ஆசிரியர் தகுதி தேர்வு; முதல் தாள் விடைகள் வெளியீடு
சென்னை, ஜூலை 28: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் விடைகள் இணையதளத்தில் ஜூலை 27ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காலையில் முதல் தாளும், பிற்பகலில் இரண்டாம் தாளும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வை எழுதினர்.
இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள் 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து முதல் தாளுக்கான விடைகளையும் (கீ-ஆன்சர்) நேற்றிரவு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், தேர்வர்கள் அதை உரிய ஆதாரத்துடன் ஜூலை 3ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்பிறகு, பெறப்படும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான "கீ ஆன்சரில்' பதில்கள் குழப்பமாக அமைந்துள்ளன.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான "கீ ஆன்சர்'களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வேறு வேறு பதில்கள் ஆன்சர்களாக குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, "சி' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் "மேணுபேக்ட்ர்' என்றும், "டி' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு "பிட்' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்கு விடைகள் வேறுவேறாக கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த "ஆன்சர்' சரியானது என்று தெரியவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

No comments:
Post a Comment