By dn, சென்னை
First Published : 27 February 2013 12:34 PM IST
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்களும், சலுகைகளும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடா வருடம் குறைந்து கொண்டு வருகின்றது. எனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுகக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டம் வாரியாக உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment