SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, March 31, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்

Subscribe to Syndicate
Share/Save
-A +A
நாகப்பட்டினம்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் சிக்கலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை வட்டார பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையராக கீழ்வேளூர் வட்டார செயலாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க தமிழக அரசை கேட்பது, பாராளுமன்ற தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்- ஆசிரியைகள் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முன்பு சென்று சேர்வது மற்றும் தேர்தல் முடிந்தவுடன் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து திரும்ப வருவது வரை சிரமமும், பாதுகாப்பின்மையும் உள்ளதால், வாக்குச்சாடிகளுக்கு அச்சமின்றி சென்று வரும் வகையில் அருகில் உள்ள பஸ் நிலையம் வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டரை கேட்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு, மாவட்ட பிரதிநிதிகள் மைக்கேல்சாமி, ஆவராணி ஆனந்தன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்வியில் கவனம் செலுத்தாத கட்சிகள்

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்விமார்ச் 30,2014,09:26 IST

எழுத்தின் அளவு :
சென்னை: தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும் 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும் புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது. தனியார் பள்ளி மோகம் ஆங்கிலவழிக்கல்வி என்பது மட்டுமின்றி, மாணவர்கள் மீதான அக்கறையும், அந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதால், கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் கூட, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு, ஆங்கிலவழிக்கல்வி என, அரசு பள்ளியில் தனிப்பிரிவு துவக்கினால், அதில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை, அங்கு கொண்டு வந்து பெற்றோர் சேர்க்கலாம் என, அரசும், கல்வித்துறை அலுவலர்களும் நினைத்திருந்தனர். ஆனால், அப்படியெதுவும் நடக்காததால், ஆங்கிலவழிக்கல்விக்கு மவுசு இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில் ஏற்கனவே, தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களை, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றியது.
இதை அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் புதிதாக சேர்ந்துள்ளனர் என, பெருமிதமாக அறிவித்தனர். ஆனால், தமிழ்வழி கல்வியில், ? லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்த உண்மையை யாரும் கூற முன்வரவில்லை. பெயரளவில், ஆங்கிலவழி கல்வி என, அறிவித்ததுடன் சரி, அதற்கு பின், அவர்களுக்கான தனி வகுப்புகளோ, பயிற்சிகளோ, ஆசிரியர்களோ வழங்கப்படவில்லை.
தவறான கொள்கை தமிழ்வழிக்கல்வி, ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில், அமர வைத்து, அதே ஆசிரியர் மூலம் வழக்கம் போல், பாடம் நடத்தும் பணி நடந்து வந்தது. இதனால், அரசு பள்ளிகளின் தரம் குறித்தோ, ஆங்கிலவழிக்கல்வி குறித்தோ, பெற்றோரின் எண்ணத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், வரும் கல்வியாண்டில், ஆங்கில வழிக் கல்வியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வியில் கூடுதலாக சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த அதே புள்ளிவிவர, "மேஜிக்" மட்டும் பெருமிதமாக இருக்கலாமே தவிர மொத்த மாணவர் எண்ணிக்கையில் சரிவு இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாத பெற்றோர் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளியில் சேர்த்தபின், அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் கொண்டு வந்து சேர்க்க யாரும் தயாரில்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களின் நடத்தையால், பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் பெரும்பாலும், மருத்துவ விடுப்பில் இருப்பதும், மற்றொரு ஆசிரியர் பள்ளி நிர்வாகத்துக்கு, அலுவலகத்துக்கு அலைவதும் சரியாக இருக்கிறது. பெரும்பாலான நாளில் ஆசிரியர் இல்லாத நிலை, பல பள்ளிகளில் உள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் ஆங்கில வழி துவக்கினால் மட்டும் எவ்வித முன்னேற்றமும் வந்துவிட போவதில்லை.
மாறாக தற்போது அரசு பள்ளிகளில் மட்டும் இருந்து வரும் தமிழ் வழிக்கல்வி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.