Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Friday, August 30, 2013
மாதவம்
மங்கையராய் பிறப்பதற்கே
நல் மாதவம் செய்திருக்க
வேண்டும்ம்மா
சாத்திரம் பேசியே சிறை பட்டு விடாமல்
சிறகை விரித்தே பறந்து விட்டாய்
பறக்க வேண்டும் என்று நீ
நினைத்து விட்டபோது
எல்லைக்கோடு எல்லாம்
இடலாகுமா?
மகளிர் மசோதா 33 க்கே
முக்கிக் கொண்டு இருந்தால்
50 ஆவது எப்போது.?
நீ எண்ணிவிட்ட எண்ணங்களை எல்லாம்
எய்திடவே –இயக்கம்
போராட்டம் என்னும் போர்க்கொடியைத்
தந்து விட்டது
பெண்ணே. வெற்றி என்ற மகுடம் சூட்ட
நீ விரைந்தே வந்திடுவாய்
புறப்படுவாய் போர்களத்திற்கு.
சி.பிரபா.மாநில பொதுக்குழு உறுப்பினர். த.தொ.ஆ.கூட்டணி. நாகப்பட்டின
வெற்றியின் விளைநிலம்
ஆசிரியர் இனத்தையே இழிவாக்கி
போராட்டம் என்ற போர்களத்திலே
நிறுத்திட்டாய்.
போராடி பெற்ற சலுகைகளை எல்லாம்
போராடாமலேயே எங்களிடமிருந்து
பறித்திட்டாய்
இன்று தருவாய், நாளை தருவாய்
எனறு காத்திருக்கச் செய்து
ஏமாற்றி விட்டாய்
துடிக்கும் உணர்வுகளை துா ண்டிவிட்டாய்
தெருவுக்கு வர மாட்டோம் என்றே
கருதிவிட்டாய்
ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி தள்ளி விட்டாய்.
ஆசிரியச் சமுதாயத்தையேஇழிவு படச் செய்து
விட்டாய்
கடமைகளை ஒழுங்காய் முடித்திட்டோம்
உரிமைகளை பெற்று சென்றிடவே
போராட்டக் குரல் ஒலித்திடவே
இயக்க்க் கொடிதனை ஏந்திடவே
வீறுநடையிட்டே வந்திட்டோம்.
வெற்றியின் விளைநிலம் சிறையே யாயினும்
அந்தச் சிறையை நிரப்பியே
வென்றிடுவோம்
சி.பிரபா.மாநில பொதுக்குழு உறுப்பினர். த.தொ.ஆ.கூட்டணி. நாகப்பட்டினம்
Thursday, August 29, 2013
மாணவிகளிடம் சில்மிஷம் : தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த அரங்கமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்முனி, மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்வதாக, மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் குணசேகரன், நலத்துறை தாசில்தார் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புகார் குறித்து விசாரணை நடத்தி, கலெக்டரிடம் அறிக்கையை சமர்பித்தனர்.அறிக்கையை ஆய்வு செய்ததில், பொதுமக்கள் கூறிய சம்பவங்கள் உண்மை என தெரிய வந்ததைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் வாழ்முனியை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, August 28, 2013
பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்
கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.
இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது. எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் அந்தப்பள்ளியில் காலியிடம் இல்லை என்பதால், அங்கு அவரை அந்தப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்துவிட்டது.
எனவே அவரை காலியிடம் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிக்கு, கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் ஐகோர்ட்டில் சூசைமகேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கூடம் மூடப்பட் டதில் இருந்து இதுவரை எனக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் தரப்படவில்லை. அவற்றை தருவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். ஆசிரியர் சூசைமகேசுக்கு இன்னும் 4 வாரங்களுக்குள் பாக்கிச்சம்பளம் மற்றும் சலுகை ஆகியவற்றை வழங்க வேண்டும். அவர் அடுத்த பள்ளியில் வேலைக்கு சேரும்வரை மாதாமாதம் அவருக்குள்ள சம்பளத்தை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Tuesday, August 27, 2013
டி.இ.டி., வினாத்தாள் மோசடி: ஊத்தங்கரையில் 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் தருவதாக கூறி, 6 லட்ச ரூபாய் மோசடி செய்த, இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான அரசு பள்ளி தலைமையாசியர் உள்ளிட்ட, மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 25. இவர் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.அதே ஊரை சேர்ந்தவர் வீரமணி, 35, இவரது உறவினர் கூச்சானூரை சேர்ந்த செந்தில்குமார், 40, இவர் வேலூர் மாவட்டம், காக்கங்கரை அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.வீரமணியும், செந்தில்குமாரும் சேர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாளை வழங்குவதாக கூறி ராமசாமியிடம் இருந்து, 6 லட்ச ரூபாய் வாங்கினர். தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் வினாத்தாள் கொடுத்தனர். தேர்வில் அவர்கள் கொடுத்த வினாத்தாளில் இருந்து கேள்விகள் வரவில்லை. தேர்வுக்கு பின் ராமசாமி, வீரமணி, செந்தில்குமாரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்."பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்வோம்' என, வீரமணி, செந்தில்குமார், அவரது மனைவி யசோதா, 35, செந்தில்குமாரின் தந்தை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனி, 60, மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரகாஷ், 36, ஆகியோர் ராமசாமியை மிரட்டினர்.ராமசாமி ஊத்தங்கரை போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் விசாரித்து, வீரமணி , பழனி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான தலைமை ஆசிரியர் செந்தில்குமார், அவரது மனைவி யசோதா, பிரகாஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sunday, August 25, 2013
சிகரத்தை நோக்கி...
சிகரத்தை நோக்கி...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற பேரியக்கமானது தன் வரலாற்றுச் சுவடுகளை காலக்கோடுகளில் பதித்த இயக்கம்.
1946 ல் பெல்லாரியில் தென்னிந்திய ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்பட்ட மாநாட்டில் கல்லூரி பேராசிரியர்கள்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நடத்தப்பட்ட நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பதை எண்ணிய மாஸ்டர்வா.இராமுண்ணி அவர்கள், அம் மாநாட்டுப் பந்தலிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கென தனியான இயக்கம் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு,அன்று தொடங்கப்பட்டது தான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
1947 ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக மிதிவண்டியில் சென்று போராடி பெற்று தந்தவர்கள் ,1956-ல் பென்சன்,கிராஜீவிட்டி,மற்றும் பணி நீடிப்பு –என நாம்இன்று அனுபவிக்கும் ஒவ்வொரு சலுகையுமே போராடி தான் பெற்றுள்ளார்கள்.
போராட்டம் இல்லாத வாழ்க்கை ருசிக்காது,
போராட்ட களமே காணாத இயக்கம் நிலைக்காது.
நமக்காக போராடிய , கொடி ஏந்திய கைகள் பல. அவர்களின் கைகள் இன்றும் ஓயவில்லை.அவர்களின் மனதில் இயக்க அலை இன்னும் அடங்க வில்லை.
ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பக்கத்தில் ஓடுபவனை பார்த்துக் கொண்டு இருந்தால் வெற்றி பெற முடியாது.அது போல விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் இயக்கத்திற்காக உழைக்க வேண்டிய நேரங்கள் தான் வீணடிக்கப்படுகின்றன.
நமக்கு தேரோட்டுபவன் கண்ணன். சல்லியன் அல்ல என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். படி, படியாக வளர்ந்து சிகரத்தின் உச்சிக்கு சென்ற பிறகு, சிகரத்தை தொடும் தூரத்தை மட்டும் பார்த்தால் போதும்.
காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள்.அதற்காக மரம் என்ன காய்க்காமலா நின்று விடும்.அவர்கள் விமர்சனங்ளே நம் இயக்கத்தின்உயர்வுக்கு, இலட்சியத்துக்கும் அடிக்கோலாய் அமையும்.
துரு பிடித்த இதயங்களை தூக்கி போட்டு,உயர்ந்த இலட்சியங்களை கொண்டே, இயக்கம் சொல்லும் பாதையிலே இணைந்திடுவோம்.
சிறை நிரப்பியே சிகரத்தை தொட்டு விடுவோம்.
சி.பிரபா. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாகப்பட்டின
Saturday, August 24, 2013
Thursday, August 22, 2013
காமராசர் பல்கலை: தொலைநிலை பி.எட்., சேர்க்கை
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மேல்நிலை பள்ளியில் இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில அரசு விதிப்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்வு நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.
