கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடுஏப்ரல் 27,2013,10:44 IST
சென்னை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்களின், கல்வி நிலையை மேம்படுத்த, மிகப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 289 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 34,749 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012-13ம் ஆண்டில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 53 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
2013-14ம் ஆண்டு, இப்பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment