கருத்துகள்
சென்னை : வடசென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமலன் (38). இந்த பள்ளியில் மாலா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் 1 படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அமலன் ஆங்கில பாடம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 2010 ஜனவரியில் அமலனும், மாலாவும் தலைமறைவாயினர். மகளை காணா மல் தவித்த மாலாவின் பெற்றோர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாலாவை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில், மாலாவை ஆசிரியர் அமலன் ஜனவரி 5ம் தேதி வேளாங்கண்ணிக் குக் கூட்டிச் சென்று, ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அங்கு மாலாவை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் புதுச்சேரிக்கு கூட்டிச் சென்று ஆரோவில்லில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கும் மாலாவை பலாத்காரம் செய்துள்ளார். 3 நாளுக்குப்பிறகு சென்னைக்கு கூட்டி வந்துள்ளார்.
சென்னை வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமலன் மீது மாலாவின் பெற்றோர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அமலனை கைது செய்து, மைனர் பெண் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரா னார். முக்கிய சாட்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம¢ ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கட்டாயப்படுத்தி மாணவியை பாலி யல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றச்சாட்டுகள் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அமலனு க்கு ஆயுள் தண்டனையும் 21 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பை கேட்பதற்காக அமலனின் தாய் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத் துக்கு வந்திருந்தனர். அவர்கள் அமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டதும் கதறி அழுதனர்.
No comments:
Post a Comment