SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, April 29, 2013

பள்ளி பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய நிலுவைகளை வழங்கக் கோரிக்கை


DINAMANI NEWS ABOUT KOOTTANI REQUEST FOR PART TIME SALARY PENDING


பள்ளி பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய நிலுவைகளை வழங்கக் கோரிக்கை

First Published : 29 April 2013 04:10 AM IST
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்குள்பட்ட பள்ளிகளின் பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
நாகை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் 26 தொடக்கப் பள்ளிகளும்,  9 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 16 பள்ளிகளில் மட்டும் பகுதி நேர பள்ளி கூட்டுநர்கள் பணியில் உள்ளனர். மீதமுள்ள 19 பள்ளிகளில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியில் உள்ள 16 பணியாளர்களுக்கும் மாதம் ரூ. 150 வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியமும் கடந்த அக்டோபர் மாதம் முதல் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தப் போக்கு, மாணவர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரை பல முறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை பள்ளி கூட்டுநர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு ஊராட்சி ஒன்றிய பள்ளி கூட்டுநர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவும், பிற ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்படுவதைப் போல கூட்டுநர்களுக்கான மாத ஊதியத்தை ரூ. 335-ஆக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Sunday, April 28, 2013

G.O.69 FOR THE TEACHERS WHO WERE IN SERVICE FROM 01.06.1988 TO 31.12.1995





சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு


சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசுஏப்ரல் 27,2013,10:48 IST

எழுத்தின் அளவு :
அன்னூர்: சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.
சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது. காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான விறகு ஆகியவற்றுக்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 69.50 காசுகளும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகங்களுக்கும் ஒரு புதிய உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சத்துணவுக்கு, ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவர்களுக்கு, பருப்புடன் சாதம் வழங்கும் நாளில் ஒரு மாணவனுக்கு ரூ.1.30 எனவும், பலவகை சாதம் வழங்கும் நாட்களில் ஒரு மாணவனுக்கு ரூ.1.70 காசுகள் எனவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவனுக்கு பருப்புடன் சாதம் வழங்கும் நாளில், ஒரு மாணவனுக்கு ரூ.1.40 ஆகவும், பல வகை சாதம் வழங்கும் நாட்களில், ரூ.1.80 காசுகள் ஆகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை, விறகு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் அரசு மானியத்தொகையை உயர்த்தியுள்ளது. எனினும், அரசு உயர்த்திய இத்தொகை போதுமானதல்ல என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு மாணவனுக்கு நான்கு ரூபாய் ஒதுக்கினால்தான், சிரமமில்லாமல் சத்துணவு வழங்க முடியும் என இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

கருத்துகள்


நெல்லை: வரும் கல்வி ஆண்டில் சுமார் 1,400 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வெளி மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறுகின்றன. மே மாத கோடை விடுமுறைக்கு பின்னர் 201314ம் கல்வி ஆண்டுக்கான நடைமுறை தொடங்க உள்ளது. இதையொட்டி அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணியில் கல்வித்துறை இறங்கியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணி இடங்கள் பல்வேறு வழிகளில் உருவாகின்றன. குறிப்பாக பணி ஓய்வு பெறுவதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பணியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக செல்பவர்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட காலி இடங்களும் உருவாகின்றன. மேலும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 5 முதல் 9 காலி பணி இடங்கள் வரை சுமார் 800 பணி இடங்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறாக மொத்தம் 1,400 பணி இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது. 

இவை அனைத்தும் மே மாதம் முடிந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும். அதன் பிறகு கலந்தாய்வு நடத்தினால் மட்டும் தான் ஏற்கனவே இடமாறுதல்களுக்காக சொந்த மாவட்டங்களை விட்டு வெளி மாவட்டங்களில் பணி புரிபவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது என பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் வடமாவட்டங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் நிலையில் சொந்த மாவட்டங்களுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர்,எனவே இவர்களின் நலன் கருதி அனைத்து விதமான புதிய காலி பணி இடங்கள் உருவான பின்னர் அவை பற்றி விவரத்தை ஒளிவு மறைவின்றி முழுமையாக அறிவித்து ஏற்கனவே காத்திருக்கும் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து இடமாறுதல் உத்தரவு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
.

அதிகாரிகள் நெருக்கடியால் விற்பனைக்கு வரும் தனியார் பள்ளிகள்


அதிகாரிகள் நெருக்கடியால் விற்பனைக்கு வரும் தனியார் பள்ளிகள்

கருத்துகள்


தமிழகத்தில் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வியில் தனியாரை புகுத்துவதுதான் ஒரே தீர்வு என கருதப்பட்டது. இதையடுத்து எம்ஜிஆர் ஆட்சியின்போது மெல்லமெல்ல இத்துறையில் தனியார் காலடி எடுத்து வைக்க தொடங்கினர். மெட்ரிக் பள்ளிகளுக்கென, கடந்த 2001ம் ஆண்டில் தனி இயக்குநரகம் தொடங்கப்பட்டது. அதன்பின், பட்டிதொட்டி எங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் புற்றீசல்களாய் முளைத்தன.

கடந்த 2001 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளின் வரவும், வளர்ச்சியும் அபரிமிதமாக இருந்தன. அரசுப்பள்ளிகளில் நிலவும் அடிப்படை வசதி குறைவையும், மக்களின் ஆங்கில மோகத்தையும் தனியார் பள்ளிகள் நன்றாகவே அறுவடை செய்து வருகின்றன.

தனியார் பள்ளிகளின் இந்த அசுர வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் கண்டு வருகிறது.  சாதாரண, நடுத்தர அளவிலான பள்ளிகளை இனியும் தொடர்ந்து நடத்தி வருவது கல்லாவை ஒருபோதும் நிரப்பாது என்ற முடிவுக்கு பல தனியார் பள்ளி தாளாளர்கள் வந்துள்ளனர். காரணம், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்.

இந்த சட்டம் தமிழகத்தில் 2011ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வகுத்துள்ள கடுமையான விதிமுறைகள் ஒருபுறம், அதிகாரிகள், அரசியல் புள்ளிகளின் லஞ்ச வேட்டை ஒருபுறம் என இருபக்க நெருக்கடிகளால் தனியார் பள்ளிகள் கடுமையாக தத்தளித்து வருகின்றன.
ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை, 30 குழந்தைக்கு ஒரு ஆசிரியர், ஆர்சிசி கட்டடம், ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய விதிகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்கிறது அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம். இந்த சட்டத்தை சுருக்கமாக, ஆர்டிஇ எனலாம். 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைக்கு இலவச கட்டாய கல்வியை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

தனியார் பள்ளிகள் ஏழை குழந்தைக்கு அளிக்கும் 25 சதவீத ஒதுக்கீடுக்கு உண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது ஆர்டிஇ சட்டத்தின் முக்கிய அம்சம். அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 2.50 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது. 

ஆனால், அதற்கான செலவு கட்டணத்தை இன்னும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை என சீறுகின்றன தனியார் பள்ளிகள்.ஆர்டிஇ சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்துவதாக சொல்லப்பட்டாலும், இது முற்றிலும் ஹம்பக் ஆன சட்டம் என்கிறார், தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார். 

ÔÔபள்ளிகளின் அமைவிடத்தை பொறுத்து அவற்றுக்கு குறைந்தபட்ச நிலப்பரப்பளவை ஆர்டிஇ சட்டம் வரையறுத்துள்ளது. அதாவது, கிராம ஊராட்சிகளில் பள்ளிகள் நடத்த குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் பள்ளி தொடங்க 1 ஏக்கர், மாவட்ட தலைநகராக இருந்தால் 10 கிரவுண்டு, நகராட்சிகளாக இருந்தால் 8 கிரவுண்டு, மாநகராட்சியாக இருந்தால் 6 கிரவுண்டு நிலப்பரப்பளவு இருக்க வேண்டும். இந்த விதி அரசுப்பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே உரியது என்பதுபோல் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் 12 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்கிறார் நந்தகுமார்.இது ஒருபுறம் இருக்க, ஆர்டிஇ சட்டத்தைக் காட்டி அதிகாரிகளும், அரசியல் புள்ளிகளும் தனியார் பள்ளிகளிடம் ஏகத்துக்கும் பணம் கறப்பதாகவும் கூறுகிறார் நந்தகுமார். அவர் மேலும் கூறுகையில், ÔÔதனியார் பள்ளிகள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது தீயணைப்பு, சுகாதாரம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற ஒவ்வொரு துறை அதிகாரிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும். இதுதவிர உள்ளூர் திட்டக்குழுமம், வட்டார போக்குவரத்து அதிகாரி, நூலகத்துறை அதிகாரி, இஎஸ்ஐ அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும். இத்தனையும் சமாளித்து, கடும் போட்டிக்கு மத்தியில் பள்ளியை லாபகரமாக நடத்துவது என்பது மலையை முடியால் கட்டி இழுப்பதற்கு சமம்,ÕÕ என்கிறார்.
ஆர்டிஇ சட்டம்அதிகாரிகள் நெருக்கடி காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 110 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் முழு  செட்அப்களுடன் விற்பனை செய்ய முன்வந்துள்ளன.

