942 இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு கலந்தாய்வு-21-07-2012
சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்த 942 பேர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, இன்று மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 2009௰, 2010௧1ம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட, 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன.
இதில், 325 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டன. மீதியுள்ள, 942 பணியிடங்களை நிரப்புவதற்கு முன், அரசு நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பல்வேறு சங்க பிரதிநிதிகள், தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைக்கு, அரசின் அனுமதி பெற்று, தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க, இயக்குனர் உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று நடக்கிறது. பதவி உயர்வு செய்யப்படுபவர் போக, மீதி இடங்கள் இருந்தால், நேரடி நியமனம் மூலம் அவை நிரப்பப்படும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment