரத்தில் ஆசிரியர்களிடம் மாணவன் பரத்ராஜ் சிறுநீர் கழிக்க செல்ல அனுமதி கேட்டானாம். இதற்கு ஆசிரியர்கள், ‘படிக்கும் நேரத்தில் எப்படி உனக்கு சிறுநீர் வரும். உனது சிறுநீரை பிடித்து குடிÕ என கூறி கம்புகளால் மாறி மாறி பரத்ராஜை அடித்ததாகக் கூறப்படுகிறது.  இதில் மாணவனின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இரவு முழுவதும் வலியால் துடித்த பரத்ராஜ், அதிகாலையில் புறப்பட்டு ஊருக்கு வந்துள்ளான். வீட்டில் நடந்ததை கூறியதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பரத்ராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த கும்பகோணம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், பரத்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்

மாணவன் பேட்டி

மருத்துவமனையில் பரத்ராஜ் கூறும்போது, “ நேற்று முன்தினம் இரவு Ôஸ்டடிÕ நேரத்தில் ஆசிரியர்களிடம் சிறுநீர் கழிக்க செல்ல அனுமதி கேட்டேன். அனுமதி மறுத்து, அந்த சிறுநீரை நீயே பிடித்து குடி என முதுகு, கை, தொடைகளில் கம்பால் சரமாரியாக  3 ஆசிரியர்கள் அடித்தனர். அடி தாங்க முடியாமல் அழுதேன். 
மேலும் அடிப்பார்கள் என்ற பயத்தில் காலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன் என்றான்.
பெரம்பலூரில் 9ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த சோலமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜா. இவரது மகன் பரத் ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இன்று பரத் ராஜ் செய்த தவறு ஒன்றிற்காக அவனது விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பிய பரத் ராஜ், சொந்த ஊர் திரும்பி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். தற்போது சிறுவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மாணவனுக்கு நேர்ந்த அவலம் - ஆசிரியர்களை திருத்துவது எப்படி?-21-07-2012

எழுத்தின் அளவு :
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது.
அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்த அதற்குள் சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுநீர் கழித்து வர அனுமதிக்குமாறு பரத்ராஜ் ஆசிரியரிடம் மீண்டும் கேட்டார். அப்போது ஆசிரியர்கள், சிறுநீரை அதே இடத்தில் கழிக்க வைத்ததுடன் அடித்து உதைத்து பரத்ராஜை சிறுநீர் குடிக்க வைத்தாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த ஆசிரியர்கள் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டது. அதேபோல், இதுமாதிரி மனித தன்மையற்று நடந்துகொள்ளும் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்து, அவர்களின் கல்வித் தகுதிகளையும் செல்லாததாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், தரமான கல்வித்திட்டமே, தரமான ஆசிரியர்களை உருவாக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்

Friday, July 20, 2012

PARALLEL ENGLISH MEDIUM SCHOOLS LIST ENCLOSED IN 1ST STD

PROCEEDINGS FOR DEPLOYMENT www.testfnagai.blogspot.in

942 இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு கலந்தாய்வு-21-07-2012


சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்த 942 பேர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, இன்று மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 2009௰, 2010௧1ம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட, 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன.
இதில், 325 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டன. மீதியுள்ள, 942 பணியிடங்களை நிரப்புவதற்கு முன், அரசு நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பல்வேறு சங்க பிரதிநிதிகள், தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைக்கு, அரசின் அனுமதி பெற்று, தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க, இயக்குனர் உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று நடக்கிறது. பதவி உயர்வு செய்யப்படுபவர் போக, மீதி இடங்கள் இருந்தால், நேரடி நியமனம் மூலம் அவை நிரப்பப்படும் என கூறப்படுகிறது.

ATTENDANCE GOES DOWN FOR UPPER PRIMARY GIRLS

இடைநிலை கல்வியில் மாணவிகள் வருகை குறைவு-19-07-2012

காரைக்குடி: அரசுப் பள்ளிகளில் ஆரம்ப நிலையில் மாணவிகள் வருகை அதிகமாகவும், இடைநிலையில் குறைவாகவும் இருக்கிறது என, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சுரேஷ் கூறினார்.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, சென்னை ஐ.ஐ.டி., கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலையில் இருந்து நிபுணர் குழுக்களை, மத்திய அரசு நியமித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., சார்பில் பேராசிரியர்கள் சுரேஷ், மிலிந்த் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று, காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது: நாடு முழுவதும் 48 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளில், கற்றல் முறை சிறப்பாக உள்ளது. தற்போது, ஆசிரியர்- மாணவர் இடைவெளி குறைந்து வருகிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் முன்பு, குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்தனர்; தற்போது குறைந்துள்ளனது.
ஆங்கில, கணித அறிவு குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்க பரிந்துரை செய்வோம். பள்ளிகளில் ஜாதி வேறுபாடுகளை களைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில், பள்ளிகள் பராமரிப்புக்கு, இந்த ஆண்டு, ஒரு கோடி 78 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

Thursday, July 19, 2012

25% PLACEMENT BY RTE NOT SUCCESS-DINAMANI


 உரிமையல்ல கடமை!



அனைவருக்கும் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகத் தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் செய்வது ஒருபுறம் இருக்க, பெங்களூரில் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு பள்ளி, 25% ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவ மாணவியரின் தலைமுடியை வெட்டித் தனிமைப்படுத்திக் காட்ட முற்பட்டிருக்கிறது.
 அதுமட்டுமல்ல, ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்தக் குழந்தைகள் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனிமைப்படுத்தி கடைசி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் கூட்டத்துக்கு இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அழைக்கப்படவே இல்லை. காலை வழிபாட்டிலும் இக்குழந்தைகள் தனிக்குழுவாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
 ஜாதியின் பெயரால் நடந்தால் மட்டும்தான் தீண்டாமையா என்ன? பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் விலக்கி வைக்கப்படுவதும் தீண்டாமை அல்லவா?
 அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டாலும், ஒரு குழந்தையின் வசிப்பிடத்திலிருந்து 4 அல்லது 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பள்ளி இருந்தால் மட்டுமே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிப்பது என்பது சாத்தியம். ஆனால், அத்தகைய உள்கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை. அரசுப் பள்ளிகள் மட்டுமே இந்தப் பணியைச் செய்துவிட முடியாது. தனியார் பள்ளிகளையும் இந்த தேசிய இலக்கிற்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில்தான், தனியார் பள்ளிகள் 25% இடஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்தது.
 பெரும்பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் ஏழை மாணவர்கள் படித்தால், பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க மாட்டார்கள், தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்பதால் இதைத் தவிர்க்க முயன்று வருகின்றனர். அரசு உயர் அதிகாரிகளும், பெரும் பணக்காரர்களும் கௌரவமான பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதை விரும்புவதால் அங்கே சமுதாய அந்தஸ்து குறைந்தவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்ப மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏழை மாணவர்கள் வரத் தயங்குவார்கள் என்று முதலைக்கண்ணீர் வடித்தார்கள்! ஏழைக் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் என்று பயமுறுத்தினார்கள். மொத்தத்தில், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தியே தீரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.
 தாங்கள் கல்விச் சேவை செய்வதாகவும், தங்களைக் கல்வித் தந்தை என்று சொல்லிக்கொள்ளவும் முற்படும் தனியார் பள்ளித் தாளாளர்கள், ஏழை-எளிய மக்களின் குடிசைகளுக்கு வலியப்போய்க் குழந்தைகளை அழைத்துவந்து தங்கள் பள்ளியில் இலவசமாகப் படிக்க வைத்து சமுதாயத் தொண்டாற்ற வேண்டாம். குறைந்தபட்சம், எல்லோருக்கும் கல்வித் திட்டத்தின் நோக்கத்தைக்கூடவா நிறைவேற்ற ஒத்துழைக்கக் கூடாது?
 கோவையில் ஒரு தனியார் பள்ளியில், 5-ஆம் வகுப்பு மாணவி பள்ளி விதிமுறைப்படி கூந்தல் முடிக்கவில்லை என்பதற்காக, அவரது கூந்தலை ஆசிரியை வெட்டினார். 2008-இல் நடந்த சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. முடியை வெட்டிய அந்த ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை!
 அந்த ஆசிரியை நடந்துகொண்டவிதம் முரட்டுத்தனமானதாக இருக்கலாம். அது வெறும் பள்ளியின் ஒழுக்கம் சார்ந்த விவகாரம் என்றாலும் நிச்சயமாகத் தவறுதான். இருப்பினும் அது ஒரு சிறுமியின் மனதில் தான் அற்ப விஷயத்துக்காக தண்டிக்கப்பட்டதாக நினைக்கத் தூண்டுமே தவிர, தான் ஒதுக்கப்பட்டதாகவோ, தனிமைப்படுத்தப்பட்டதாகவோ, ஒருவகையான தீண்டாமைக்கு ஆட்பட்டதாகவோ ஒரு அழியாத வடுவை, இந்தத் தனியார் பள்ளிகள் உருவாக்குவதைப் போல உருவாக்கிடாது.
 எல்லோருக்கும் கல்வித் திட்டத்தை நாம் இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். முதலில், இந்தியனாகப் பிறக்கும் குழந்தை, ஏழையோ பணக்காரனோ, எந்த ஜாதியோ எந்த மதமோ, எப்படியிருந்தாலும் தரமான கல்வி வழங்கப்பட்டு கல்வி அந்தக் குழந்தையின் பிறப்புரிமையாவது என்பது. இரண்டாவது, இதன் மூலம் சமதர்ம, சமத்துவ சமுதாயம் அமைக்கப்படுவது என்பது. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை ஜாதிய ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, சமுதாய ஏற்றத்தாழ்வும்கூட!
 ஒருபுறம் ஆங்கிலவழிக் கல்வி கற்கும் பணக்காரக் குழந்தைகள் அவர்களுக்குப் பசி என்று சொன்னால் பிட்சாவும் பர்கரும்; தாகம் என்று சொன்னால் கோலாவும் பெப்சியும்; இனிப்பு என்று சொன்னால் ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் என்கிற நிலைமை. இன்னொருபுறம், அடுத்த வேளை கஞ்சிக்குப் பெற்றோர் கொண்டுவரும் கூலிப்பணமோ, ரேஷன் கடையிலிருந்து பெறப்படும் நாற்றம்பிடித்த அரிசியோ கோதுமையோ என்கிற நிலையில் இருக்கும் குழந்தைகள்.
 அரை நூற்றாண்டுக்கு முன்னால் இதை தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்த அன்றைய முதல்வர் காமராஜர் கட்டாயக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று ஜாதி மத வித்தியாசத்தையும், ஏழை பணக்கார இடைவெளியையும் உடைத்தெறிய அவர் வகுத்த திட்டம் அது. அரசு ஊழியர்களாக மாறிய ஆசிரியர்கள் தங்கள் கடமையைவிட உரிமைதான் பெரிது என்று நினைத்துச் செயல்பட்டதும், தனியார் பள்ளிகள் புற்றீசல்களாகக் கிளம்ப அரசு அனுமதித்ததும் காமராஜரின் கனவைத் தகர்ந்தெறிந்துவிட்டன.
 ஏழைகளுக்கு இடமில்லாத கல்விச் சாலைகளை மூடும் துணிவு அரசுக்கு வேண்டும். அப்படிப்பட்ட கல்விச்சாலைகளில் பாடம் நடத்த மாட்டோம் என்று கூறும் மனது  ஆசிரியர்களுக்கு வேண்டும். ஏழைக் குழந்தைகளும் எங்கள் குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று சொல்லும் பெருந்தன்மை பணக்காரப் பெற்றோர்களுக்கு வேண்டும்.
 அந்த நாளும் வந்திடாதோ?

Wednesday, July 18, 2012

G.O.172.TRB BT POSTS IN MIDDLE SCHOOL CONVERTED TO PROMOTION POSTS

கோரிக்கை வைத்து பெற்றுத் தந்த  தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   பொறுப்பாளர்களுக்கு நன்றி 

Monday, July 16, 2012

HEALTH INSURANCE G.O 243 RS 150 PER EMPLOYEE


விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XRjFfNFM2eDE3Nkk

Saturday, July 14, 2012

TET EXAM VERY TOUGH AND WILL PRODUCE GOOD TEACHERS?


 டி.இ.டி., தேர்வு, எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக இருந்ததாகவும், முதல் தாள் தேர்வுக்கான கேள்விகள், பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றும், கணிதக் கேள்விகள், விடை அளிக்க முடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகவும், தேர்வர் பலரும் புலம்பினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக நேற்று, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தன. 1,027 மையங்களில் நடந்த தேர்வில், 6.56 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள், தேர்வில் பங்கேற்றனர். இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நேற்று விடுமுறை விடப்பட்டது. காலை 10.30 மணி முதல், 12.00 மணி வரை, முதல் தாள் தேர்வு நடந்தது. சென்னையில், 78 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வை முடித்து வெளியே வந்த தேர்வர்களிடம், "தேர்வு எப்படி இருந்தது?' என கேட்டது தான் தாமதம்; ஆளாளுக்கு புலம்பித் தள்ளினர். ஒருவர் கூட, "தேர்வு எளிதாக இருந்தது' எனக் கூறவில்லை. "கேள்விகளைப் படித்தபோது, தலை சுற்றியது. பாடப் பகுதிகளுக்கும், கேட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமே இல்லை. கணிதத்திற்கு 30 கேள்விகள்; 30 மதிப்பெண்கள். இதற்கு, ஒவ்வொரு கேள்விக்கும், உடனடியாக விடையை அளிக்க முடியவில்லை. கணக்கு போட்டுப் பார்த்து, விடை அளிப்பதற்கு நேரம் போதவில்லை. இப்படி கேள்வி கேட்டால், ஒன்றரை மணி நேரத்தில் எப்படி தேர்வெழுத முடியும்?' என்று பலரும் தெரிவித்தனர்.

எதற்கு இந்த தேர்வு? "ஏற்கனவே இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்து முடித்து, அரசு சான்றிதழும் பெற்றிருக்கிறோம். அதன் பிறகும், எதற்கு இந்த தேர்வு? ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும், தலா, 500 ரூபாயை, தேர்வுக் கட்டணமாக வசூலித்திருக்கின்றனர். இந்த வகையில், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது' என, சிலர் கூறினர். சென்னை அல்லாத பிற நகரங்களில் தேர்வெழுதியவர்களும், "கணிதம் கசக்க வைத்தது; நேரம் போதவில்லை' என்ற கருத்தையும், ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இல்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர். மதுரை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், வெகு சிலரே, தேர்வு எளிதாக இருந்தது எனக் கூறினர். ஆனால் அவர்களும், கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மொத்தத்தில், 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெறலாம் என்று எதிர்பார்ப்பதாக, தேர்வு எழுதியவர்கள் கருதுகின்றனர். தேர்வைப் புறக்கணித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், இன்று தெரியும்.

நியாயமாக நடக்கிறது: அமைச்சர் திருவல்லிக்கேணி, என்.கே.டி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, துறை முதன்மை செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர், நிருபர்களிடம் கூறும் போது, ""முதல்வர் உத்தரவுப்படி, டி.இ.டி., தேர்வு நியாயமாக நடக்கிறது. 6.56 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்,'' என்றார். ""காலையில் நடந்த தேர்வு கடினமாக இருந்தது என்றும், பாடத் திட்டத்தின்படி கேள்விகள் கேட்கவில்லை என்றும் தேர்வர் புகார் கூறியுள்ளனரே?'' என்று கேட்டதற்கு, ""தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்,'' என, அமைச்சர் சிவபதி பதிலளித்தார்.

30 மதிப்பெண்கள் "அவுட்!' கணிதப் பாடத்திற்கு, 30 மதிப்பெண்களுக்கு, 30 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும், படிப்படியாக பல நிலைகளில், ஒரு பக்கம் அளவிற்கு போட்டுப் பார்த்த பிறகே, விடையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இருந்ததாக, சென்னையில் தேர்வெழுதிய தேர்வர் தெரிவித்தனர். ஒரு கேள்விக்கு விடை அளிக்க, எவ்வளவு நேரமாகும் என்பதை, டி.ஆர்.பி., கணக்கிடாமல், எப்படி கேட்டனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தேர்வு, ஆசிரியர் மத்தியிலும், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியிலும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக்கு 90 நிமிடம் தந்த முரண்பாடு ஏன்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான, 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, மே 27ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு, காலை 10 முதல், பகல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் நடந்தது. மொத்த மதிப்பெண்கள், 150. இந்த ஆசிரியருக்கான அடிப்படைச் சம்பளம் அதிகம்; அத்துடன், இவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கான தேர்வும் கடினமாக இல்லை; நேரமும் குறையவில்லை.

ஏன் இந்த முரண்பாடு? ஆனால், நேற்று காலையில் நடந்த, டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கானது. பிற்பகலில் நடந்த இரண்டாம் தாள் தேர்வு, பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. இந்த இரு தேர்வுகளுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வைப்போல், அதே, 150 மதிப்பெண்கள் தான். ஆனால், நேரம் மட்டும், 50 சதவீதம் குறைத்து வெறும், ஒன்றரை மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டது. இது எந்த வகையில் நியாயம் என, நேற்று பல தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். நேற்று இரு தேர்வுகளையும் எழுதிய தேர்வர்களுக்கு, கேள்வித்தாள் கடினம் ஒரு பக்கம் என்றாலும், மிக முக்கியமாக, நேரமின்மை தான் பெரும் பிரச்னையாக இருந்தது.

தேர்வு வாரியம் பதில்: தேர்வு நேரத்தில் உள்ள முரண்பாடு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறியதாவது: இந்த கால நேரத்தை, நாங்கள் நிர்ணயிக்கவில்லை. நடைமுறை ரீதியாக, தேர்வர்களுக்கு உள்ள இந்த பிரச்னையை உணர்கிறோம். அவர்களது கேள்வி நியாயமானது தான். குறைந்தபட்சம், இரண்டு மணி நேரமாவது வழங்கியிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ.,) ஆசிரியர் தேர்வுக்கான விதிமுறைகளில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, மூன்று மணி நேரம் வழங்க வேண்டும் என உள்ளது. அந்த விதிமுறையைப் பின்பற்றி தான், டி.இ.டி., தேர்வர்களுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கினோம். இதில், எங்களை குறை கூற முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் கிடைத்த சில அனுபவங்களைக் கொண்டு, குறைகளை, அடுத்த தேர்வில் களைவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த நேர பிரச்னையும் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

டி.இ.டி., தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி.,-14-07-2012

எழுத்தின் அளவு :


டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி..டி., (ஆசிரியர் தகுதித் தேர்வுமுதல் மற்றும் இரண்டாம்தாள் தேர்வுநேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர்,இத்தேர்வை எழுதினர்இரு தாள் தேர்வுகளுமே கடினமாகஇருந்ததாகவும்நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்ததுஎனவும்தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.
டி..டி., தேர்வு கேள்வித்தாள்தமிழகம் மட்டுமல்லாமல்,ஏற்கனவே தேர்வு நடந்த கேரளாகர்நாடகாஆந்திராஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும்கடினமாகவேஅமைந்துள்ளது.சி.பி.எஸ்.., தேசிய அளவில் நடத்தியதகுதித் தேர்வில்தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில்,டி.ஆர்.பி., நடத்திய தேர்வுபெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
"திறமையானவர் கிடைப்பார்'': இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன. டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.
"கீ-ஆன்சர்'' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்'' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்'' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர்டி.ஆர்.பி., இப்படிதெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும்இரண்டாம்தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்'ஆனதாகஅதிகாரி ஒருவர்தெரிவித்தார்.அதன்படிமுதல் தாள் தேர்வில், 17,287 பேரும்இரண்டாம் தாள் தேர்வில், 28,054பேரும், "ஆப்சென்ட்'ஆகி உள்ளனர்.
 தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு டிஇடி இன்று நடைபெற்றது. இன்று காலை பட்டயப் படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. 150 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வினை எழுத ஒன்றரை மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் பலரும், வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வெழுதிய போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் வருந்தினர்.
150 கேள்விகளுக்கும் விடைகளை செயல்முறையில் கண்டுபிடித்து பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்ததால், ஒன்றரை மணி நேரம் என்பது மிகவும் குறைவாகும். பட்டயப் படிப்பு ஆசிரியர்களுக்கான வினாத்தாளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும் சில ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதியத்துக்கு மேல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.

