SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, January 30, 2013

பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 22 நாள் தொடர் பயிற்சி



ஜனவரி 30,2013,07:36 IST


அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரி மாதம் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.
பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின. ஜனவரியில், 13 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் 9 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால், அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
ஒட்டு மொத்தமாக, 22 நாட்கள் பள்ளிக்கே செல்லவில்லை. இதனால், மூன்றாம் பருவ துவக்கத்திலேயே, பாடம் கற்பிக்க முடியவில்லை. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கல்வி அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் உள்ளன. இதனால், இறுதி தேர்வுக்கு தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இவ்வாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டோம். சனி தோறும், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி நடக்கிறது. பள்ளிக்குச் செல்வதே அரிதாகி விட்டது. மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும்" என்றார்.

PLEDGE TO BE TAKEN ON 31ST JANUARY


Monday, January 28, 2013

ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

தியாகதுருகம்:சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் வேலு, 38 பணிபுகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் உள்ள இவர், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கான, மினியேச்சர் ஊஞ்சலை செய்து, அதன் அச்சுடன் சிறிய ஜெனரேட்டரை இணைத்துள்ளார்.ஊஞ்சலை ஆட்டும்போது, அதன்மூலம் கிடைக்கும் விசை மூலம், ஜெனரேட்டர் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இக்கருவியில் இருந்து, 9 வாட் மின்சாரம் உற்பத்தி செய்து, இரண்டு சிறிய பல்புகளை எரிய வைத்து, பரிசோதனை மூலம் செய்து காண்பித்தார். குடியரசு தினவிழாவில் இக்கருவியை காட்சிக்கு வைத்திருந்தார். மாவட்ட கவுன்சிலர் அய்யப்பா, தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

இதுகுறித்து, ஆசிரியர் வேலு கூறியதாவது:விஞ்ஞானி மைக்கேல் பாரடே கண்டுபிடித்த, மின்தூண்டல் முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போது, அதிக அளவில் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிலக்கரி, அணு சக்தி, காற்றாலை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.இன்றைய நிலையில், எரிபொருள் குறைந்து வருவதால், சோலார் முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருளை பயன்படுத்தாமல், பலவகையிலும் வீணாகும் ஆற்றலை, பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும், என்ற எண்ணம் தோன்றியதால், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயாரித்தேன். இதில், சிறிதாக சோதனை முறையில் செய்துள்ளேன்.இதை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி, விளையாட்டு மைதானங்களில், பொழுதுபோக்கு இடங்களில் அமைக்கப்படும் ஊஞ்சல்களில், இக்கருவியை பொருத்தினால் அதன் மூலம், மின்உற்பத்தி செய்து, குறைந்தபட்சம் சில மின்விளக்குகளையாவது எரியவைக்க முடியும்.இதனால், மின்சாரத்தை சிக்கனம் செய்யமுடியும். இக்கருவியை மேலும் மேம்படுத்தி, பெரிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு, ஆசிரியர் வேலு கூறினார்.

பள்ளி குழந்தைகளிடம் பாரபட்சம் ; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுடில்லி :பள்ளிக் குழந்தைகளிடம் ஜாதி, மத அடிப்படையில், பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளதற்கு, கவலை தெரிவித்துள்ள தேசிய ஆலோசனை குழு, "இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை வலியுறுத்தி உள்ளது.

சோனியா தலைமையிலான, தேசிய ஆலோசனை கவுன்சிலான, என்.ஏ.சி.,க்கு, சமீபகாலமாக, பள்ளிகளில், குழந்தைகளிடையே ஜாதி, மத வேறுபாடுகள் பார்க்கப்படுவதாக, அதிக புகார்கள் வந்தன.இது குறித்து ஆலோசனை நடத்திய என்.ஏ.சி., இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, சில ஆலோசனைகளை கூறியுள்ளது. 

அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பள்ளிகளில், மாணவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வது, தண்ணீர் வழங்குவது, மதிய உணவு வழங்குவது போன்ற விஷயங்களில், பாரபட்சம் 
காட்டப்படுவதாக, புகார்கள் வருகின்றன.குழந்தைகளிடம் ஜாதி, மதம், இனம், பெற்றோரின் தொழில், உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில், வேறுபாடு காட்டப்படுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது. பள்ளி நிர்வாகங்களின், இதுபோன்ற நடவடிக்கைகள், குழந்தைகளின் ஒட்டு மொத்த எதிர்காலத்திலும், பாதிப்பை ஏற்படுத்திவிடும்.உடனடியாக, மாநில அரசுகளுடன் ஆலோசித்து, கல்வித் துறை நிபுணர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதை தடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, என்.ஏ.சி., தெரிவித்து உள்ளது.

Sunday, January 27, 2013

8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!



சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. 

இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியதாவது:நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன். மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன். 

நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.

ஒரேயொரு மாணவிக்கு இரு ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_633099.jpg

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில், 2010-11ல், 11 குழந்தைகளும், 2011-12ல், ஏழு குழந்தைகளும் பயின்றனர். தற்போது ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார்.டி.கிளியூர் கிராம மக்கள் கூறுகையில், "அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், சரிவர வருவதில்லை. கல்வித்தரம் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறை கருதி, வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்த்துள்ளோம்' என்றனர்.டி.கிளியூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியா கூறியதாவது:கிராம மக்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகிறோம். ஒரு மாணவி மட்டும், இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.அவளுக்கு நானும், மற்றொரு ஆசிரியரும் நிறைவாக பாடம் நடத்தி வருகிறோம். ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், மாணவிக்கு சமையல் செய்து கொடுக்கின்றனர்,இவ்வாறு அவர் கூறினார்.உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை கூறியதாவது:மாணவர் சேர்க்கைக்காக விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தியும், வீடு, வீடாக பிரசாரம் செய்தும், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை.பள்ளியை மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் இடமாற்ற செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Saturday, January 26, 2013

KIND ATTENTION TO LADY TEACHERS


மூத்த குடிமகளின் டைரி

நான் அரசுக் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவள். இப்போது என் வயது 75. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் (வருடம் நினைவில்லை) ஊதிய உயர்வு கேட்டு (பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி), கல்லூரிப் பேராசிரியர்கள் போராட்டம் தொடங்கினார்கள். அது மாபெரும் கிளர்ச்சியாக மாறியது.  அந்த நாட்களில் எங்கள் போராட்டம் உள்வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் போன்ற படிகளைத் தாண்டி, சிறை நிரப்பும் போராட்டமாக மாறியது. மறியல் செய்யும்போது கைது செய்யப்படுவீர்கள்;  சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்;  எதற்கும் ஆயத்தமாக வாருங்கள்என்று போராட்டக்குழு எச்சரிக்கை செய்திருந்தது.  மறியல் செய்தோம்; ஆட்டு மந்தைகளைப்போல் எங்களை காவல்துறை ஊர்தியில் ஏற்றினர்.  காவற்படை மைதானத்தில் இறக்கிவிட்டனர்.  எங்கள் கல்லூரியில் அறுபது பேர் பணியாற்ற, 5 ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

போராட்டத்துக்கு வராத ஆசிரியப் பெருமக்கள்,  கல்லூரிக்கு மாணவர்கள் யாரும் வராத காரணத்தால், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டபின் வீடு நோக்கி முன்கூட்டியே சென்றுவிட்டனர்.  அப்போது பலர், போராட்டத்தில் கலந்துகொண்ட எங்களைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்தனர். நாங்கள் தக்காளி சாதப் பொட்டலத்திற்குத்தான் போராட்டத்தில் கலந்துகொண்டோமென்றும் கமெண்ட் அடித்தனர்.

கைது செய்யப்பட்ட எங்கள் பதினோரு பேரை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் சென்றனர். மாஜிஸ்திரேட் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நின்றோம்.  விசாரணை இறுதியில் மாஜிஸ்திரேட், அரசுக்கு எதிராகப் போராடியதால் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துவிட்டார். நாங்கள் கேட்டுக்கொண்டபடி வேலூர் மகளிர் சிறைச்சாலைக்கு நாங்கள் அனைவரும் சென்றோம். பதினோரு நாட்கள் சென்றபின், எங்களுக்கு விடுதலை கிடைத்தது.  

