காமராஜர் பிறந்த நாள்: பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட உத்தரவு
தம்மம்பட்டி, ஜூலை 13: வருகிற ஞாயிற்றுக்கிழமை அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
ஜூலை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று அரசு விடுமுறை என்றாலும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்.
மாணவர்கள் புத்தாடை அணிந்து காமராஜர் படத்தை அலங்கரித்து விழா எடுக்க வேண்டும்.
இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment