ஊட்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், அளவு சரியில்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு, நான்குஜோடி, சீருடை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில்உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும், கடந்த வாரம்சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களுக்குவழங்கப்பட்ட பேன்ட், சர்ட் அளவு சரியில்லாமல்தைக்கப்பட்டிருந்தன.
சில சீருடைகள், கிழிந்தும் காணப்பட்டன. மேலும், சில மாணவர்களுக்கு, இறுக்கமாகவும், சிலமாணவர்களுக்கு, "தொள தொள" எனவும் ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பள்ளிஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: சீருடைகள், மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளன. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரை கால் பேன்ட் வழங்கப்படுகிறது.
குளிர் பிரதேசமான நீலகிரியில், 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, முழுக் கால் சட்டைஅணிந்து தான், பள்ளிக்கு வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் சீருடையை, மாணவர்கள்பயன்படுத்த தயங்குகின்றனர். பயன்படுத்த தகுதியற்ற நிலையில், சீருடைகள் வழங்கப்படுவதால்,அரசு பணம் தான் விரயமாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்
--
No comments:
Post a Comment