'அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்'
Advertisement
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- ரோட்டில் நடந்து செல்பவர்கள் கூட முதல்வர் வேட்பாளர்கள்: ஸ்டாலின் ஆகஸ்ட் 22,2015
- முன்ஜாமின் கிடைக்காததால் இளங்கோவன் 'எஸ்கேப்' ஆகஸ்ட் 22,2015
- வரி ஏய்ப்பு வழக்கு: செப்டம்பர் 21ல் கலாநிதிக்கு மீண்டும் 'சம்மன்' ஆகஸ்ட் 22,2015
- ராஜா, மனைவியிடம் விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு ஆகஸ்ட் 22,2015
- வங்கிகளின் வாராக்கடன் நிலையை தாங்க முடியலே: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கவலை ஆகஸ்ட் 22,2015
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
Advertisement
மாற்றம் செய்த நாள்
22ஆக2015
02:08
பதிவு செய்த நாள்
ஆக 21,2015 23:19
ஆக 21,2015 23:19
அலகாபாத்:'அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளி யில் மட்டுமே சேர்க்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்க, அரசு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, சுதிர் அகர்வால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:அரசுத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், தங்கள் குழந்தைகளை, அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகள், நீதித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தை களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தடுக்க, மாநில அரசு, அபராதம் விதிக்கலாம்.
தனியார் பள்ளிகளில் எவ்வளவு கல்விக் கட்டணம் செலுத்துகின்றனரோ, அதே தொகையை அபராதமாக வசூலித்து, அரசு கருவூலத்தில் சேர்க்கலாம். இதுகுறித்து, மாநில தலைமைச் செயலர், ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
வாசகர் கருத்து (19)
- புதியவை
Hariharan Parameswaran - chennai,இந்தியா
அரசு பள்ளிகள் மோசம் என்று யார் எப்போது கூற ஆரம்பித்தார்கள்? எனக்கு விவரம் தெரிந்த வரை 1971 வரையில் அரசு ஆரம்ப பள்ளிகூடங்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நன்றாக தான் நடந்து கொண்டு இருந்தன. அதற்கு பிறகு அரசு மற்றும் அரசுதவி பெரும் பள்ளிகளில் நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனம் செய்யபடாததால் மற்றும் அரசின் குறுக்கீடுகள் (இதற்கு அர்த்தம் சிபாரிசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் வாதிகள் )வர தொடங்கிய பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அனுபவமும், நேர்மையும் பண்பும் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதனால் கல்வியின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. பின்பு சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்கள் ( தரத்தில் ) கொஞ்சம் கொஞ்சமாக தர்ம சிந்தனையை விட்டு ஒழிக்க தொடங்கிய பிறகு மொத்தமாக அரசு பள்ளியில் வேலை என்பது எந்த வேலையாக இருக்கட்டும் அது ஒரு ஒழுக்க கேட்டிற்கு உரிமை வழங்கப்பட்டது போல் ஆகி விட்டது. இத்துடன் எதற்கு வேண்டுமானாலும் ஆட்குறைப்பு செய்யலாம் ஆனால் ஆசிரியர் பணிக்கு ஆட்குறைப்பு செய்யப்பட்டது அதற்கு ஆயிரம் காரணங்களை கூறினாலும் ஆசிரியர் தன கடமையை ஒழுங்காக செய்வதை தடுக்கும் விதமாக சங்கங்கள், அரசின் இலவச திட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணியமர்த்த படுவது போன்ற அரசின் செயல்களால் மொத்தமாக அரசு பள்ளிகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து படி படியாக தனியாரின் கட்டுபாட்டிற்கு சென்று விட்டது. அத்துடன் சமுதாய சிந்தனையும் திசை திரும்பி அரசு என்றாலே மோசம் என்ற என்னத்தை வளர்த்து விட்டதனால் இப்போது அரசு நடத்தும் பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் மோசம் என்ற நினைப்பு எல்லாருக்கும் அகில இந்திய அளவில் நிலைத்து விட்டது. ஒரு அவசரகால திட்டமாக நேர்மையாக மிக மிக தரமான ஆசிரியர்கள் நியமித்து அவர்களுக்கு எல்லாவிதமான சூழ்நிலைகளையும் உருவாக்கி அவர்களின் தரத்திற்கு அவர்களை பொறுப்பாகினால் மட்டுமே தற்போதைய அரசு பள்ளிகளின் நிலைமை இன்னும் வரும் 10=15 வருஷங்களில் உயரும் இல்லாவிட்டால் எல்லோரும் இதே மாதிரி வெளியில் நின்று ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு நம் குழந்தைகளையும் சந்ததியினரையும் பாழ் படுத்தி அதற்கான பெருமையை ஏற்று அதற்கு பொன்விழா 2021இல் கொண்டாடலாம்.
Share this comment
Kumar - bangalore,இந்தியா
இது நீதிபதியின் யோசனை மட்டும் தான் இது தீர்ப்பின் சாராம்சம் கிடையாது. இது போன்ற சட்டங்களை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் தான் தீர்மானிக்க முடியும். இந்த யோசனை சரி என்று நீதிபதி நினைக்கலாம் ஆனால் நடைமுறையில் இது தேவையற்ற ஒன்று. அரசு பள்ளிகளை எப்படி தரம் உயர்த்தவேண்டும் என்று அரசு யோசித்து அதை நிறைவேற்ற முயற்சித்தாலே மிகவும் சிறப்பானது. நான் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன் இப்போது ஒரு விமான துறை சார்ந்த பொறியாளராக உலகின் மிக சிறந்த ஒரு நிறுவனத்தில் பனி புரிகின்றேன். அரசு பள்ளியில் படித்தால் இதை அடைய முடியாது என்பது தவறான கருத்து.
Share this comment
Close X
ஆப்கன் காபூலில் குண்டுவெடிப்பு : 13 பேர் காயம்
இ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2015 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us