OFFICIALS PLEA REJECTED IN KUMBAKONAM CASE

கும்பகோணம் பள்ளி தீ விபத்து : பள்ளி நிர்வாகிகள் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி17 பேரின் மனுக்கள் தள்ளுபடி

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், 2004ல் நடந்த, தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், விடுவிக்கக் கோரி பள்ளி நிறுவனர் பழனிச்சாமி மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட, 17 பேர் தாக்கல் செய்த மனுக்களை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

அரசு உதவி பெறும் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை 16ல் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியாகினர். பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட கல்வி அதிகாரி பி.பழனிச்சாமி உட்பட 24 பேர் மீது, 2005ல், தஞ்சாவூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்பீல்: கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, கும்பகோணம் தாசில்தார் பரமசிவம், துவக்கக் கல்வி அதிகாரி கண்ணன் மீதான வழக்கை, அரசே வாபஸ் பெற்றது. தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்யவில்லை. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, உதவி துவக்கக் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை, கீழ் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பி.பழனிச்சாமி, நாராயணசாமி, உதவி துவக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மாதவன், சார்ட்டர்டு இன்ஜினியர் ஜெயச்சந்திரன், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, கல்வி அலுவலக அலுவலர்கள் சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ், உதவி துவக்கக் கல்வி அலுவலர் (நர்சரி பள்ளிகள்) பாலசுப்பிரமணியன், ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி, நகர் திட்டக்குழும அதிகாரி முருகன் ஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, தாக்கல் செய்த மனுவை, தஞ்சாவூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதை ரத்து செய்து உத்தரவிடக்கோரி 17 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர். பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில், இன்பராஜ், தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கவும், பள்ளி நிர்வாகிகளின் மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வழக்கறிஞர் பிரபா, இன்பராஜ் சார்பில் வழக்கறிஞர் சுபாஷ்பாபு ஆஜராகினர். நீதிபதி, ""மனுதாரர்களை, தற்போது விடுவிக்க போதிய முகாந்திரம் இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தது தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய 17 பேரின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ம் ஆண்டு தீ விபத்து நேரிட்டது. இதில் 94 குழந்தைகள் இறந்தனர். இது தொடர்பாகப் பள்ளித் தாளாளர் பழனிச்சாமி, முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், வட்டாட்சியர் உள்பட 24 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் வட்டாட்சியர் பரமசிவம், முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பள்ளித் தாளாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்களையும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை, கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 17 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே வழக்கில் இருந்து மனுதாரர்களை விடுவிக்க இயலாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.

Friday, July 13, 2012

KALVI VALARCHI NAAL SHOULD BE CELEBRATED ON JULY 15 ONLY

காமராஜர் பிறந்த நாள்: பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட உத்தரவு




தம்மம்பட்டி, ஜூலை 13: வருகிற ஞாயிற்றுக்கிழமை அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
ஜூலை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று அரசு விடுமுறை என்றாலும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்.
மாணவர்கள் புத்தாடை அணிந்து காமராஜர் படத்தை அலங்கரித்து விழா எடுக்க வேண்டும்.
இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.