SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, July 14, 2012

TET EXAM VERY TOUGH AND WILL PRODUCE GOOD TEACHERS?


 டி.இ.டி., தேர்வு, எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக இருந்ததாகவும், முதல் தாள் தேர்வுக்கான கேள்விகள், பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றும், கணிதக் கேள்விகள், விடை அளிக்க முடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகவும், தேர்வர் பலரும் புலம்பினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக நேற்று, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தன. 1,027 மையங்களில் நடந்த தேர்வில், 6.56 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள், தேர்வில் பங்கேற்றனர். இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நேற்று விடுமுறை விடப்பட்டது. காலை 10.30 மணி முதல், 12.00 மணி வரை, முதல் தாள் தேர்வு நடந்தது. சென்னையில், 78 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வை முடித்து வெளியே வந்த தேர்வர்களிடம், "தேர்வு எப்படி இருந்தது?' என கேட்டது தான் தாமதம்; ஆளாளுக்கு புலம்பித் தள்ளினர். ஒருவர் கூட, "தேர்வு எளிதாக இருந்தது' எனக் கூறவில்லை. "கேள்விகளைப் படித்தபோது, தலை சுற்றியது. பாடப் பகுதிகளுக்கும், கேட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமே இல்லை. கணிதத்திற்கு 30 கேள்விகள்; 30 மதிப்பெண்கள். இதற்கு, ஒவ்வொரு கேள்விக்கும், உடனடியாக விடையை அளிக்க முடியவில்லை. கணக்கு போட்டுப் பார்த்து, விடை அளிப்பதற்கு நேரம் போதவில்லை. இப்படி கேள்வி கேட்டால், ஒன்றரை மணி நேரத்தில் எப்படி தேர்வெழுத முடியும்?' என்று பலரும் தெரிவித்தனர்.

எதற்கு இந்த தேர்வு? "ஏற்கனவே இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்து முடித்து, அரசு சான்றிதழும் பெற்றிருக்கிறோம். அதன் பிறகும், எதற்கு இந்த தேர்வு? ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும், தலா, 500 ரூபாயை, தேர்வுக் கட்டணமாக வசூலித்திருக்கின்றனர். இந்த வகையில், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது' என, சிலர் கூறினர். சென்னை அல்லாத பிற நகரங்களில் தேர்வெழுதியவர்களும், "கணிதம் கசக்க வைத்தது; நேரம் போதவில்லை' என்ற கருத்தையும், ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இல்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர். மதுரை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், வெகு சிலரே, தேர்வு எளிதாக இருந்தது எனக் கூறினர். ஆனால் அவர்களும், கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மொத்தத்தில், 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெறலாம் என்று எதிர்பார்ப்பதாக, தேர்வு எழுதியவர்கள் கருதுகின்றனர். தேர்வைப் புறக்கணித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், இன்று தெரியும்.

நியாயமாக நடக்கிறது: அமைச்சர் திருவல்லிக்கேணி, என்.கே.டி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, துறை முதன்மை செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர், நிருபர்களிடம் கூறும் போது, ""முதல்வர் உத்தரவுப்படி, டி.இ.டி., தேர்வு நியாயமாக நடக்கிறது. 6.56 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்,'' என்றார். ""காலையில் நடந்த தேர்வு கடினமாக இருந்தது என்றும், பாடத் திட்டத்தின்படி கேள்விகள் கேட்கவில்லை என்றும் தேர்வர் புகார் கூறியுள்ளனரே?'' என்று கேட்டதற்கு, ""தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்,'' என, அமைச்சர் சிவபதி பதிலளித்தார்.

30 மதிப்பெண்கள் "அவுட்!' கணிதப் பாடத்திற்கு, 30 மதிப்பெண்களுக்கு, 30 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும், படிப்படியாக பல நிலைகளில், ஒரு பக்கம் அளவிற்கு போட்டுப் பார்த்த பிறகே, விடையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இருந்ததாக, சென்னையில் தேர்வெழுதிய தேர்வர் தெரிவித்தனர். ஒரு கேள்விக்கு விடை அளிக்க, எவ்வளவு நேரமாகும் என்பதை, டி.ஆர்.பி., கணக்கிடாமல், எப்படி கேட்டனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தேர்வு, ஆசிரியர் மத்தியிலும், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியிலும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக்கு 90 நிமிடம் தந்த முரண்பாடு ஏன்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான, 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, மே 27ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு, காலை 10 முதல், பகல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் நடந்தது. மொத்த மதிப்பெண்கள், 150. இந்த ஆசிரியருக்கான அடிப்படைச் சம்பளம் அதிகம்; அத்துடன், இவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கான தேர்வும் கடினமாக இல்லை; நேரமும் குறையவில்லை.

ஏன் இந்த முரண்பாடு? ஆனால், நேற்று காலையில் நடந்த, டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கானது. பிற்பகலில் நடந்த இரண்டாம் தாள் தேர்வு, பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. இந்த இரு தேர்வுகளுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வைப்போல், அதே, 150 மதிப்பெண்கள் தான். ஆனால், நேரம் மட்டும், 50 சதவீதம் குறைத்து வெறும், ஒன்றரை மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டது. இது எந்த வகையில் நியாயம் என, நேற்று பல தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். நேற்று இரு தேர்வுகளையும் எழுதிய தேர்வர்களுக்கு, கேள்வித்தாள் கடினம் ஒரு பக்கம் என்றாலும், மிக முக்கியமாக, நேரமின்மை தான் பெரும் பிரச்னையாக இருந்தது.

தேர்வு வாரியம் பதில்: தேர்வு நேரத்தில் உள்ள முரண்பாடு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறியதாவது: இந்த கால நேரத்தை, நாங்கள் நிர்ணயிக்கவில்லை. நடைமுறை ரீதியாக, தேர்வர்களுக்கு உள்ள இந்த பிரச்னையை உணர்கிறோம். அவர்களது கேள்வி நியாயமானது தான். குறைந்தபட்சம், இரண்டு மணி நேரமாவது வழங்கியிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ.,) ஆசிரியர் தேர்வுக்கான விதிமுறைகளில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, மூன்று மணி நேரம் வழங்க வேண்டும் என உள்ளது. அந்த விதிமுறையைப் பின்பற்றி தான், டி.இ.டி., தேர்வர்களுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கினோம். இதில், எங்களை குறை கூற முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் கிடைத்த சில அனுபவங்களைக் கொண்டு, குறைகளை, அடுத்த தேர்வில் களைவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த நேர பிரச்னையும் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

டி.இ.டி., தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி.,-14-07-2012

எழுத்தின் அளவு :


டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி..டி., (ஆசிரியர் தகுதித் தேர்வுமுதல் மற்றும் இரண்டாம்தாள் தேர்வுநேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர்,இத்தேர்வை எழுதினர்இரு தாள் தேர்வுகளுமே கடினமாகஇருந்ததாகவும்நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்ததுஎனவும்தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.
டி..டி., தேர்வு கேள்வித்தாள்தமிழகம் மட்டுமல்லாமல்,ஏற்கனவே தேர்வு நடந்த கேரளாகர்நாடகாஆந்திராஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும்கடினமாகவேஅமைந்துள்ளது.சி.பி.எஸ்.., தேசிய அளவில் நடத்தியதகுதித் தேர்வில்தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில்,டி.ஆர்.பி., நடத்திய தேர்வுபெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
"திறமையானவர் கிடைப்பார்'': இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன. டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.
"கீ-ஆன்சர்'' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்'' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்'' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர்டி.ஆர்.பி., இப்படிதெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும்இரண்டாம்தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்'ஆனதாகஅதிகாரி ஒருவர்தெரிவித்தார்.அதன்படிமுதல் தாள் தேர்வில், 17,287 பேரும்இரண்டாம் தாள் தேர்வில், 28,054பேரும், "ஆப்சென்ட்'ஆகி உள்ளனர்.
 தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு டிஇடி இன்று நடைபெற்றது. இன்று காலை பட்டயப் படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. 150 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வினை எழுத ஒன்றரை மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் பலரும், வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வெழுதிய போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் வருந்தினர்.
150 கேள்விகளுக்கும் விடைகளை செயல்முறையில் கண்டுபிடித்து பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்ததால், ஒன்றரை மணி நேரம் என்பது மிகவும் குறைவாகும். பட்டயப் படிப்பு ஆசிரியர்களுக்கான வினாத்தாளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும் சில ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதியத்துக்கு மேல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.

No comments: