SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, July 19, 2012

25% PLACEMENT BY RTE NOT SUCCESS-DINAMANI


 உரிமையல்ல கடமை!



அனைவருக்கும் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகத் தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் செய்வது ஒருபுறம் இருக்க, பெங்களூரில் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு பள்ளி, 25% ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவ மாணவியரின் தலைமுடியை வெட்டித் தனிமைப்படுத்திக் காட்ட முற்பட்டிருக்கிறது.
 அதுமட்டுமல்ல, ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்தக் குழந்தைகள் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனிமைப்படுத்தி கடைசி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் கூட்டத்துக்கு இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அழைக்கப்படவே இல்லை. காலை வழிபாட்டிலும் இக்குழந்தைகள் தனிக்குழுவாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
 ஜாதியின் பெயரால் நடந்தால் மட்டும்தான் தீண்டாமையா என்ன? பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் விலக்கி வைக்கப்படுவதும் தீண்டாமை அல்லவா?
 அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டாலும், ஒரு குழந்தையின் வசிப்பிடத்திலிருந்து 4 அல்லது 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பள்ளி இருந்தால் மட்டுமே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிப்பது என்பது சாத்தியம். ஆனால், அத்தகைய உள்கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை. அரசுப் பள்ளிகள் மட்டுமே இந்தப் பணியைச் செய்துவிட முடியாது. தனியார் பள்ளிகளையும் இந்த தேசிய இலக்கிற்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில்தான், தனியார் பள்ளிகள் 25% இடஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்தது.
 பெரும்பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் ஏழை மாணவர்கள் படித்தால், பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க மாட்டார்கள், தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்பதால் இதைத் தவிர்க்க முயன்று வருகின்றனர். அரசு உயர் அதிகாரிகளும், பெரும் பணக்காரர்களும் கௌரவமான பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதை விரும்புவதால் அங்கே சமுதாய அந்தஸ்து குறைந்தவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்ப மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏழை மாணவர்கள் வரத் தயங்குவார்கள் என்று முதலைக்கண்ணீர் வடித்தார்கள்! ஏழைக் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் என்று பயமுறுத்தினார்கள். மொத்தத்தில், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தியே தீரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.
 தாங்கள் கல்விச் சேவை செய்வதாகவும், தங்களைக் கல்வித் தந்தை என்று சொல்லிக்கொள்ளவும் முற்படும் தனியார் பள்ளித் தாளாளர்கள், ஏழை-எளிய மக்களின் குடிசைகளுக்கு வலியப்போய்க் குழந்தைகளை அழைத்துவந்து தங்கள் பள்ளியில் இலவசமாகப் படிக்க வைத்து சமுதாயத் தொண்டாற்ற வேண்டாம். குறைந்தபட்சம், எல்லோருக்கும் கல்வித் திட்டத்தின் நோக்கத்தைக்கூடவா நிறைவேற்ற ஒத்துழைக்கக் கூடாது?
 கோவையில் ஒரு தனியார் பள்ளியில், 5-ஆம் வகுப்பு மாணவி பள்ளி விதிமுறைப்படி கூந்தல் முடிக்கவில்லை என்பதற்காக, அவரது கூந்தலை ஆசிரியை வெட்டினார். 2008-இல் நடந்த சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. முடியை வெட்டிய அந்த ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை!
 அந்த ஆசிரியை நடந்துகொண்டவிதம் முரட்டுத்தனமானதாக இருக்கலாம். அது வெறும் பள்ளியின் ஒழுக்கம் சார்ந்த விவகாரம் என்றாலும் நிச்சயமாகத் தவறுதான். இருப்பினும் அது ஒரு சிறுமியின் மனதில் தான் அற்ப விஷயத்துக்காக தண்டிக்கப்பட்டதாக நினைக்கத் தூண்டுமே தவிர, தான் ஒதுக்கப்பட்டதாகவோ, தனிமைப்படுத்தப்பட்டதாகவோ, ஒருவகையான தீண்டாமைக்கு ஆட்பட்டதாகவோ ஒரு அழியாத வடுவை, இந்தத் தனியார் பள்ளிகள் உருவாக்குவதைப் போல உருவாக்கிடாது.
 எல்லோருக்கும் கல்வித் திட்டத்தை நாம் இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். முதலில், இந்தியனாகப் பிறக்கும் குழந்தை, ஏழையோ பணக்காரனோ, எந்த ஜாதியோ எந்த மதமோ, எப்படியிருந்தாலும் தரமான கல்வி வழங்கப்பட்டு கல்வி அந்தக் குழந்தையின் பிறப்புரிமையாவது என்பது. இரண்டாவது, இதன் மூலம் சமதர்ம, சமத்துவ சமுதாயம் அமைக்கப்படுவது என்பது. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை ஜாதிய ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, சமுதாய ஏற்றத்தாழ்வும்கூட!
 ஒருபுறம் ஆங்கிலவழிக் கல்வி கற்கும் பணக்காரக் குழந்தைகள் அவர்களுக்குப் பசி என்று சொன்னால் பிட்சாவும் பர்கரும்; தாகம் என்று சொன்னால் கோலாவும் பெப்சியும்; இனிப்பு என்று சொன்னால் ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் என்கிற நிலைமை. இன்னொருபுறம், அடுத்த வேளை கஞ்சிக்குப் பெற்றோர் கொண்டுவரும் கூலிப்பணமோ, ரேஷன் கடையிலிருந்து பெறப்படும் நாற்றம்பிடித்த அரிசியோ கோதுமையோ என்கிற நிலையில் இருக்கும் குழந்தைகள்.
 அரை நூற்றாண்டுக்கு முன்னால் இதை தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்த அன்றைய முதல்வர் காமராஜர் கட்டாயக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று ஜாதி மத வித்தியாசத்தையும், ஏழை பணக்கார இடைவெளியையும் உடைத்தெறிய அவர் வகுத்த திட்டம் அது. அரசு ஊழியர்களாக மாறிய ஆசிரியர்கள் தங்கள் கடமையைவிட உரிமைதான் பெரிது என்று நினைத்துச் செயல்பட்டதும், தனியார் பள்ளிகள் புற்றீசல்களாகக் கிளம்ப அரசு அனுமதித்ததும் காமராஜரின் கனவைத் தகர்ந்தெறிந்துவிட்டன.
 ஏழைகளுக்கு இடமில்லாத கல்விச் சாலைகளை மூடும் துணிவு அரசுக்கு வேண்டும். அப்படிப்பட்ட கல்விச்சாலைகளில் பாடம் நடத்த மாட்டோம் என்று கூறும் மனது  ஆசிரியர்களுக்கு வேண்டும். ஏழைக் குழந்தைகளும் எங்கள் குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று சொல்லும் பெருந்தன்மை பணக்காரப் பெற்றோர்களுக்கு வேண்டும்.
 அந்த நாளும் வந்திடாதோ?

No comments: