SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, February 28, 2013

POSTER FOR DELHI MARIYAL


பொது பட்ஜெட் : வருமான வரி விலக்கு உச்சவரம்பு சம்பளதாரர்கள் ஏமாற்றம்



பதிவு செய்த நேரம்: 28-2-2013 15:13
மாற்றம் செய்த நேரம்: 28-2-2013 15:39
சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, நிதியமைச்சர் இன்று வரிச் சலுகை அறிவிப்பார் என்று தனியார் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று ப.சிதம்பரம் அறிவித்தார். இதனால் தனியார் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளது ஆறுதலாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்
- See more at: http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=42091#sthash.zsIv4EJj.dpuf

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க புதிய திட்டம்



First Published : 27 February 2013 12:34 PM IST
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்களும், சலுகைகளும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடா வருடம் குறைந்து கொண்டு வருகின்றது. எனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுகக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டம் வாரியாக உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

Tuesday, February 26, 2013

கல்வி அதிகாரிகள் மீது தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு



பிப்ரவரி 26,2013,07:49 IST


திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, திருச்சி நகரத்தில், 39 அரசு உதவிப்பெறும் மற்றும், 26 மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 65 தலைமையாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களை, ஏர்செல் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதாக, தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.திருச்சி: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, ஏ.இ.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, சில தலைமையாசிரியர்கள் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை, ஏர்செல் மொபைல் போஸ்ட் பெய்டு சிம்கார்டு வாங்க வேண்டும் என, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
கடந்த ஆட்சியில், ஏர்செல் நிறுவனம் மூலம், ஏ.இ.ஓ., முதல், இயக்குனர் வரை, சி.யூ.ஜி., முறையில் சிம்கார்டு வழங்கப்பட்டது. ஆட்சி மாறிய பின், அதே நிறுவனத்தில், சிம்கார்டு வாங்க சொல்லி வலியுறுத்துவது சந்தேகமாக உள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவின்றி, ஏர்செல் நிறுவனத்தின் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, மாவட்ட அதிகாரிகள், இந்த காரியத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது.
வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் ரெங்கராஜன் கூறியதாவது: தமிழகத்தில், திருச்சியில் மட்டுமே, தலைமையாசிரியர்கள் ஏர்செல் நிறுவன சிம்கார்டு வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஏர்செல் நிறுவனத்தின் சிம்கார்டு வாங்கவேண்டும் என, தமிழக அரசோ, பள்ளிக் கல்வித்துறையோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த தனியார் நிறுவனத்திடம், கமிஷன் பெற்றுக்கொண்டு, சில அதிகாரிகள், அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.
தலைமையாசிரியர்களுக்கு விரோதமான, இச்செயலை, உடனடியாக கைவிடவேண்டும். இதுகுறித்து, கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான, திருச்சி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் கூறுகையில், "திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவின்படியே, தலைமையாசிரியர்களை, ஏர்செல் சிம்கார்டு வாங்கச் சொன்னேன். மற்றபடி, எனக்கும், இந்த விஷயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார்.
திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், "ஏ.இ.ஓ.,க்கள் முதல், இயக்குனர் வரை, ஏர்செல் பயன்படுத்துகின்றனர். சி.யூ.ஜி., முறையில், இவர்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏ.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களிடம், கட்டணமின்றி இலவசமாக பேசவே, இந்த சிம்கார்டு வாங்கச் சொன்னேன். இதற்காக, அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விருப்பமுள்ள, தலைமையாசிரியர்கள் வாங்கினால் போதும்; யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என, ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்; மற்றபடி இதில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை" என்றார்.

மாணவியை கடத்தி பலாத்காரம் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை



கருத்துகள்



சென்னை : வடசென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமலன் (38). இந்த பள்ளியில் மாலா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் 1 படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அமலன் ஆங்கில பாடம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 2010 ஜனவரியில் அமலனும், மாலாவும் தலைமறைவாயினர். மகளை காணா  மல் தவித்த மாலாவின் பெற்றோர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாலாவை பல இடங்களில் தேடினர். 

இந்நிலையில், மாலாவை ஆசிரியர் அமலன் ஜனவரி 5ம் தேதி வேளாங்கண்ணிக் குக் கூட்டிச் சென்று, ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அங்கு மாலாவை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் புதுச்சேரிக்கு கூட்டிச் சென்று ஆரோவில்லில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கும் மாலாவை பலாத்காரம் செய்துள்ளார். 3 நாளுக்குப்பிறகு சென்னைக்கு கூட்டி வந்துள்ளார்.

 சென்னை வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமலன் மீது மாலாவின் பெற்றோர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அமலனை கைது செய்து, மைனர் பெண் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரா னார். முக்கிய சாட்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம¢ ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கட்டாயப்படுத்தி மாணவியை பாலி யல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது. 