விண்ணப்பம் மற்று ம்கையேடுகளை பல்கலைக்கழக சேர்க்கை மையத்தில் செப்டம்பர் 6 வரை பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Wednesday, August 21, 2013
Tuesday, August 20, 2013
Monday, August 19, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு: மூன்று வாரங்களில் விடைகள் வெளியீடு
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்தனர். இரண்டு தாள்களையும் சேர்த்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இந்த ஆண்டு (2013) மொத்தம் ஆறு லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாம் தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடந்தன. முதல் தாளை 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினர்.
மொழிப் பாடங்கள் கடினம்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உளவியல் பாடத்தில் கேள்விகள் பொதுவாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 60 மையங்களில் நடந்த இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
மூன்று வாரங்களில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டு தாள்களுக்கான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விடைகள் வெளியிடப்பட்ட பிறகு, தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட காலியாகவுள்ள மொத்தம் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வின்போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தேர்வினை எழுத பெண்கள் 73 சதவீதம் பேரும், ஆண்கள் 27 சதவீதம் பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
சென்னையில் எத்தனை பேர்? சென்னை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 96 பேர் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 24 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களில் அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தனர்.
சில மையங்களில் தேர்வுக்கூட அலுவலர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படாததால் அவர்கள் தேர்வர்களிடம் இருந்து 10 நிமிஷங்களுக்கு முன்பாகவே விடைத்தாள்களை பெற்றதாக புகார்கள் எழுந்தன.
சென்னை மாவட்டத்திலும் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெளிவு இல்லாத ஹால் டிக்கெட்: தேர்வுக்கூடங்களை தேடி அலைந்த தேர்வர்கள்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் தாள் தேர்வின்போது தேர்வு மையங்களை தேர்வர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) சரியான விவரங்களைக் குறிப்பிடாததே இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்று புகார் கூறப்படுகிறது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வு மையத்தின் பிரதான சாலையின் பெயர் மற்றும் ஊர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனால், எந்தப் பள்ளி, அது எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தேர்வர்கள் திணறினர்.
குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என்றே அழைக்கப்படுகின்றன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கு, சென்னை பள்ளி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஆண்கள் பள்ளியா பெண்கள் பள்ளியா எந்தப் பகுதியில் இருக்கிறது என்கிற விவரங்கள் ஏதும் இல்லை. இதனால் தேர்வர்கள் தேர்வுக்கூட மையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
டி.என்.பி.என்.சி., முன்மாதிரி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் தேர்வு மையத்தின் விவரத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். இதனால், தேர்வு மையத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கிறது. அதே நடைமுறையை ஆசிரியர் தேர்வு வாரியமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகளைக் குறிப்பிடும்போது மிகவும் கவனமாக அது எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தை முழுமையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதி.சி.பிரபாவின் இயக்க உரை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1946 ல் துவங்கப்பட்டு. பெரிய ஆலம் விருட்சமாய் தன் விழுதுகளை கீழே இறக்கியும்.பல்வேறு கிளைகளை விட்டும் .சூறாவளி வந்தாலும். ஏன் சுனாமியே வந்தாலும. பலமுடன் எதிர்கொள்ளக் கூடிய மிகப் பெரிய ஒரு இயக்கம்.
அவ்வப்போது சில கிளைகள் முறிந்து விழத் தான் செய்கின்றன.கிளைகள் விழுவதால் மரத்துக்கும் ஒன்றும் பாதிப்பில்லை.தன்னுள் மீண்டும் புதிய கிளைகளை விட்டு விட்டு தான் செல்லப் போகிறது.
நமக்கு இயக்கம் என்ன செய்தது என்று பார்க்காமல் இயககத்திற்கு நாம் என்ன செய்து இருக்கிறோம்
என இன்று முதலாவது எண்ணிப் பார்ப்போம்.நாம் உறுப்பினராக இருந்தாலும் சரி. பொறுப்பாளராக இருந்தாலும் சரி.நாம் அங்கு இருந்த சுவடுகளை பதித்து விட்டு செல்லுங்களேன்.
பிறந்தோம். வாழ்ந்தோம். மறைந்தோம் என்று இல்லாமல்
பிறந்தோம்.வாழ்ந்தோம், வாழ்கின்றோம் என்ற எண்ணத்தோடு
இயக்க வரலாற்றில் இடம் பிடிக்கலாமே?
குடும்பத்தில் குழப்பங்கள் இருக்கலாம். இது சகஜம்.இதற்காக நம்ம குடும்பத்தை விட்டு விடுவோமா?
அப்படின்னு மற்றவர்கள் தவறாக நினைத்தால் அது அவர்களுடைய முட்டாள் தனம்.
நான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்று சொல்லிக் கொள்வதில் நாம் சந்தோஷப்பட வேண்டும்.நாம் இவ்வளவு வசதிகள் இருந்தும் நாம் ஒன்றுபட முடியவில்லை என்றால். அன்று எந்த வசதியுமே இல்லாமல் மாஸ்டர் இராமுண்ணியும். ஜே.எஸ், ஆர் அவர்களும் நமக்காக என்ன கஷ்டப்பட்டு இருப்பார்கள்.எதற்காக? நம் ஊதியத்தை . நம் சலுகைகளை நாம் பெற.
இன்று வயது முதிர்ந்த நிலையிலும் நமக்காக . ஒவ்வொரு மாவட்டமாக. சில கிளைகளாக சென்று தன் உரையால் நம்மை எழுச்சி பெற செய்வதற்காக ஓடோடி வருகிறாரே.நமக்காக.நாம் முழு ஊதியத்தை பெறுவதற்காக.
நாம் சலுகைகள் பெறுவற்காக.
அவருக்கு .நம் இயக்கத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம். செப்டம்பர் 25 ல் இருந்து நடைபெறக் கூடிய தொடர் மறியல் போராட்டத்தில் முழுமையாக . முழு மனதுடன் கலந்து கொள்வோம். 26-ம் தேதி மகளிர் அனைவரும் பங்கேற்று வெற்றி அடையச் செய்வோம்.
சும்மா இருந்திருந்தால் கிடைத்திருக்குமா? சுதந்திரம்.
வீரனுக்கு ஒரு முறை தான் சாவு. கோழைக்கோ தினம் தினம் சாவு. வீர பெண்மணிகள் பலரை பெற்ற நாடு இது.நீ ஊதியம் பெற்றால் அதனால் உன் குடும்பம் தான் சந்தோசப்படப் போகிறது. 2800தர ஊதியம் பெறும் ஆசிரியப் பெருமக்களே.
மாதம் உங்களுக்கு ரூ.8550 தரப்பட வில்லை என்று வீட்டில் சொல்லுங்கள்.
இலட்சக்கணக்காணோர் ஒவ்வொரு ஆசிரியர் பின்னால்இருக்கிறோம் என்பதை எந்த நிலையிலும் மறக்காதே.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - என்பது அன்றைக்கு மட்டுமல்ல. இன்றைக்கும் தான் என்பதை மறந்து விடாதே.
குட்ட குட்ட குனிந்தால் குட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்
நிமிர்ந்து பார்.குட்டுவது நிறுத்தப்படும்.
இறதி வெற்றி நமதாக இருக்கட்டும்
வாழ்த்துக
Sunday, August 18, 2013
தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்காத ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
செப்டம்பர் 2-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை, ஆக.18-
தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்காத ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 2-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சேலத்தில் நடத்தும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் செல்வம். இவர், 31-10-2009 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இதற்கிடையில், அவர் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர் 30-10-2009 அன்று ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தலைமை ஆசிரியர் செல்வம் மீதான குற்றச்சாட்டை 3 மாதங்களுக்குள் விசாரித்து, இறுதி உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் பிறப்பிக்க வேண்டும்’ என்று 14-7-2010 அன்று உத்தரவிட்டார்.
விசாரிக்கவில்லை
ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் செல்வம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கவில்லை. இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யவும், தன்னை பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரரான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
நேரில் ஆஜராக உத்தரவு
இதையடுத்து செல்வம் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, 2 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்த இறுதி உத்தரவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அரிபரந்தாமன் கடந்த ஜூலை 10-ந் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், 2 வாரங்கள் முடிந்து பல நாட்களாகியும் விசாரணை நடத்தவில்லை. இதையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் மீது, நீதிபதி அரிபரந்தாமன், தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவமதிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் வரும் செப்டம்பர் 2-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)