SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, February 17, 2013

தொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10,000 பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வில் பாதிப்பு



கருத்துகள்

நெல்லை: தொடக்க கல்வி துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன, இதில் ஒரு அம்சமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக 2004ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை போல் பதவி உயர்வு வழங்க வாய்ப்பு இல்லை.இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு வருகின்றனர். ஆனால் இப்படி வரும் பட்டதாரி ஆசிரியர்களது மூதுரிமை பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த நாள் ஒன்றையே குறிப்பிட்டு பின்பற்றப்படுகிறது. அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை மாற்றம் பெறுவதால் பணி காலத்தில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை பதவி உயர்வு இழப்பு ஏற்படுகிறது என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில இணைச் செயலர் ராஜாமுகமது தெரிவிக்கிறார். ஒரே தேர்வு எழுதி பட்டதாரி ஆசிரியராக தொடக்க கல்வி துறையில் நியமனம் பெற்று பின்னர் பள்ளி கல்வித்துறைக்கு மாறிய சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது மன வருத்தத்தை தருகிறது என அவர் தெரிவித்தார்.இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள மனுவில் எந்த சூழ்நிலையிலும் தனி நபர் ஒருவர் பாதிக்கப்படக் கூடாது என்ற அரசின் எண்ணத்தை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வாரிய தர எண் அடிப்படையில் மூதுரிமை வழங்க நடவடிக்கை எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டியுள்ளனர்

.

No comments: