மாற்றம் செய்த நேரம்: 28-2-2013 15:39
சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, நிதியமைச்சர் இன்று வரிச் சலுகை அறிவிப்பார் என்று தனியார் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று ப.சிதம்பரம் அறிவித்தார். இதனால் தனியார் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளது ஆறுதலாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்
- See more at: http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=42091#sthash.zsIv4EJj.dpuf
No comments:
Post a Comment