செஞ்சி அருகே ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 17 ஏக்கரில் அமைந்துள்ளது. இத்துடன் பி.எட்., கல்லூரியும் உள்ளது. அதிகாரிகளின் பிரஷ்ஷர் தாளாமல், இந்த பள்ளி, கல்லூரியை வெறும் ரூ.17 கோடிக்கு விற்க தயாராக இருப்பதாக அப்பள்ளியின் தாளாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதேபோல், ஈரோடு அருகே 1000 மாணவர்களுடன் செயல்படும் மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி, மெடிக்கல் கல்லூரி, நர்சிங் கல்லூரிகளுடன் இயங்கி வரும் கல்வி நிலையமும் ரூ.650 கோடிக்கு ஒரே பேக்கேஜ் ஆக விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.

இப்போதைய நிலையில், திருவண்ணாமலை5, வேலூர்8, திருவள்ளூர்10, தர்மபுரி4, கிருஷ்ணகிரி5, மதுரை8, ஈரோடு6, ஊட்டி4, நெல்லை9, கன்னியாகுமரி7, தேனி4, திண்டுக்கல்3, கரூர்2, கள்ளக்குறிச்சி1, சேலம்2 என மொத்தம் 78 பள்ளிகள் விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் நந்தகுமார்.

ஆர்டிஇ சட்டத்தில் சாத்தியமில்லாத விதிகளை நீக்குவதுடன், அதிகாரிகள்அமைச்சர்களின் வசூல் வேட்டையை அடியோடு நிறுத்தினால் மட்டுமே, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் மீண்டும் புத்துணர்வுடன் செயல்பட வழிவகுக்கும் என்பதே தனியார் கல்வியாளர்களின் கருத்து.

பள்ளிக்கல்வித்துறை சொல்வது என்ன?

தமிழக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகளுக்கு குறைந்தபட்ச இடப்பரப்பளவு குறித்த விதியை தளர்த்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆனால், பள்ளிகளில் சுகாதாரம், குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விதிகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. சிறு அளவிலான பல பள்ளிகள், போட்டி சூழலில் நடத்த முடியாமல் கல்விப்பணியில் இருந்து ஒதுங்குகின்றன. அதற்காக ஆர்டிஇ சட்டத்தின் மீதும், அதிகாரிகள் மீதும் பழி போடுவது என்ன நியாயம்?,ÕÕ என்றார்
.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு


கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடுஏப்ரல் 27,2013,10:44 IST

எழுத்தின் அளவு :
சென்னை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்களின், கல்வி நிலையை மேம்படுத்த, மிகப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 289 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 34,749 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012-13ம் ஆண்டில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 53 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
2013-14ம் ஆண்டு, இப்பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கும் தொல்லை, எதிலும் தொல்லை... ஓர் அரசுப் பள்ளியின் அவலம்


எங்கும் தொல்லை, எதிலும் தொல்லை... ஓர் அரசுப் பள்ளியின் அவலம்ஏப்ரல் 27,2013,10:47 IST