இதையடுத்து, குற்றச்சாட்டுகள் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அமலனு க்கு ஆயுள் தண்டனையும் 21 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.  தீர்ப்பை கேட்பதற்காக அமலனின் தாய் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத் துக்கு வந்திருந்தனர். அவர்கள் அமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டதும் கதறி அழுதனர்.    

மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு



பிப்ரவரி 26,2013,07:39 IST


ஆசிரியர் குழுவினர், பாடங்கள் சம்பந்தபட்ட பொருட்களுடன், பள்ளி வாரியாக நேரில் ஆஜராகி மாணவ, மாணவியருக்கு கண்காட்சி மற்றும் செய்முறை விளக்கங்களுடன், அறிவியலை கற்பிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான யுக்திகளை கல்வித் துறை கையாண்டு வருகிறது.சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
சிறப்பு வகுப்புகள், பாடங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல், பல்வேறு வகையான கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் என, பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த வரிசையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், புதுமையான கற்பித்தல் திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த, "ஈவன்ட் எஜூ சிஸ்டம்" என்ற நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40 பள்ளிகளில் செயல்படுத்தியது. பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு, 40 அறிவியல் உபகரணங்களைக் கொண்டு, பள்ளி வாரியாக சென்று மாணவ, மாணவியருக்கு, அறிவியலைப் பற்றி விளக்கியது.
பயிற்சி குழுவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், "காந்தத்தின் பண்புகள் என்றால், காந்தங்களின் வகைகளை காட்டி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறோம். மலரின் பாகங்கள் எனில், மிகப்பெரிய மலரை, மாணவர்கள் முன் வைத்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும், தனித்தனியாக காட்டி விளக்குகிறோம். இதேபோல், பல கண்காட்சிகளை நடத்தும் திட்டங்கள் உள்ளன,&'&' என்றார்.
இத்திட்டம் மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்ததாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Monday, February 25, 2013

பி.டி.ஏ., எனப்படும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது



பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013,04:13 IST
பி.டி.ஏ., எனப்படும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. முறைகேடுகளை மறைப்பதற்காகவே, ஆண்டுக்கு, இரு முறை நடத்த வேண்டிய, பொதுக்குழுகூட்டத்தை கூட்டுவதில்லை என, கூறப்படுகிறது.

சங்கங்களுக்கான சட்டத்தின் படி, 1964ல், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டது. பெற்றோர்-ஆசிரியர் இடையே, நல்லுறவை ஏற்படுத்துவது, கல்விப் பணியில் ஈடுபடுவது, பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக, மாநில அளவில், இந்த அமைப்புஏற்படுத்தப்பட்டது.

வருவாய் அதிகம்:பள்ளிக்கல்வித் துறையின் மேற்பார்வையில், இந்த அமைப்பு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கு, பள்ளிகள், புத்தகங்கள் விற்பனை மூலமாக, பல லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது.வருவாய்-செலவு கணக்கு விவரங்களை, முறையாகபராமரிப்பது கிடையாது எனவும், பி.டி.ஏ., நிதியில், முறைகேடு நடப்பதாகவும், துறைவட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆண்டுக்கு இரு முறை, பொதுக்குழுவை கூட்டி,உறுப்பினர்கள் முன், அமைப்பின், வருவாய்-செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால், முந்தைய ஆட்சி காலத்திலேயே, சரியாக பொதுக்குழு கூடவில்லை; ஒரே ஒரு முறை மட்டும், பொதுக்குழு கூடியது; 
அதன்பின், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுக்குழு கூடவில்லை என, முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பதவி காலாவதி:மாவட்டத்திற்கு, நான்கு உறுப்பினர்கள் வீதம், 32மாவட்டங்களுக்கு, 128 உறுப்பினர்கள், அரசு சார்பில், ஐந்துஉறுப்பினர்கள், பி.டி.ஏ., தலைவ ராக இருக்கும், பள்ளிக்கல்வி அமைச்சர், 10 உறுப்பினர்களையும், பரிந்துரை செய்து, நியமனம் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் தான்.அதன்பின், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவேஇருந்த உறுப்பினர்களின் பதவிக்காலம், காலாவதி ஆகி, பல ஆண்டுகள் ஆகிறது.

புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யவோ, பொதுக்குழுவை கூட்டவோ, இந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரும், அக்கறை காட்டாதது ஏன் என, முன்னாள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதிய உறுப்பினர்களை சேர்க்க வும், பொதுக்குழு கூட்டத்தை, முறையாக நடத்தவும், பி.டி.ஏ., முன் வராததற்கு, அதில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் தான் காரணம் எனவும், அவர்கள்சந்தேகிக்கின்றனர்.

அரசின், பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், பி.டி.ஏ.,வில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தகுதியானவர்களின் பெயர் பட்டியலை பெற்று, பணி நியமனம் செய்கின்றனர்; இதுவும் முறையாக நடப்பது இல்லை.அதிகார வரம்பில் இருப்பவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை, பி.டி.ஏ.,வில் சேர்த்துவிடுகின்றனர் என்ற புகாரும் உள்ளது.

பி.டி.ஏ., பொருளாளராக இருப்பவர், கணக்காளர் பணியையும் கவனித்து வருகிறார். விதிமுறைப்படி, இது தவறு என்றும், பி.டி.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேரம் எங்கஇருக்குது? பி.டி.ஏ.,வில், முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் கூறியதாவது:பணி நியமனம், நிர்வாகம், கலந்தாய்வு, தினமும் பல்வேறுகூட்டங்கள் என, இதிலேயே நேரம் கரைந்துவிடுகிறது. இதில், பி.டி.ஏ.,வில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க நேரம் இல்லை. 

அங்கு, பணிபுரியும் ஒருவரே, தன் மகனை, தினக்கூலி அடிப்படையில், பணி நியமனம் செய்த விவகாரம் தெரிந்ததும், உடனடிநடவடிக்கை எடுத்து, சம்பந்தபட்டவரை, பணியில் இருந்து நிறுத்திவிட்டோம்.

மேலும், பி.டி.ஏ.,வில் நடக்கும், பணி நியமனங்களை முறைப்படுத்தவும், நிர்வாகத்தை உன்னிப்பாக கவனிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணிகளையும், ஒரு மாதத்தில் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்

Advertisement


பி.டி.ஏ., பொருளாளராக இருப்பவர், 

Sunday, February 24, 2013

DAILY THANTHI NEWS


INSPECTION REPORT FOR PRIMARY AND MIDDLE SCHOOLS

DOWNLOAD FOR INSPECTION REPORT FOR ALL PRIMARY AND MIDDLE SCHOOLS UNDER DIRECTOR OF ELEMENTARY EDUCATION IN PDF FORMAT  CLICK HERE 


Wednesday, February 20, 2013

TO GET NO OBJECTION CERTIFICATE FROM ELEMENTARY EDUCATION FOR GETTING A PASSPORT


TO GET NO OBJECTION CERTIFICATE FROM ELEMENTARY EDUCATION FOR GETTING A PASSPORT FOLLOW THE LINK

சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி : அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு




Advertisement
 
 

Advertisement
 

 
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2013,22:39 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 20,2013,00:35 IST
பேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், "புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, February 19, 2013

strike circular


nagai block general body resolution




CPS NEW ACCOUNT SLIP - 8.6%

CLICK HERE TO DOWNLOAD NEW CPS ACCOUNT SLIP ACCORDING TO G.O.38 WITH INTEREST 8.6% FROM 1.12.2011

koottani block general body meeting photos



--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Sunday, February 17, 2013

INCOME TAX CIRCULAR FOR 2012-2013

CLICK HERE TO DOWNLOAD INCOME TAX CIRCULAR FOR THE FINANCIAL YEAR 2012-2013

தொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10,000 பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வில் பாதிப்பு



கருத்துகள்

நெல்லை: தொடக்க கல்வி துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன, இதில் ஒரு அம்சமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக 2004ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை போல் பதவி உயர்வு வழங்க வாய்ப்பு இல்லை.இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு வருகின்றனர். ஆனால் இப்படி வரும் பட்டதாரி ஆசிரியர்களது மூதுரிமை பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த நாள் ஒன்றையே குறிப்பிட்டு பின்பற்றப்படுகிறது. அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை மாற்றம் பெறுவதால் பணி காலத்தில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை பதவி உயர்வு இழப்பு ஏற்படுகிறது என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில இணைச் செயலர் ராஜாமுகமது தெரிவிக்கிறார். ஒரே தேர்வு எழுதி பட்டதாரி ஆசிரியராக தொடக்க கல்வி துறையில் நியமனம் பெற்று பின்னர் பள்ளி கல்வித்துறைக்கு மாறிய சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது மன வருத்தத்தை தருகிறது என அவர் தெரிவித்தார்.இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள மனுவில் எந்த சூழ்நிலையிலும் தனி நபர் ஒருவர் பாதிக்கப்படக் கூடாது என்ற அரசின் எண்ணத்தை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வாரிய தர எண் அடிப்படையில் மூதுரிமை வழங்க நடவடிக்கை எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டியுள்ளனர்

.