மீண்டும் நாங்கள் கல்லூரிக்குத் திரும்பினோம்.  ஏதோ வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலவும், தீண்டத்தகாதவர்களைப் போலவும்  போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வேலை போனால் என்ன? அவர்கள், ‘அந்தவேலை செய்து பிழைத்துக்கொள்வார்கள்என்று ஒரு  பேராசிரியை கமெண்ட் அடித்ததாகக் கேள்விப்பட்டபோது நாங்கள் கொந்தளித்தோம். இச்செய்தி, ஆண்கள் கல்லூரிக்கு எட்டியது.  அவர்களும் திரண்டு வந்தனர். கோஷங்கள் எழுந்தன.  அப்படி கமெண்ட் அடித்தவர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றனர்.  கல்லூரி முதல்வர், போராட்டத்தில் ஈடுபடாத பேராசிரியர்கள் புடைசூழ மைதானத்திற்கு வந்தார். கமெண்ட் அடித்தவர் சார்பாக, தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினார். எங்களுக்கு, ‘ச்சேஎன்றாகிவிட்டது. சில நாட்களில் எங்கள் போராட்டம் வெற்றி பெற்றது.  அந்த ஊதிய உயர்வுப் பரிசைப் பெறவேண்டி, போராட்டத்தில் ஈடுபடாத பேராசிரியர்களும் அலுவலக நண்பர்களிடம் ஓடி ஓடி, தங்கள் ஊதிய நிர்ணயம் சரியாக அமைந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எங்கள் இதழ்களில் சிறிய முறுவல்தான் தோன்றியது. நாங்கள் போராடியபோது, ஒதுங்கி நின்று ஆபாசமாக விமர்சனம் செய்தவர்களும் ஆறாவது ஊதியக் குழு அளித்த சலுகையால், இன்று கை நிறைய ஓய்வூதியம் பெற்று வாழ்வாங்கு வாழ்கின்றனர்.

எனக்கு மகிழ்ச்சிதான். நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஓர் உரிமைக்காகப் போராடும்போது, நீங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டால், ஒதுங்கி நின்று மௌனமாக இருங்கள். வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்யாதீர்கள். போராடுகிறவர்கள், உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறார்கள். போராட்டம் வென்றால், உங்களுக்கும் பலன் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

- செல்வி. அரங்க ராதா, பொள்ளாச்சி -2

Thursday, January 24, 2013

ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்



ஜனவரி 24,2013,07:27 IST


ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சென்னை: கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும், 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி, அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த பணி நியமனம், ஆர்.டி.இ., சட்டத்திற்கு எதிரானது என்பதால், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய, கல்வித்துறைக்கு, அரசு உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் அடிப்படையில், முதல்கட்டமாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்ய, துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பணி நீக்க உத்தரவு கடிதங்கள், நேற்று வழங்க இருந்த நிலையில், பிரச்னை குறித்த முழு விவரங்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, பணி நீக்க உத்தரவு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார்.
இந்த பிரச்னை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின், ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என, சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.  இதை, அதிகாரிகள் செய்யவில்லை.
மேலும், ஆசிரியர் நியமனங்களுக்கு, அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி, ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு, அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில், திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை



சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்தவர்களுக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது.
இவ்வகையில், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, முதல்வர் அனுமதி வழங்கி விட்டதாக, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காமராஜர் பல்கலை வழங்கும் தொலைநிலை பி.எட்., படிப்பு



மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பானது, NCTE(National Council for Teacher Education)  மற்றும் DEC(Distance Education Council) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது. இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பின்வருமாறு,

* மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
* , பி.லிட்., ஆங்கிலம், கணிதம், அப்ளைடு கணிதம், இயற்பியல், ஜியோ-பிசிக்ஸ், பயோ-பிசிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பயோடெக்னாலஜி, உயிரியல், வரலாறு, புவியியல், அப்ளைடு புவியியல், கணிப்பொறி அறிவியல், ஐடி போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* முதுநிலையில், ஹோம் சயின்ஸ், பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று, ஆசிரியர்களாய் இருப்பவர்கள்.
* 10, 12 மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பை முறையாக முடித்திருக்க வேண்டும்.
* 2 வருட முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில், பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையைப் பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
விண்ணப்பம் மற்றும் விபரக் கையேட்டை நேரில் பெற ரூ.800ம், டிடி மூலமாக பெற ரூ.850ம் செலுத்த வேண்டும்.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில், நுழைவுத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பம், ஜனவரி 24ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெற கடைசி நாள் பிப்ரவரி 25. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மார்ச் 24.
இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.mkudde.org என்ற வலைத்தளம் செல்க.

Wednesday, January 23, 2013

BEST WISHES TO AMBAL SCHOOL







--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Monday, January 21, 2013

M.PHIL INCENTIVE FOR BT ASSISTANTS



எம்.பில், பி.எச்டி பட்டம் பெற்ற

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

கருத்துகள்


நாகர்கோவில் : பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ, எம்.எஸ்சி பட்டப்படிப்புக்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்வுக்கு பின்னர் 2வது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக எம்.எட் உடன் எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டங்களை சேர்த்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி போன்ற முதுநிலைப் பட்டங்கள் தேர்வு பெற்ற பிறகு முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பதவி மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும்போது எம்.எட் பட்ட தகுதி பெற்றிருந்தால் 2வது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடையவர் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஒரு ஆசிரியரின் மொத்த பணி காலத்தில் அதிகபட்சமாக இரு ஊக்க ஊதிய உயர்வுகளே அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வித்துறை, பல்கலைக்கழக பாட பகுதியில் இருந்து எம்.எட் படிப்பை நீக்கிவிட்டதால் எம்.எட் கல்வி தகுதியை தொலைதூர கல்வி மூலம் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. எம்பிஎல் அல்லது பிஎச்டி போன்ற உயர் கல்விகளை தொலைதூர கல்வி மூலம் பெறும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சிக்கு பெறும் ஊக்க ஊதிய உயர்வை தவிர மேலும் ஒரு ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியான உயர் கல்வியான எம்.எட் பட்டத்தோடு எம்.பில், பிஎச்டி பட்டங்களைச் சேர்க்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
 இதனையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் 2வது ஊக்க ஊதிய உயர்வு பெற எம்.எட் என்பதற்கு பதிலாக எம்.எட் அல்லது எம்.பில் அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

RESIDENTIAL TRAINING FOR PRIMARY AND MIDDLE HMS



மாணவர்களின் மனநிலையை புரிந்து பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை



ஜனவரி 21,2013,10:39 IST




ஊட்டி: "மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும்" என, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.
டி.இ.டி., தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், ஆசிரியர்களாக சேர்ந்துள்ளனர். புதியதாக பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  கடந்த 2 நாட்களாக நடந்தது.
பயிற்சி முகாமில், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தா பேசியதாவது: புதியதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். அனைத்து துறையிலும் வல்லுநர்களை உருவாக்குவது, ஆசிரியர்களாகிய நீங்கள் தான்.
பணம் ஈட்டுவது பெரிய விஷயமல்ல, பெயர் ஈட்டுவது தான் சிறப்பானது.மாணவர்களின் குணநலன்கள், மனநிலையை புரிந்து அரவணைத்து, ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மன நிலையை நன்கு புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்க கல்வி அலுவலர் லட்சுமணன் பேசும் போது, "ஆசிரியர் பணி என்பது சிறப்பான ஒன்று; ஓய்வு பெறும் வரை, உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். சிறந்த சமுதாயத்தை உருவாக்க, மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது" என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் வாசு பேசுகையில், "ஆசிரியர்கள், தங்களின் சிறப்பான பணியின் மூலம், மாணவர்கள் சிறந்து விளங்கி, அதன் பயன் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். இப்பயிற்சியில் கூறப்படும் பல்வேறு கருத்துகளை உள்வாங்கி, நன்றாக பயன்படுத்தி, சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) அர்ஜூனன், ஆர்.எம்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் என். ஆர்ஜூனன், பள்ளி தலைமையாசிரியர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம், நேற்றுடன் நிறைவடைந்தது.

CANCELLATION OF APPOINTMENTS IN AIDED SCHOOL WITHOUT TET


Saturday, January 19, 2013

AIPTF DHARNA AT NEW DELHI ON 4-4-12 TOUR



புதிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள்

புதிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் பற்றிய கருத்துருக்கள் விவரம் அறிய இங்கே சொடுக்கவும் 

FTG PROCEEDINGS FOR THE YEAR 2012

அரசு உதவி பெறும்  பள்ளிகளுக்கான இறுதி கற்ப்பிப்பு கொடை பற்றிய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் பெற இங்கே சொடுக்கவும் 

சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?


சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?

பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான்.

பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகள், உள்ளார்ந்து வாசிக்கும் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஒரு சிறந்த கற்றல் செயல்பாட்டில், வாசிக்கும் திறன் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வாசிப்பு என்பது இல்லாமல், படித்தல் என்ற செயல்பாடே கிடையாது.