பேரூர்: பகலில் "பார் பார் பட்டம் பார் என, மாணவர்களுக்கு கற்பிக்க பயன்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் "சூப்பர் பார்" ஆக பயன்படுத்தப்படுகிறது.
தொண்டாமுத்தூர் ஒன்றியம் பச்சாபாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். சிறுவாணி மெயின்ரோடு, பச்சாபாளையம் பிரிவிலிருந்து 1 கி.மீ தொலைவில், ரோட்டோரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இரவு நேரங்களில், இப்பள்ளி கட்டடத்தின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழையும் சமூகவிரோதிகள் மதுஅருந்துவது, சீட்டாடுவது உள்ளிட்ட சமூகவிரோத காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் ரோந்து வரும்போது, பள்ளியின் தெற்கு பகுதி வழியே உள்ள பள்ளத்தில் குதித்து அங்கிருந்து தப்பியோடி விடுகின்றனர். இதுதவிர, பள்ளி எதிரே சரியான பராமரிப்பற்ற நிலையிலுள்ள பொதுகழிப்பிடம் மற்றும் குப்பை குவியல்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பள்ளி எதிரே குவியும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் எழும் புகையால், மாணவர்களும் அவ்வழியே செல்வோரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வாரநாட்கள் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை வரும்போது, பள்ளி மைதானம், சாக்கடை வடிகால் பகுதிகளின் ஓரங்களில் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. என்ன செய்வதென தெரியாமல் பள்ளி நிர்வாகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாடம் படிக்கும் பள்ளிக்குள் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க, போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Saturday, April 27, 2013

SWEEPER SALARY PENDING FOR 18 MONTHS


OUR DISTRICT SECRETARY PETITION TO CM CELL REGARDING SWEEPER SALARY


LAST DATE MAY 10 FOR AEEO WILLING TO STEP DOWN AS MIDDLE HM



TO DOWNLOAD THE FORMAT CLICK HERE 

கல்வியை மத்திய அரசு சீரழிக்கிறது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு


கல்வியை மத்திய அரசு சீரழிக்கிறது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

First Published : 27 April 2013 04:08 AM IST
கல்வியை மத்திய அரசு சீரழித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சட்டப் பேரவையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறையின் மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:
விஜயதாரணி (காங்கிரஸ்): காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை கொண்டுவந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கி செலவிட்டு வருகிறது.
சாமி (அ.தி.மு.க.): அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசும் நிதி தருகிறது.
கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்): மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று நாட்டின் பல பகுதிகளில் இருந்து கோரப்படுகிறது. ஆனால் 1.5 விழுக்காடு நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்குகிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி: மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து வரி வருவாயாக ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கிறது. அதில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கை கூட ஒழுங்காக கொடுக்காமல் இருக்கிறது. அதனை பெற்றுத்தர காங்கிரஸ் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவச கட்டாய கல்வி: தனியார் பள்ளிகள் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்


விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்

First Published : 27 April 2013 04:49 AM IST
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவினருக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற,  மாணவர் சேர்க்கை குறித்த தனியார் பள்ளி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது :
6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி பெறும் உரிமையும், வேறு பள்ளிக்கு மாற்றம் கோரும் உரிமையும் உண்டு. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு எந்தக் காரணத்துக்காகவும் கல்வியை மறுக்கக் கூடாது. சேர்க்கைக் காலம் முடிந்திருந்தாலும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
நாகை மாவட்டத்தில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளையும் 100 சதவீதம் பள்ளியில் சேர்க்க வேண்டும். நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத சேர்க்கையை அனைத்துத் தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
நிகழ் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவினருக்கான 25 சதவீ சேர்க்கையை அனைத்துத் தனியார் பள்ளிகளும் முழுமையாக உறுதி செய்து, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட செயலாக்கத்தில் நாகை மாவட்டம் முதன்மைப் பெற தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் லலிதா, மாவட்டக் கல்வி அலுவலர் வீர. வெள்ளைச்சாமி, உதவிக் கல்வி அலுவலர்கள் வி. சிவகுமார், ராஜமாணிக்கம் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

balanagai sent you an invitation

 
Top corners image
     
 
   
 
 
 

balanagai has invited you to join Twitter!

 
 
  Accept invitation  
 
     
 

Twitter helps you stay connected with what's happening right now and with the people and organizations you care about.

 

Friday, April 26, 2013

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்


அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்ஏப்ரல் 26,2013,10:17 IST


இலவச கணித உபகரண பெட்டி வழங்கும் திட்டம், கடந்த கல்வி ஆண்டில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1 முதல் பிளஸ் 2 வரை, புத்தகப் பை; 1 முதல் 5ம் வகுப்பு வரை, கலர் பென்சில்கள்; 6 முதல் 10ம் வகுப்பு வரை, அட்லஸ் வழங்குவது ஆகிய திட்டங்களும், புதிதாக அறிவிக்கப்பட்டன.சென்னை: வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்த நான்கு திட்டங்களுக்காக, கடந்த நிதி ஆண்டில், 136 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவழித்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மேற்கண்ட இலவச திட்டங்களை செயல்படுத்த, 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
டெண்டர் விண்ணப்பங்கள், நேற்று முதல், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. "மே, 23ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள், மே, 24ம் தேதி, பிற்பகல், 2:00 மணி வரை பெறப்படும்&' என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும், 3.50 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.

Thursday, April 25, 2013

மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

First Published : 25 April 2013 12:29 PM IST
அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் தமிழ் ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படிப்பை முடித்து விட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல்  மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் சரியான  ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததே ஆகும். எனவே இந்த நிலை மாறினால் மட்டுமே மாணவர்களின் கல்விதரம் உயர்த்த முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சர்வே குறிப்பில் தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க தெரியாத மாணவர்கள் பலர் உள்ளனர்.
எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படவில்லையெனில் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை கூறியுள்ளது.

அண்ணாமலை பல்கலை. புதிய பதிவாளர் நியமனம்

அண்ணாமலைநகர்: அண்ணாமலை பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த மீனாட்சிசுந்தரத்துக்கு 58 வயதானதால், சமீபத்தில் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். புதிய பதிவாளர் நியமிக்கப்படா மல் காலியாக இருந்தது.இந்நிலையில், புதிய பதிவாளராக பேராசிரியர் பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவராக பஞ்சநதம் பணியாற்றி வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலை.யின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. நிர்வாக சீர்கேட்டால் பல்கலைக்கழகம் தரம் குறைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியது. ஊழியர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்து நடவடிக்கையை எடுத்து ருகிறது.

Tuesday, April 23, 2013

balashanmugam krishnamurthy's invitation is awaiting your response

 
 
 
 
 
balashanmugam krishnamurthy would like to connect on LinkedIn. How would you like to respond?
 
 
 
balashanmugam krishnamurthy
teacher at chidambaranar middle school -orathur-nagapattinam
 
 
 
 
You are receiving Reminder emails for pending invitations. Unsubscribe.
© 2013 LinkedIn Corporation. 2029 Stierlin Ct, Mountain View, CA 94043, USA.
 
 

கோடை விடுமுறையிலும் பணிக்கு வரவேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்விதுறை அதிரடி உத்தரவு


கோடை விடுமுறையிலும் பணிக்கு வரவேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்விதுறை அதிரடி உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருப்பூர்: கோடை விடுமுறையின்போது தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முழு ஆண்டு தேர்வு முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்த பணிகளை விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியரும், ஒரு அலுவலக பணியாளரும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அலுவலக நிமித்தமாகவோ அல்லது மருத்துவ விடுப்பு எடுக்க நேரிட்டாலோ முதன்மை கல்வி அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி ஆய்வின்போதும், தொலைபேசி அழைப்பின் போதும் தலைமை ஆசிரியரோ, அலுவலக பணியாளரோ இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

6ம் வகுப்பிலேயே மாணவர்களிடம் புகை பழக்கம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்


6ம் வகுப்பிலேயே மாணவர்களிடம் புகை பழக்கம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: சென்னையில் 6ம் வகுப்பிலேயே மாணவர்களிடம¢ புகை பழக்கம் தொடங்கிவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் தடுப்பு மையம் சார்பில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடையே புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்த சர்வே ஒன்று நடத்தப்பட்டது. மொத்தம் 15,186 மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் வருமாறு:11 வயது மாணவர்களில் 5.8 சதவீதம் பேரும், 12 வயது மாணவர்களில் 3.7 சதவீதத்தினரும், 13 வயது மாணவர்களில் 2.9 சதவீதத்தினரும், 14 வயதினரில் 2.3 சதவீதத்தினரும் புகை பிடிக்கின்றனர் அல்லது புகையிலை சார்ந்த பொருட்களை வகுப்பறை, வீடு மற்றும் பொது இடங்களில் துணிச்சலாக பயன்படுத்துகின்றனர்.

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பது, கடைகளில் விற்கப்படும் புகையிலை பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு, பெற்றோர்களுக்காக கடைகளுக்கு சென்று பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் வாங்கி வருவதால் நாமும் புகை பிடித்து பார்ப்போம் என்ற உந்துதல், பள்ளியில் சக மாணவர்களோடு ஏற்படும் இறுக்கம் ஆகிய சூழ்நிலைகளால் இளம்பிராயத்தினர் புகை பிடிக்கின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் முன்பாக இயங்கும் பெட்டிக்கடைகளில் புகையிலை தயாரிப்பு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தவும், கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களிடையே புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Monday, April 22, 2013

G.O.127 TO REDUCE PF INTEREST TO 8.7



NEW SOFTWARE IN CORPORATION SCHOOLS TO MONITOR STUDENTS BY PARENTS


மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்புஏப்ரல் 21,2013,10:11 IST

எழுத்தின் அளவு :
கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் முதன் முறையாக, கோவை மாநகராட்சியில் வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு, கல்வித்திறன் போன்ற விபரங்கள் பெற்றோருக்கு "எஸ்.எம்.எஸ்" மற்றும் "இ-மெயில்" மூலம் அனுப்பப்படுகிறது.
இதனால், பள்ளி நிர்வாகம், மாணவர் கண்காணிப்பு எளிதாகிறது. ஆனால், அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் சரியாக செல்கிறார்களா, நன்றாக படிக்கிறார்களா என்ற விபரங்கள் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. தேர்ச்சி அட்டையை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.
தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பற்றி பெற்றோருக்கு தெரிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டால், எப்படி இருக்கும் என, ஏங்காத பெற்றோர் இல்லை.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், கோவையில் மாநிலத்தில் முதல்முறையாக, மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரத்யேக சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், கமிஷனர் லதா ஆகியோர் தலைமையில் நடந்தது.
புதிய சாப்ட்வேர் மூலம், பள்ளி குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவது பற்றி "எவரான் கல்வி நிறுவனம்" சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய சாப்ட்வேரை பரீட்சார்த்த முறையில் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
"எவரான் கல்வி நிறுவனத்தின்" துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
"கல்வி நிறுவன ஆராய்ச்சி திட்டம்" என்ற பெயரில், "கேம்பஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்" எனும் சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது, சேர்க்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, வருகைப்பதிவு, காலஅட்டவணை, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், மாணவர்கள் எழுதிய தேர்வுகள், அதற்கான முடிவுகள் அனைத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திற்கான வினாவங்கி, விடைத்தாள், பாடத்திட்டம் போன்றவையும் பதிவு செய்யப்படும். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கம்ப்யூட்டரின் உதவியுடன் தீர்வு காண்பது, மாதிரி தேர்வு எழுதும் நடைமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் சாத்தியம். மாணவர் எந்த பாடத்தில் பலவீனமாக உள்ளான் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சி அளிக்க முடியும்.
பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், அவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட நிர்வாக தகவலும் பதிவு செய்யப்படும். இதன்மூலம், ஒவ்வொரு மாணவன் பற்றிய விபரமும், பள்ளிகளின் ஒட்டுமொத்த புள்ளிவிபரத்தையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாநகராட்சி இணையதளத்துடன், இந்த சாப்ட்வேர் இணைக்கப்படும். மாணவர் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு, "எஸ்.எம்.எஸ்" மற்றும் "இ-மெயில்" மூலம் தெரிவிக்கப்படும். புதிய சாப்ட்வேர் மூலம் கல்வித்தரம், நிர்வாகத்தரம் மேம்படும்.இவ்வாறு, கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
கோவை மேயர் கூறுகையில், "மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்பட்டு வருகிறது. பள்ளியில் குழந்தையை சேர்ப்பது முதல் படித்து முடித்து வெளியில் செல்வது வரை, அவர்களின் படிப்பு, நடத்தை உள்ளிட்ட அனைத்தையும், முன்னேற்றத்திற்கு தேவையான வழிமுறைகள் அனைத்தையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
கோவை ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, எவரான் நிறுவனத்தினர் இலவசமாக சாப்ட்வேர் நிறுவுகின்றனர். திட்டத்திலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளிலும் புதிய சாப்ட்வேர் நிறுவி, 26 ஆயிரம் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். இது மாநிலத்தில் முன்மாதிரியான திட்டமாகும்" என்றார்.