SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, March 31, 2013

ON 2 SOCIETY ELECTION -RESULTS


உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு


உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவுமார்ச் 31,2013,07:34 IST

காரைக்குடி: தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 25 சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகள், கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக, இயங்கி வருகின்றன. அவற்றில் தங்கி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.
இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், ஏப்.,1 முதல், உண்டு. உறைவிட பள்ளிகளை மூடிவிடும்படி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும், மாணவர்களை, அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள "ரெகுலர்" பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கும் போது, இரவில் தங்க வைக்க முடியாது. "ரெகுலர்&' பள்ளி மாணவர்களின், படிப்பு வேகத்துக்கு, மாற்று திறனாளி மாணவர்கள் ஈடு கொடுக்க முடியாது. அவர்களை பராமரிக்க உதவியாளர் இன்றி, அவதிப்படும் நிலை ஏற்படும்.
வழக்கமான ஆசிரியர்களே பாடம் நடத்துவதால், மாற்று திறனாளி மாணவர்களின் "சைகை" ஆசிரியர்களுக்கு புரியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, அவர்களின் பெற்றோர், காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும், மாலையில் அழைத்து செல்லவும் முடியாததால், அவர்களின் கல்வி முடங்கும் நிலை உருவாகும், என்றார்.

FOR YOUR THOUGHT


Friday, March 29, 2013

SCHOOL CENSUS EXCEL SHEET FREE DOWNLOAD

பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் . 

தகவலிறக்கம் செய்த பின் பாமினி எழுத்துருவை இன்ஸ்டால் செய்யவும்
அதற்கு இங்கே சொடுக்கவும் 

SECRETARY LETTER REGARDING FREE ISSUES FOR 2013-14


TO DOWNLOAD THIS LETTER CLICK HERE

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை


தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடைமார்ச் 29,2013,09:45 IST


மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
தேனியைச் சேர்ந்த  ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.
ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.
கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்யக் கூடாது என, எனக்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள், ஏற்கனவே ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
தேனி முதன்மைக் கல்வி அலுவலர், 2010 ஆக., 27ல், எனக்கு அளித்த நியமன உத்தரவில், டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கவில்லை. என்னை பணி நீக்கம் செய்வதற்கு தடை விதித்து, டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "மனுதாரரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு


கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடுமார்ச் 29,2013,09:17 ISTபுதுடில்லி: கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும் குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் புள்ளி விபர அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும் திறன் இல்லாமலும் உள்ளன.
மத்திய அரசு உத்தரவு: கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
காலக்‌கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் அச்சட்டத்தை நிறைவேற்றாமல் உள்ளன. கல்வி உரிமை சட்ட விதிகளின்படி போதிய மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதம் இருக்க வேண்டும், போதிய குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அறிவுறுத்தப்பட்டுள்ள வேலை நாட்கள் மற்றும் வேலை நேரம் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் குறைபாடு: மத்திய அரசு 52 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கி இருந்தும் இன்னும் 11 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் திறமையற்ற, முறையான பயிற்சி இல்லாத 8.6 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்ற ஆசிரியர்கள் மேற்குவங்கத்தில் 1.97 லட்சம் பேரும், பீகாரில் 1.86 லட்சம் பேரும், ஜார்கண்ட்டில் 77,000 பேரும் உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று 94 சதவீதம் பள்ளிகள் குடிநீர் வசதி இல்லாமலும், 64 சதவீதம் பள்ளிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி கழிப்பறை இல்லாமலும் உள்ளன.
மாநிலங்கள் கோரிக்கை: போதிய வளங்கள் இல்லாததாலும், அரசியல் தலையீடுகளாலும் கல்வி உரிமை சட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாததால் காலக்கெடுவை மேலும் நீட்டிக்குமாறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் தரமற்ற கல்வி இல்லாததால் திறமையற்றவர்கள் வேறுவழியின்றி ஒவ்வொரு ஆண்டும் பணி அமர்த்தப்பட்டு வருவதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2012ம் ஆண்டு நடத்தப்பட்ட ஏஎஸ்இஆர் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின்படி, அதிக அளவிலான குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் அவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகள் பெரும்பாலும் இந்த இலக்கை எட்டி விட்டதாகவும், மத்திய அரசின் சட்டத்தின் படி கட்டுமான தேவைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், 4 முதல் 5 கோடி மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு நெஞ்சு வலி, மயக்கம் : கிராமத்தினர் முற்றுகை


ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு நெஞ்சு வலி, மயக்கம் : கிராமத்தினர் முற்றுகை
கமுதி: கமுதி அருகே தனியார் பள்ளியில், ஆசிரியர் தாக்கியதில், மாணவனுக்கு மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமுதி அருகே நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர் கோபாலகிருஷ்ணன்,12. இவர் வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை கண்டித்து, வகுப்பாசிரியர் பாலமுருகன்,27, அடித்துள்ளார். இதற்கு மாணவன் கோபால கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று, ஆசிரியர் கம்பால் தாக்கியுள்ளார். இதில் மாணவனின் முகம், தாடை, நெஞ்சு பகுதியில் வீக்கமும், காயமும் ஏற்பட்டது. மயங்கிய மாணவனை, கிராமத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் இல்லாததால், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்த கிளாமரத்துபட்டியினர், கும்பலாக வந்து பள்ளியையும், மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர். மாலை 6 மணிக்கு மேல், டாக்டர் வந்தவுடன் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கமுதி தாசில்தார் குருசாமி சமரசம் செய்தார். பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "" நடந்தது என்ன என, தெரியவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

Wednesday, March 27, 2013

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு


பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு கட்டாயமாக தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் கல்வியாண்டிலிருந்து அமலுக்கு வருகிறது. புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு
தற்காப்பு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்காக நேரம் ஒதுக்கீடு செய்து விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதே போலவே தற்காப்பு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும். ஆபத்து நேரங்களில் மாணவிகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் வகையிலான தற்காப்பு பயிற்சிகள் இந்த வகுப்புகளில் நடத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கான மானிய குழு (யு.ஜி.சி) ஜனவரி மாதத்தில் செயலாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவினர் கல்வி நிறுவன வளாகங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்தும் பாலினம் குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் தற்காப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படுகிறது. இந்த பயிற்சியால் சம்பந்தப்பட்ட மாணவி தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும், சமுதாயத்துக்கும் உதவி செய்ய முடியும். இந்த உத்தரவை வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'

First Published : 27 March 2013 11:59 AM IST
அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. தங்கவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் ஆகியோர், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.
அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 58 லட்சத்து 52 ஆயிரத்து 896 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது தனியார் பள்ளிகளில் படிப்பவர்களைவிட சுமார் 20 லட்சம் அதிகமாகும் என்றார்.
நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 2011-12-ல் 6 லட்சத்து 9 ஆயிரத்து 915 ஆக இருந்தது. 2012-13-ல் இந்த எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிப்பதையே இது காட்டுகிறது என்றார்.

Tuesday, March 26, 2013

இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?


இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?மார்ச் 26,2013,10:50 IST

எழுத்தின் அளவு :
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நன்றாக, தரமான உள்ள கட்டடங்களும், இடிப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை, தமிழக அரசு பாழாக்கலாமா என, அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

சம்பத் மாளிகை: ஒவ்வொரு இயக்குனரகமும், தனித் தனி கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வளாகத்தில், மிகப் பெரிய கட்டடமாக, சம்பத் மாளிகை கட்டடம் உள்ளது. இது, 10 தளங்களைக் கொண்டதாகும். 1985ல், அப்போதையமுதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னிலையில், அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பந்த், திறந்து வைத்துள்ளார். இந்த கட்டடம் கட்டி, 23 ஆண்டுகள் தான் ஆகின்றன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம், பாடநூல் கழகம், மத்திய அரசின், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம், சி.பி.ஐ.,-கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உட்பட பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடம், இடிப்பு பட்டியலில் உள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனரகம்: இதேபோல், சென்னை மாநகராட்சி கட்டடத்தைப்போல் பிரதிபலிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகமும், இடிக்கப்படுகிறது. இது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்தாலும், இன்னும் இந்த கட்டடம் வலுவாகவே உள்ளது. மேலும், இந்த கட்டடம், தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேய அரசு, கோல்கட்டா, மும்பை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில், கல்விக்கென தனி இயக்குனரகத்தை கட்டியது. டி.பி.ஐ., (Directorate of Public Instruction) அதிகாரிகளாக, 1854ல் இருந்து, பல பேர் பதவி வகித்துள்ளனர். இதற்கான பெயர் பட்டியலும், அலுவலகத்திற்கு வெளியே உள்ளது.
எஸ்.எஸ்.ஏ., கட்டடம்: கூவம் ஆற்றை ஒட்டியுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக கட்டடம், 2000த்திற்கு முன்பு கட்டப்பட்டது. வெறும் 13 ஆண்டுகள் ஆன இந்த கட்டடமும் இடிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், தேர்வுத்துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.
அறிவுசார் பூங்கா: தேர்வுத் துறை வளாகத்தில், முந்தைய, தி.மு.க., அரசில், புதிய கூடுதல் கட்டடம், 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடமும், இடிப்பு பட்டியலில் உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து கட்டடங்களை தவிர, மற்ற அனைத்து கட்டடங்களையும், விரைவில் தரை மட்டமாக்கி விட்டு, அனைத்து துறை அலுவலகங்களை உள்ளடக்கி, "ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா" கட்டடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியானது.
அலுவலகங்களை தேடி: புது கட்டடத்தை கட்டுவதில், அரசு வேகம் காட்டுவதால், அனைத்து துறை அதிகாரிகளும், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்குமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல கட்டடங்கள், நன்றாகவே உள்ளன. ஆனாலும், சில கட்டடங்களை தவிர, மற்ற அனைத்தும் இடிக்கப்பட உள்ளன. தற்காலிகமாக, வேறு இடங்களை, வாடகைக்கு பார்க்கும் பணியில் இறங்கி உள்ளோம். நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப, கட்டடங்கள் கிடைக்குமா என்பது, சந்தேகம் தான். ஆவணங்கள் அனைத்தையும், புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊழியர்கள் சிலர் கூறியதாவது: சம்பத் மாளிகை கட்டடம், எஸ்.எஸ்.ஏ., கட்டடம், பள்ளிக் கல்வி கட்டடம், தேர்வுத் துறையில் உள்ள கூடுதல் கட்டடம் ஆகியவை நன்றாகவும், வலுவாகவும் உள்ளன. இது போன்ற கட்டடங்களை இடிப்பதால், மக்களின் பலகோடி ரூபாய் வரிப்பணம் தான் பாழாகும். மெட்ரிக் கல்வி இயக்குனரகம், வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள தேர்வுத் துறை குடோன் உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கலாம். நன்றாக உள்ள கட்டடங்களை தவிர்த்து, மீதமுள்ள இடங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப, ஒருங்கிணைந்த பூங்கா கட்டடத்தை கட்ட வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.
இடிக்கப்படும் கட்டடங்கள்
1. பள்ளிக்கல்வி இயக்ககம்
2. சம்பத் மாளிகை
3. மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
4. தேர்வுத்துறை இயக்குனரகம்
5. எஸ்.எஸ்.ஏ., இயக்குனரக கட்டடம்
6. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
7. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

புது கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? கடந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்வித்துறை அலுவலகங்களை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா கட்டடம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கோட்டூர்புரம் நூலகமும்,  இந்த கட்டடத்தில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 25, 2013

PRIMARY HM SELECTION GRADE 4(3) COMPARISON TABLE

TO DOWNLOAD PRIMARY HM SELECTION GRADE 4(3) COMPARISON TABLE CLICK HERE

PROCEEDING FOR SASTRA UNIVERSITY B.Ed


வாங்கய்யா வாத்தியாரய்யா!


வாங்கய்யா வாத்தியாரய்யா!
எம்.செந்தில்குமார்

தேனியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம் துரைச்சாமிபுரம். சுமார் 1,800 பேர் வசிக்கும் இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள். இந்த ஊரின் வசதி படைத்த மாணவர்கள் டவுனில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிப்பதால், விவசாயக்கூலிகளின் பிள்ளைகள் மட்டுமே துரைச்சாமிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

காலையில் கட்டாயத்தின் பெயரில் பள்ளிக்குச் சென்று வந்த பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமில்லை.வீட்டில் சண்டை, ஊரில் தண்ணீர் வரவில்லை என்றால் அன்று பள்ளிக்கு மாணவர்கள் விடுமுறை எடுத்துவிடுவார்கள். படிப்பில் ஆர்வமில்லாததால், தமிழ் எழுத்துக்கள் கூட மாணவர்களை தலைசுற்றச் செய்தன.இந்தச் சூழலை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த செல்லப்பாண்டியன், தான் துரைச்சாமிபுரம் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதும் ஏழை மாணவர்களுக்கான இலவச டியூசனை தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் யாரும் எட்டிப் பார்க்காத மாலை நேர டியூசன், தற்போது மாலை 5 மணியானதும் 40 மாணவர்களுடன் களைகட்டுகிறது.

நான் ஒரு எம்.ஏ.,எம்.பில்., பி.எட் பட்டதாரி. பல வருடங்களாக நான் விவசாயம் செய்து வந்தாலும் இடையில் 3 வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். அந்த மூன்று வருடங்கள் நான் பார்த்த ஆசிரியர் பணி எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. கல்வி மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை கொண்ட எனக்கு, என் ஊர் மாணவர்களின் நிலையைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. பெற்றோர்களின் அறியாமையும், ஏழ்மையும் இனியும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக நான் ஊராட்சித் தலைவராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே மாலை நேர டியூசனை ஆரம்பித்தேன்" என்கிறார் செல்லப்பாண்டியன்.

தொடக்கத்தில் டியூசன் பக்கம் எட்டிப்பார்க்காத மாணவர்களை வரவைக்க மாணவர்களுக்கு தேவையான நோட்டு,பேனா, புத்தகம் போன்ற உபகரணங்களை வாங்கிக்கொடுத்து டியூசன் பக்கம் இழுத்துள்ளார்.

மாணவர்களுக்கு டியூசன் மட்டுமல்லாது, மாதம் இருமுறை யோகா வகுப்பு, எங்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கணினியைக் கொண்டு கணினி வகுப்பு, நன்னெறி வகுப்பு, நூலக வகுப்பு போன்றவற்றை நடத்தி வருகிறேன். எனக்கு அலுவலக வேலை இருக்கும் நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்காக எங்கள் ஊரில் உள்ள பட்டதாரி ஒருவரை பணியமர்த்தியுள்ளேன்.இவ்வளவு செய்தும் மாணவர்கள் சில நேரம் நம்மை ஏமாற்றிவிட்டு விளையாடப் போய் விடுவார்கள், அவர்களை மறுபடியும் டியூசனுக்கு இழுக்க வாரம் ஒரு முறை பென்சில், பேனா போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்" என்கிறார், செல்லப்பாண்டியன் சிரித்துக் கொண்டே. 

தமிழ் எழுத்துகள் கூட வாசிக்கத் தெரியாத துரைச்சாமிபுரம் ஏழை மாணவர்கள், தற்போது படிப்பில் ஓரளவு வளர்ச்சியடைந்து வருகின்றனர். இவரின் டியூசனில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் மிகவும் வறுமையிலுள்ள தலித் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     முன்னல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும் இலவம் பஞ்சு பொறுக்கப் போவோம்.கிலோவுக்கு 25 ரூபாய் குடுப்பாங்க.அதை வச்சு பேனா, பென்சில், மிட்டாய் வாங்கிப்போம்.இப்ப டியூசன்ல எல்லாம் கிடைக்கிறதால சாயங்காலம் ஆச்சுனா எங்கேயும் போகாம டியூசனுக்கு வந்துடுவோம்"என்று கூறும் 4ம் வகுப்பு மாணவி பிரியா, தற்போது படிப்பில் படுசுட்டி மட்டுமல்லாமல் டியூசனின் ரெகுலர் ஸ்டூடண்ட்.

கற்ற கல்வியும், பெற்ற செல்வமும் பிறருக்குப் பயன்படாவிட்டால் வீண்" எனக் கூறும் இவர், ஊர் மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர் சாக்கடைகள், கழிப்பறைகளை ஒற்றை மனிதராகப் போய் சுத்தம் செய்திருக்கிறார். அதன் விளைவு, இப்போது ஊர் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து, மேற்கண்ட வேலைகளைப் பொறுப்புடன் செய்துவருவதால், ஊரே பளிச்சென்றிருக்கிறது.

நாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என நினைப்பதை விட, நாமே அந்த வேலையைச் செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுக்கும் தங்கள் தவறு புரியும். தற்போது நான் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்றது. மீதமுள்ள என் பதவிக்காலத்திற்குள் துரைச்சாமிபுரத்தை தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றிக் காட்டுவேன்" என உறுதிபடப் பேசுகிறார் செல்லப்பாண்டியன்.

எனக்கென்ன லாபம் அல்லது தனக்கென்ன வந்தது என்று கணக்குப் போட்டு நழுவிக் கொள்ளும் பலருக்கு நடுவே, பதவிக்காலம் முழுக்க ஊருக்கு உதவி செய்யத் துடிக்கும் செல்லப்பாண்டியன் ஒரு முன்னோடித் தலைவர்தான்.

தொடர்புக்கு: 97877 81444

1500 பள்ளிகள் மூடப்படும் அபாயம்?


1500 பள்ளிகள் மூடப்படும் அபாயம்?
ஆ. பழனியப்பன்

ல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்த பிறகு, தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளிகளின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் பெருமளவில் அதிகரித்து வருகின்றது.  இந்நிலையில், வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் செயல்படும் 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உட்பட சுமார் 1,500 பள்ளிகளின் அங்கீகாரம் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு அப்பள்ளிகளில் இல்லாததே முக்கியக் காரணம்.

கும்பகோணம் பள்ளி, தீவிபத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் 2004ல் நிகழ்ந்தது. அது குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான பல விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது. பள்ளிகளில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும், கான்கீரிட் கட்டிடங்களில் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்பதுடன், பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்பதையும் அரசு வரைமுறைப்படுத்தியது.

2005ம் ஆண்டு மெட்ரிகுலேஷன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளுக்கு உட்படாத 1,500 பள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு இல்லாத பள்ளிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், 2009ம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் வந்தது. அச்சட்டத்தின்படி, ஏற்கெனவே அரசு உருவாக்கிய விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். எனவே, அடிப்படை வசதிகள் இல்லாத 2,500 பள்ளிகளுக்கு 2011ல் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு. போதுமான நிலப்பரப்பு அல்லாத பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது, பள்ளிகளை தொடர்ந்து நடத்தக்கூடாது, அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற விதிமுறைக்கு உட்பட்ட பள்ளிகளில் சேர்க்க வேண்டும், முறையாக அரசு அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளை நடத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டது. தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கோரின. எனவே, போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் இப்பிரச்சினையில் ஓர் முடிவை தமிழக அரசு எடுத்தாக வேண்டியிருக்கிறது.

நிலம் தொடர்பான அரசின் விதிமுறையைப் பின்பற்றுவதில் பல சிரமங்கள் இருப்பதாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.

நிலம் தொடர்பான அரசின் விதிமுறைகள் நியாயமானது. ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவுக்கு விளையாட்டு மைதானம் இருப்பது அவசியம். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த நிலப்பரப்பில் பள்ளியை ஆரம்பித்தவர்களால் இப்போது நிலம் வாங்க முடியாது. நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. லீஸுக்கு இடம் வாங்கலாம் என்றால், எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்ற பயத்தில், லீஸுக்கு நிலம் கொடுக்க யாரும் தயாரில்லை. விதிமுறைகளை கறாராக அமல்படுத்துவது என்று அரசு முடிவு செய்தால், போதிய நிலமில்லாத பள்ளிகளை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை" என்கிறார் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் க.ராஜேந்திரன்.

நில அளவு காரணமாக பள்ளிக்கான அங்கீகாரம் பெற முடியவில்லை. அங்கீகாரம் இல்லாததால், பல பிரச்சினைகள் வருகின்றன. பள்ளி வாகனங்களுக்கு பெர்மிட் கூட வாங்க முடியவில்லை. நிலத்தின் மதிப்பு 20 மடங்காக அதிகரித்து விட்டது. எனவே, பள்ளியை ஒட்டி, நிலம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகாமையில் இடம் வாங்கினால், அது ஏற்கப்படுவது இல்லை. பள்ளிக்குப் பக்கத்திலேயே வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அது சாத்தியம்தானா என்பதை அரசு உணர வேண்டும். பள்ளி இயங்கும் இடத்திற்கு ஏற்ப மாணவ, மாணவியர் படிக்கும் வகையில் அனுமதி அளித்து, அரசு உத்தரவிட வேண்டும். ஒரு மாணவருக்கு 10 சதுர அடி வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், 6 சதுர அடி போதும் என்பது எங்கள் கருத்து. எனவே, 20 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட பள்ளிகள், புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து, அரசு சுமுகமாக ஒரு முடிவை எடுத்து வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு, முன்பாக அறிவிக்க வேண்டும்" என்று கூறுகிறார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன்.

அரசு விதிப்படி குறைந்தபட்ச நிலப்பரப்பை உறுதி செய்ய, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை தமிழக அரசு பல முறை நீடித்துவிட்டது. நடப்பு கல்வி ஆண்டுடன் அப்பள்ளிகளுக்கான அங்கீகாரம் முடிவடைகிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசு கறாரான முடிவை எடுக்குமானால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகள் மிஞ்சும் என்பது தெரியாது. சென்னையில் உள்ள பிரபலமான, பெரிய பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கிடையாது. ஆண்டுக்கு ஒருநாள் நேரு விளையாட்டரங்கம் போன்ற இடங்களில் விளையாட்டு தினம் நடத்துவதோடு சரி. அதுபோன்ற பெரிய பள்ளிகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. சாதாரணப் பள்ளிகள் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது" என்கிறார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இதற்கான மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டும்" என்று கூறுகிறார், கல்வியாளர் அருணா ரத்னம்.

நிலம் தொடர்பான பிரச்சினை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் உள்ளது. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள், அரசுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தலாமா என்பது குறித்த விவாதம் கேரளாவில் நடைபெறுகிறது. அங்கு மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு போதிய நிலம் கிடைக்காது. எனவே, மாற்றுவழிகள் குறித்து அங்கு, யோசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓசூர் மாதிரியான திடீர் வளர்ச்சி கண்ட நகரங்களில் இடமே கிடையாது. அதுபோன்ற இடங்களில் உள்ள பள்ளிகளை என்ன செய்யப்போகிறார்கள்? இப்பிரச்சினைக்கு பயனாளிகள் பார்வையில் இருந்து தீர்வுகளைத் தேடுவதுதான் சரியானதாக இருக்கும். இது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்" என்கிறார், அருணா ரத்னம்.

நிலம் இருக்கட்டும், அதைக்காட்டிலும் இன்னொரு முக்கியப் பிரச்சினையை எழுப்புகிறார் பிரின்ஸ். கல்வி உரிமைச்சட்டம் அமலுக்கு வந்து, 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது கட்டாயம். சட்டம் அமலுக்கு வந்து இதுவரை 20,000 பேர் மட்டுமே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர். ஆகையால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். 5 ஆண்டுகள் முடிவதற்குள் எல்லா ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை" என்கிறார், பிரின்ஸ் கஜேந்திரபாபு.

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

அரசுப் பள்ளிகளின் அவலம்

மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், குடிநீர்,  நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசுப் பள்ளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது?

பெரும்பாலும் அரசுப் பள்ளிகள் போதுமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் விஸ்தாரமான விளையாட்டு மைதானங்கள் உள்ளன. பெரும்பான்மையான மாணவர்கள் இன்றைக்கும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்றாலும், அரசுப் பள்ளிகள் பலவற்றில் மாணவர்கள் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. குழந்தைகள் கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சம கல்வி இயக்கம் என்கிற தன்னார்வ அமைப்பு கடந்த டிசம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகளில் ஆய்வு நடத்தினோம். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரியில்லை. பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, எங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, இராமநாதபுரம் மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கிற பள்ளியைக் கண்டறிந்தோம். சேலத்தில் ஆய்வு செய்தபோது,  20 பள்ளிகளில் கழிப்பறையே இல்லை. நான்கிற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 64 பள்ளிகளைக் கண்டறிந்தோம். ஒரேயொரு மாணவர் கூட இல்லாத ஆரம்பப் பள்ளி ஒன்றை, இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கண்டறிந்தோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பள்ளியில் 187 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்" என்று ஆச்சரியமூட்டும் புள்ளி விவரங்களை அடுக்கினார், சம கல்வி இயக்கத்தின் பொதுச்செயலாளர் செல்ல செல்வக்குமார்.

கோவில்பட்டி அருகே என்.சுப்புலாபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஒரு மாணவர் கூட கிடையாது. 1963ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு, 7 மாணவர்களாக குறைந்தனர். கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அவர்களுக்கு 2 ஆசிரியர்கள். அந்த குடும்பமும் வெளியூர் சென்றுவிட்டதால், இப்போது அங்கு ஒரு மாணவர்கூட இல்லை. ஒரு மாணவர் கூட இல்லாமல், 2 ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார்களாம்.  

இந்தப் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி உரிமைச்சட்டம் கூறுகிறது. அக்குழுவில் 75 சதவிகிதம் பெற்றோர்களும் 25 சதவிகிதம் உள்ளாட்சி அமைப்பு மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும். பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலும் இக்குழு அமைக்கப்படவில்லை.

பள்ளிகள் தரம் பிரிப்பால் கல்விச் சூழல் தரமாகுமா?

மிழகத்தில் செயல்படும் நர்சரி பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள்வரை, மொத்தமுள்ள 12,500 பள்ளிகளையும் தரம் பிரிப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம், வகுப்பறை-மாணவர் விகிதாச்சாரம், ஆசிரியர்களின் தகுதி, ஆசிரியர்களின் சம்பளம், விளையாட்டு மைதான நிலப்பரப்பு, நூலகத்தரம் மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கை, பசுமைச்சூழல், சொகுசு வசதிகள், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, பள்ளி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகளைத் தரம் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. A,B,C,D  எனப் பள்ளிகள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன.

கட்டண நிர்ணயம் குறித்து 2009ல் கருத்தறிய விடப்பட்ட கேள்வித்தாளில் (questionnaire), பள்ளிகளால் அளிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பள்ளியின் தரம் நிர்ணயிக்கப்படும்.

மரங்கள் சூழ பசுமையாகக் காட்சியளிக்கும் வளாகம் கொண்ட பள்ளிகள் மட்டுமே, ‘பசுமைச் சூழல்’ கொண்ட பள்ளிகள் என்று கருதப்படும். அழகுக்காக வளர்க்கப்படும் மரங்கள், அல்லது சின்னச்சின்ன செடிகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிகள் ‘பசுமைச் சூழல்’ கொண்ட பள்ளிகளாகக்  கருதப்படாது. மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் 24 மணிநேரமும் மருத்துவ வசதிகள் கொண்ட பள்ளிகளுக்கு, ‘வசதிமிக்க’(sophisticated) பள்ளிகள் என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

மாநகராட்சி அல்லது நகராட்சி போன்ற அமைப்புகளுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களை வாடகைக்கு எடுக்கும் பள்ளிகள், விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளிகளாகக் கருதப்படாது. செயல்பாடு மற்றும் நிர்வாகம் குறித்த விவரங்களை பெற்றோர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

மாணவர்-பெற்றோர் குறைதீர்ப்புப் பிரிவு, கட்டண விவரங்களை தகவல் பலகையில் தெரிவித்தல், பள்ளியின் இணையதளத்தில் பள்ளியைப் பற்றிய விவரங்களை வெளியிடுதல், குறித்த காலங்களில் பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றுக்கு மதிப்புப் புள்ளிகள் (Points)வழங்கப்படும். ஆசிரியர்களுக்கான பயிற்சி, வகுப்பறைச் சூழல், சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் போன்ற அளவுகோல்களின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இந்தச் செயல்பாடுகள் உதவும் என்று அரசு கருதுகிறது.

மாணவர் சேர்க்கையைப் பொருத்தளவில், பெரும்பாலான மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஆனால், அந்த மாணவர்கள் கற்றுக்கொண்டது என்ன என்பதைப் பார்க்கிறபோது, பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நல்ல மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் ‘சி’ அல்லது ‘டி’ கிரேடு பள்ளியிலிருந்து வந்தவராக இருந்தால், அவர் தரம் குறைந்த பள்ளியிலிருந்து வந்தவர்தானே என்று பார்க்கப்படமாட்டாரா? அரசுப் பள்ளிகளில் எத்தனை ‘ஏ’ அல்லது ‘பி’  கிரேடு பெறும்? அரசு நிர்வாகங்களில் ஊழல் மலிந்து கிடக்கும் சூழலில், என்ன விலை கொடுத்தாவது, ‘ஏ’ கிரேடு வாங்கிவிட வேண்டும் என்று பள்ளிகள் முயற்சிக்காதா? சி, டி கிரேடு பள்ளி மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படாதா? பள்ளிகளின் தரத்தை உயர்த்த, வேறு சரியான முறைகளை அரசு கையாள முடியாதா? அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை விரைவுபடுத்தாதா என அரசின் இந்த முயற்சி பல கேள்விகளை எழுப்புகிறது.

Sunday, March 24, 2013

01.06.1988


bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 600 006.

e.f. v© 13368 / o4 / 2012, ehŸ 22.03.2013

bghUŸ :
bjhl¡f¡ fšé ÚÂk‹w Ô®¥ghiz¡F£g£L Cuh£Á x‹¿a bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça®fS¡F 01.06.1988 ¡F Kªija¥ gâ¡fhy¤ij nj®Î ãiy / Áw¥ò ãiy tH§Ftj‰fhd murhiz eilKiw¥gL¤Jjš muR TLjš étu« nfhUjš rh®ªJ.

gh®it :
1.        muR¡ foj« v© 8846/í2/2012-7, ehŸ 21.03.2013
2.       bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f. v© 13368/o4/2012, ehŸ 05.02.2013
... ... ...
nk‰F¿¤j bghUë‹ ÛJ mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fë‹ mtru ftd« cldoahf <®¡f¥gL»wJ.

nk‰F¿¤j bghUŸ rh®ghf, ÚÂk‹w¤Âš Miz bg‰wt®fë‹ tH¡Ffis¥ ËtUkhW tif¥gL¤Â mj‰fhd étu§fis xU thu fhy¤Â‰FŸ muR¡F mD¥òkhW gh®it 1š fhQ« muR¡ foj¤Âš gâ¡f¥g£LŸsjhš , ËtU« étu§fis ÏU ÃuÂfëš 26.03.2013 m‹W ÚÂk‹w tH¡FfŸ F¿¤J  Ïa¡ff¤Âš eilbgW« MŒÎ¡ T£l¤Âš x¥gil¡FkhW mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

ϪãfœÎfëš  ÚÂk‹w Ô®¥ghiz bg‰w eg®fŸ rh®ghf,

(1)      nk‰fhQ« eg®fëš jF k‰W« éÂfë‹go gçÓyid brŒJ Miz Ãw¥Ã¡f (to consider and pass orders on merits and in accordance with law) m¿ÎW¤j¥g£l ne®Îfëš

m)    1.6.1988 Kjš 31.12.1995 Koa cŸs fhy¤Âš (mjhtJ IªjhtJ CÂa¡FG fhy«) nj®Î ãiy / Áw¥ò ãiy vŒÂat®fŸ éÂfë‹go nk‰fhQ« murhiz v©.234‹ gyid bgW« g£r¤Âš mt®fsJ v©â¡if k‰W« mj‰fhd bryéd« F¿¤j étu§fŸ.
(rh®ªj ÚÂk‹w Ô®¥ghiz efšfSl‹)

M)    31.12.1995¡F ÃwF (mjhtJ IªjhtJ CÂa FG fhy« ÃwF) nj®Î ãiy / Áw¥ò ãiy vŒÂat®fŸ éÂfë‹go nk‰fhQ« murhiz 234‹ gyid bgw jFÂa‰wt®fshæU¥Ã‹ mt®fŸ bghU£L Kj‹ik¢ bray® mšyhj k‰w ÃuÂthÂfŸ mséš Miz Ãw¥Ã¡f¥gL« g£r¤Âš mt®fŸ msényna Miz Ãw¥Ã¤J mj‹ efšfŸ (muÁ‹ jftY¡fhf).
(rh®ªj ÚÂk‹w Ô®¥ghiz efšfSl‹)

Ï)     nkny Ïu©oš F¿¥Ã£l ne®Îfëš, Kj‹ik brayhs® mséš Miz Ãw¥Ã¡F« ne®ÎfŸ mj‹ Ûjhd fU¤JU¡fŸ. (rh®ªj ÚÂk‹w Ô®¥ghiz efšfSl‹)


(2)    nk‰fhQ« ÚÂk‹w Ô®¥ghiz bg‰w eg®fëš, F¿¥ghd MizfŸ (Specific direction) bg‰w ne®Îfëš :-

m)    1.6.1988 Kjš 31.12.1995 Koa cŸs fhy¤Âš nj®Î ãiy / Áw¥ò ãiy vŒÂat®fS¡F nk‰fhQ« murhiz 234‹ gy‹fis tH§F« bghU£L mªj eg®fë‹ v©â¡if k‰W« mj‰fhd bryéd« F¿¤j étu§fŸ.
(rh®ªj ÚÂk‹w Ô®¥ghiz efšfSl‹)


M)    31.12.1995¡F ÃwF nj®Î ãiy / Áw¥ò ãiy vŒÂat®fŸ nk‰fhQ« murhiz 234‹ gy‹fis bgw jF bgwhjg£r¤Âš mªne®Îfëš :-

(i)            rÛg fhy¤Âš (cjhuzkhf m¡nlhg® 2012 Kjš) bgw¥g£l Ô®¥ghizfŸ ÛJ nkšKiwpL brŒa muR tH¡f¿Pçl« r£l¡ fU¤Âid bg‰W mj‹ étu§fŸ
(rh®ªj ÚÂk‹w Ô®¥ghiz efšfSl‹)


(ii)          m¡nlhg® 2012¡F K‹ò bgw¥g£l (Specific direction) Ô®¥ghizfŸ bghU¤jtiuæš mªne®ÎfŸ F¿¤j étu« k‰W« mjid brašgL¤JtJ rh®ªJ mªeg®fë‹ v©â¡if k‰W« bryéd étu§fŸ.
(rh®ªj ÚÂk‹w Ô®¥ghiz efšfSl‹)


nkY«, ÚÂk‹w tH¡FfŸ rh®ghd MŒÎ¡ T£l¤Âš kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, f©fhâ¥ghs® k‰W« cjéahs® fyªJ bfhŸs nt©L« vd¤ bjçé¡f¥g£lJ. j‰nghJ, nk‰g¤Âfëš nfhu¥g£l étu§fŸ rh®ghf ko¡fâåÍl‹ fâåahs® xUtU« TLjyhf tu nt©L« v‹gijÍ«, 26.03.2013 m‹W fyªJ¡bfhŸS« kht£l¤ bjhl¡f¡ fšé mYty® jéu f©fhâ¥ghs®, cjéahs® k‰W« fâåahs® M»nah® 26.03.2013 k‰W« 27.03.2013 M»a 2 eh£fS« MŒÎ¡ T£l¤Âš fyªJ¡bfh©L, nk‰g¤Âfëš nfhu¥g£L bfh©Ltu¥gL« étu§fSlD« k‰W« ÏJ rh®ghf V‰fdnt Ïa¡ff¤Âš x¥gil¡f¥g£l étu§fSlD« muR nfhçathW étu§fis kht£l thçahf¤ jahç¤J bjhF¤J më¤Âl nt©L« vdΫ mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F« bjçé¡f¥gL»wJ.

vdnt, mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS« Ï¥bghUëš jå¡ftd« brY¤Â, nk‰F¿¤j bghUëš muR nfhça étu§fis muR gâ¤JŸs fhy¡bfLé‰FŸ x¥gil¡F« tifæš étu§fis MŒÎ¡ T£l¤Â‰F jtwhkš bfh©LtUkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

ÏJ äfΫ mtru«.
bjhl¡f¡ fšé Ïa¡Fe®
bgWe®
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ

10+2+3


bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 600 006.
e.f. v© 011900 / o1 / 2011, ehŸ    23.03.2013

bghUŸ :
jäœehL bjhl¡f¡ fšé rh®ãiy¥gâ 10+2+3 v‹w Kiwæš fšé gæyhkš j‰nghJ MÁça®fshf gâòçgt®fŸ étu« nfhUjš rh®ò.
... ... ...
Cuh£Á x‹¿a / efuh£Á / khefuh£Á / muR bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfëš 10+2+3 v‹w Kiwæš fšé gæyhkš j‰nghJ gâòçÍ« MÁça®fë‹ x‹¿a thçahd v©â¡if étu§fis  Ïiz¥Ãš F¿¥Ãl¥g£l got§fëš  26.03.2013  njÂa‹W bjhl¡f¡ fšé Ïa¡ff¤Âš eilbgW« MŒÎ¡ T£l¤Âš më¤Âl mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
nkY« ÏJ rh®ªJ ÚÂk‹w¤Âš tH¡F bjhL¤jt®fë‹ étu§fis ϤJl‹ Ïiz¡f¥g£LŸs got« 2-Y«, tH¡F bjhL¤J Ô®¥ghiz bg‰wt®fëš Ô®¥ghizæ‹ efèidÍ« bfh©Ltu mid¤J kht£l bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
Ïiz¥ò - 1
bjhl¡f¡ fšé Ïa¡Fe®.
bgWe®
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ.


Ïiz¥ò

got« -1
Cuh£Á x‹¿a / efuh£Á / khefuh£Á / muR bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfëš 10+2+3 v‹w Kiwæš fšé gæyhkš j‰nghJ gâòçÍ« MÁça®fë‹ v©â¡if étu«

kht£l« -
t. v©
x‹¿a«
eãgjM
g£ljhç MÁça®
bjhgjM
ÏãM
bkh¤j«
jäœ
M§»y«
fâj«
m¿éaš
tuyhW
Ãwghl«
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
12
bkh¤j«kht£l bjhl¡f¡ fšé mYty®.
got« -2
Cuh£Á x‹¿a / efuh£Á / khefuh£Á / muR bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfëš 10+2+3 v‹w Kiwæš fšé gæyhkš j‰nghJ gâòçÍ« MÁça®fëš gjé ca®Î nfhç tH¡F bjhl®ªJŸst®fë‹ v©â¡if étu«
kht£l« -
t. v©
x‹¿a«
eãgjM
g£ljhç MÁça®
bjhgjM
ÏãM
bkh¤j«
jäœ
M§»y«
fâj«
m¿éaš
tuyhW
Ãwghl«
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
12
bkh¤j«kht£l bjhl¡f¡ fšé mYty®.