விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்
By நாகப்பட்டினம்,
First Published : 27 April 2013 04:49 AM IST
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவினருக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, மாணவர் சேர்க்கை குறித்த தனியார் பள்ளி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது :
6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி பெறும் உரிமையும், வேறு பள்ளிக்கு மாற்றம் கோரும் உரிமையும் உண்டு. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு எந்தக் காரணத்துக்காகவும் கல்வியை மறுக்கக் கூடாது. சேர்க்கைக் காலம் முடிந்திருந்தாலும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
நாகை மாவட்டத்தில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளையும் 100 சதவீதம் பள்ளியில் சேர்க்க வேண்டும். நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத சேர்க்கையை அனைத்துத் தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
நிகழ் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவினருக்கான 25 சதவீ சேர்க்கையை அனைத்துத் தனியார் பள்ளிகளும் முழுமையாக உறுதி செய்து, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட செயலாக்கத்தில் நாகை மாவட்டம் முதன்மைப் பெற தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் லலிதா, மாவட்டக் கல்வி அலுவலர் வீர. வெள்ளைச்சாமி, உதவிக் கல்வி அலுவலர்கள் வி. சிவகுமார், ராஜமாணிக்கம் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment