டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு விடைகள் வெளியீடு-24-07-2012
சென்னை: டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., நேற்றிரவு வெளியிட்டது. முதல் தாள் தேர்வுக்கான விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.
டி.இ.டி., தேர்வு, 12ம் தேதி நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 5 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., நேற்றிரவு, தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. தேர்வர்கள், விடைகளைப் பார்த்து, அதில் ஆட்சேபனை இருந்தால், 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்பின் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள், ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
No comments:
Post a Comment