வாசிக்கும் திறன் என்பது ஒரு குழந்தையிடம் பயிற்சியின் மூலமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி, தொடக்கக் கல்வி நிலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒரு பத்தியை சிறப்பாக படிப்பதற்கு, சில முக்கிய திறன்கள் தேவை. அந்த திறன்கள், முறையான உதவியின் மூலமே பெறப்பட முடியும்.

முதலில், வகுப்பறையில் சக மாணவர்களின் முன்பாக, பயமின்றி வாசிக்கும் பழக்கம் ஒரு குழந்தைக்கு ஏற்பட வேண்டும். இந்த தைரியத்தை, ஒரு ஆசிரியரின் தொடர்ச்சியான உற்சாகத்தின் மூலமாகவே குழந்தை அடையும். குழந்தையின் சிறு தவறுகளை ஆசிரியர் பெரிதுபடுத்துதல் கூடாது. வாசிக்கும்போது, தனது தவறுகளுக்காக தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் குழந்தைகளுக்கு இருத்தல் கூடாது. இதை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், இந்த பயம் இருந்தால், குழந்தையானது முன்னேற்ற பாதையில் செல்வது தடைபடும்.

வாசிக்கும் திறனை வளர்த்தல் என்பது, பதட்டமற்ற மற்றும் தெளிவான மனோநிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அமைதியான மற்றும் தெளிவான மனோநிலையை, நல்ல விளையாட்டுக்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலமாக பெறலாம். மேலும், ஆசிரியரின் பங்களிப்பும் இன்றியமையாதது.

வேகமாகவும், அவசரமாகவும் வாசிப்பதென்பது, படித்தல் செயல்பாட்டிற்கு உதவாது. ஒரு விஷயத்தை சிறப்பாக உள்வாங்க வேண்டுமெனில், நிதானமாகவும், பொறுமையாகவும் வாசிப்பது முக்கியம்.

ஆரம்ப வகுப்பிலிருந்தே, வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையாக புரிந்துகொள்வதோடு, அதன் தொடர்புடைய அர்த்தங்களையும் புரிந்துகொள்ள பழக வேண்டும். இதன்மூலம், படிக்கும் விஷயத்தைப் பற்றிய, பரவலான மற்றும் தெளிவான புரிதல் ஏற்படும்.

ஒவ்வொரு பள்ளியும், கட்டாயம் ஒரு நூலகத்தை வைத்திருக்க வேண்டும். ஒருவேளை, தான் படிக்கும் பள்ளியில் நூலகம் இல்லையெனில், பள்ளிக்கு வெளியேயுள்ள ஊர் பொது நூலகம் அல்லது மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றில் உறுப்பினராகி, ஒர மாணவர், வாசிக்கும் பழக்கத்தை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை, நூலகத்தையே அணுக முடியாத நிலை ஏற்படினும்கூட, தனது பாடப் புத்தகங்களையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி, வாசிக்கும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கையில், தெரியாத வார்த்தைகளை அறிந்துகொள்ள, அகராதியையும்(dictionary) அருகே வைத்துக் கொள்ளலாம்.

சிறப்பான வாசித்தல் திறனை வளர்த்துக் கொள்வதானது, ஒரு மாணவரின், ஆர்வம் மற்றும் விடா முயற்சியினை பொறுத்தே அமைகிறது என்பதை எப்போதும் மறக்கலாகாது.

Thursday, January 17, 2013

பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதியில் அதிகாரிகள் முறைகேடு

தேனி: தேனி மாவட்டத்தில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித்துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.

மாணவர்களுக்கு ஆண்டிற்கு நான்கு முறை சீருடைகள், மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், கலர் பென்சில்கள், செருப்பு, கணிதவியல் பெட்டி உட்பட பொருட்களை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

இப்பொருட்களை மாவட்டத்திற்கு கொண்டு வருவதில் இருந்து, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வரை, அனைத்து செலவுகளையும், கல்வித்துறை ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்தும், ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு தொலைவில் உள்ளது என, வரைபடம் தயாரித்து, கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.

அதன் அடிப்படையில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு தேவையான நிதியை, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு வழங்கி விடுகிறது. அவர்கள், இந்நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.

பொருட்களையும், பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை. மாறாக, அனைத்து பள்ளிகளுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு, கூறி விடுகின்றனர்.

பள்ளி நிர்வாகங்கள், தங்கள் சொந்த செலவில் இந்த பொருட்களை எடுத்துச் சென்று, மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொண்டு போய், பொருட்களை வழங்கியதாக கணக்கு காட்டி, நிதி முறைகேடு செய்கின்றனர். இதனால், கல்வித்துறை அதிகாரிகள் மீது, பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன. பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.


--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Wednesday, January 16, 2013

38000 TEACHERS AVAILED CL AND ATTENDED DHARNA STATEWIDE

38 ஆயிரம் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுத்து கெட்ட பெயர் எடுக்க அரசு விரும்பாது.

தினமலர் பத்திரிகை செய்தியெல்லாம் சும்மா டுபாக்கூர்

தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் அரசின் கவனத்திற்கு சென்றது.


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜனவரி 5-ல் நடந்த குறுவள மைய கலந்தாய்வு கூட்டத்தில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட், அரசின் கவனத்திற்கு சென்றது.

தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தெரிந்தது.

இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும்,&'&' என்றார்.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், "எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,&'&' என்றனர்.

Monday, January 14, 2013

Sunday, January 13, 2013

வாழ்த்துகிறோம்


வாழ்த்துகிறோம்

 

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தின் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச்செயலாளர் திரு.எஸ் பாலசுப்ரமணியன் தலைமையாசிரியராக பணியாற்றும் அம்பல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த ஆண்டுக்கான மாவட்டத்தின் சிறந்தப் பள்ளி விருதை பெற்றுள்ளது. இவ்விருதை மாண்புமிகு கல்வி அமைச்சர் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்குகிறார் பள்ளிக்கல்வித்துறை செயலர் திருமதி சபிதா இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பாராட்டினார்கள். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.எஸ் பாலசுப்ரமணியன் விருதைப் பெற்றுக் கொள்கிறார்



swami vivekananda 150 years celebration



ஆசிரியர்கள் மனசாட்சிடன் பணியாற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைஜனவரி 13,2013,09:50 IST


நாமக்கல் மாவட்டத்தில்துவக்கநடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில்ஐந்தாம்வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த ஆய்வுக் கூட்டம்,அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்ததுதமிழகபள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா தலைமை வகித்துமாணவர்களின் தரம் குறித்துகேட்டறிந்தர்.நாமக்கல்: "ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது" என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில், 150 பள்ளிகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டதுகல்வியில் தொடர் மற்றும்முழுமையான மதிப்பீடு முறையில் தொகுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் நடந்தஇந்தஆய்வு கூட்டத்தில்அனைத்து....,க்கள்வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்பங்கேற்றனர்.
கூட்டத்தில்ஐந்தாம் வகுப்பு படித்து ஆறாம் வகுப்புக்கும்எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம்வகுப்புக்குச் செல்லும் மாணவமாணவியர்தமிழ்ஆங்கிலத்தை வாசிக்க தெரிந்திருக்கவேண்டும்கணக்கு பாடத்தின் அடிப்படைகளை புரிந்து வைத்திருக்க வேணடும்.
அதை குறைத்துகல்வி அறிவில்நாமக்கல் மாவட்டம் முன்னேற்றம் அடைய அனைத்துதலைமையாசிரியர்கள்....,க்கள்ஆசிரியர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டதுகுறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்டுள்ள பள்ளிகளில்,அம்மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாசிப்புத்திறன் மிகவும் மோசமாக இருப்பதுதெரியவந்தது.
கூட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியதாவதுமாணவர்களின் வாசிப்புதிறன் மற்றும் அடைவு திறன் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறதுசம்பந்தப்பட்ட பள்ளிஆசிரியர்கள் மீது....,க்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது.
குறிப்பாககொல்லிமலைஎருமப்பட்டிசேந்தமங்கலம்புதுச்சத்திரம்கபிலர்மலை,நாமகிரிப்பேட்டை போன்ற ஒன்றியத்தில் மாணவர்கள் தரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.ஊதியம் வாங்கும் அனைவரும்மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்.
அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்துதவறு செய்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க தயங்கக் கூடாதுஅவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது ஏற்படும் பிரச்னையைசந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, January 12, 2013

இன்கம்டாக்ஸ் படிவம்


இன்கம்டாக்ஸ் படிவம் பெற இங்கேசொடுக்கவும்

 

தொடக்கக் கல்வித்தரம்


1 முதல் 5 வகுப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மாவட்டம் வாரியாக மாணவர்களின் கல்வித்தரம் பட்டியலிடப்பட்டள்ளது. உங்கள் மாவட்ட தொடக்கக் கல்வித்தரம் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை

·         http://media.dinamani.com/article1415669.ece/ALTERNATES/w460/cer_verifi.jpg
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரே ஆண்டில் இரு பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர்கள் "டபுள் டிகிரி கோர்ஸ்" மூலம் ஒரு வருடத்தில் (பிஏ, பிகாம்) போன்ற இளங்களை பட்டம் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்ற வந்தனர். இதனால் இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்வதில் குளறுபடி ஏற்படுகிறது.
ஆனால் தற்போது தகுதித்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஒரே வருடத்தில் இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


பள்ளி சீருடைகள் அளவு சரியில்லை: மாணவ, மாணவிகள் அவதிஜனவரி 12,2013,07:03 IST











ஊட்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், அளவு சரியில்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு, நான்குஜோடி, சீருடை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில்உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும், கடந்த வாரம்சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களுக்குவழங்கப்பட்ட பேன்ட், சர்ட் அளவு சரியில்லாமல்தைக்கப்பட்டிருந்தன.
சில சீருடைகள், கிழிந்தும் காணப்பட்டன. மேலும், சில மாணவர்களுக்கு, இறுக்கமாகவும், சிலமாணவர்களுக்கு, "தொள தொள" எனவும் ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பள்ளிஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: சீருடைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளன. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரை கால் பேன்ட் வழங்கப்படுகிறது.
குளிர் பிரதேசமான நீலகிரியில், 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, முழுக் கால் சட்டைஅணிந்து தான், பள்ளிக்கு வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் சீருடையை, மாணவர்கள்பயன்படுத்த தயங்குகின்றனர். பயன்படுத்த தகுதியற்ற நிலையில், சீருடைகள் வழங்கப்படுவதால்,அரசு பணம் தான் விரயமாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்
--

பண்ருட்டி அருகே பள்ளி கட்டடப் பணி : மாணவர்களை ஈடுபடுத்தும் அவலம்ஜனவரி 12,2013,07:19 IST

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்தசேமக்கோட்டை ஆதிதிராவிட நலதுவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணியில் பள்ளி மாணவர்களைபயன்படுத்தும் அவலம் நடந்துவருகிறது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளி இயங்கிவருகிறது. 180 மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவுநேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும்பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதனால், பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனையேற்று பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் பணியில் ஒரு கொத்தனார் மட்டுமே ஈடுபட்டுள்ளார். செங்கல் எடுத்துக் கொடுக்கசித்தாளுக்கு பதிலாக மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் தினா, முத்துக்குமரன், கவுதமன், சசிதரன் ஆகியோர்கொத்தனாருக்கு செங்கல் எடுத்துக் கொடுத்தனர். இதனை போட்டோ எடுத்ததை அறிந்த, தலைமைஆசிரியர் கிரேசி, "பள்ளி வேலையை மாணவர்கள் தான் செய்ய வேண்டும். இதில் என்ன தவறுஉள்ளது" என கூலாக பதில் அளித்தார்.
மாணவர்கள் படிக்க பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், ஆசிரியர்கள் சிலர்அத்துமீறி மாணவர்களை இதுபோன்று பிற பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து கொண்டுதான்உள்ளது. இந்த அத்து மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிப் பணிகளை கவனிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடிஜனவரி 12,2013,07:15 IST


அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர்பள்ளி வேலை நாட்களில்பிற பணி என்றபெயரில்வெளியூர் செல்வதும்சொந்த பணிகளை கவனிப்பதாகவும்அரசின் கவனத்திற்கு புகார்சென்றதுஇதனால்அலுவலக பணிகளுடன்மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதைதவிர்க்கபள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.சிவகங்கை: பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல,சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.
பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும்.இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.
சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளைஅறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாதகாரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்நேரில் வரவழைக்க வேண்டும்.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளிஅலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்தவிதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ.,அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது
-- 
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
 

நாகப்பட்டினம் மாவட்டக்கிளை