மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
By dn, சென்னை
First Published : 25 April 2013 12:29 PM IST
அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் தமிழ் ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படிப்பை முடித்து விட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் சரியான ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததே ஆகும். எனவே இந்த நிலை மாறினால் மட்டுமே மாணவர்களின் கல்விதரம் உயர்த்த முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சர்வே குறிப்பில் தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க தெரியாத மாணவர்கள் பலர் உள்ளனர்.
எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படவில்லையெனில் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment