அலகாபாத்:'அனைத்து அரசு ஊழியர்களும், தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளி யில் மட்டுமே சேர்க்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்க, அரசு அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, சுதிர் அகர்வால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:அரசுத் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், தங்கள் குழந்தைகளை, அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகள், நீதித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தை களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தடுக்க, மாநில அரசு, அபராதம் விதிக்கலாம்.
தனியார் பள்ளிகளில் எவ்வளவு கல்விக் கட்டணம் செலுத்துகின்றனரோ, அதே தொகையை அபராதமாக வசூலித்து, அரசு கருவூலத்தில் சேர்க்கலாம். இதுகுறித்து, மாநில தலைமைச் செயலர், ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசு பள்ளிகள் மோசம் என்று யார் எப்போது கூற ஆரம்பித்தார்கள்? எனக்கு விவரம் தெரிந்த வரை 1971 வரையில் அரசு ஆரம்ப பள்ளிகூடங்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நன்றாக தான் நடந்து கொண்டு இருந்தன. அதற்கு பிறகு அரசு மற்றும் அரசுதவி பெரும் பள்ளிகளில் நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனம் செய்யபடாததால் மற்றும் அரசின் குறுக்கீடுகள் (இதற்கு அர்த்தம் சிபாரிசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் வாதிகள் )வர தொடங்கிய பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அனுபவமும், நேர்மையும் பண்பும் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதனால் கல்வியின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. பின்பு சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்கள் ( தரத்தில் ) கொஞ்சம் கொஞ்சமாக தர்ம சிந்தனையை விட்டு ஒழிக்க தொடங்கிய பிறகு மொத்தமாக அரசு பள்ளியில் வேலை என்பது எந்த வேலையாக இருக்கட்டும் அது ஒரு ஒழுக்க கேட்டிற்கு உரிமை வழங்கப்பட்டது போல் ஆகி விட்டது. இத்துடன் எதற்கு வேண்டுமானாலும் ஆட்குறைப்பு செய்யலாம் ஆனால் ஆசிரியர் பணிக்கு ஆட்குறைப்பு செய்யப்பட்டது அதற்கு ஆயிரம் காரணங்களை கூறினாலும் ஆசிரியர் தன கடமையை ஒழுங்காக செய்வதை தடுக்கும் விதமாக சங்கங்கள், அரசின் இலவச திட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணியமர்த்த படுவது போன்ற அரசின் செயல்களால் மொத்தமாக அரசு பள்ளிகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து படி படியாக தனியாரின் கட்டுபாட்டிற்கு சென்று விட்டது. அத்துடன் சமுதாய சிந்தனையும் திசை திரும்பி அரசு என்றாலே மோசம் என்ற என்னத்தை வளர்த்து விட்டதனால் இப்போது அரசு நடத்தும் பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் மோசம் என்ற நினைப்பு எல்லாருக்கும் அகில இந்திய அளவில் நிலைத்து விட்டது. ஒரு அவசரகால திட்டமாக நேர்மையாக மிக மிக தரமான ஆசிரியர்கள் நியமித்து அவர்களுக்கு எல்லாவிதமான சூழ்நிலைகளையும் உருவாக்கி அவர்களின் தரத்திற்கு அவர்களை பொறுப்பாகினால் மட்டுமே தற்போதைய அரசு பள்ளிகளின் நிலைமை இன்னும் வரும் 10=15 வருஷங்களில் உயரும் இல்லாவிட்டால் எல்லோரும் இதே மாதிரி வெளியில் நின்று ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு நம் குழந்தைகளையும் சந்ததியினரையும் பாழ் படுத்தி அதற்கான பெருமையை ஏற்று அதற்கு பொன்விழா 2021இல் கொண்டாடலாம்.
நாட்டையும் நாட்டு மக்களையும் திருத்த இப்படிச் சட்டம் இயற்றி ,அமலாக்கினால் மட்டுமே கல்வி சிறக்கும்.கலவி வியாபாரம் படுக்கும். நல்ல ஆசிரியர்களும் உருவாவார்கள். இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்தியர்களின் கண்ணைத் திறந்தவர்,பாராட்டுக்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் அரசு பள்ளிகளில் படிப்பது சாதாரணம். நம்ம ஊரில் தனியார் பள்ளிகள் தான் சிறந்தன என்று சொல்லி நல்ல வியாபாரம் நடக்கிறது. இது முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த தீர்ப்பின் முக்ய அம்சம் இந்த மாதிரியாவது அதிகாரிகளை வற்புறுத்தி சேர்க்க செய்தால் அரசு பள்ளி தரம் உயரும் என்பதுதான்.இந்த தீர்ப்பை கொடுத்த நீதிபதியை பாராட்டுகிறேன்.
இது நீதிபதியின் யோசனை மட்டும் தான் இது தீர்ப்பின் சாராம்சம் கிடையாது. இது போன்ற சட்டங்களை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் தான் தீர்மானிக்க முடியும். இந்த யோசனை சரி என்று நீதிபதி நினைக்கலாம் ஆனால் நடைமுறையில் இது தேவையற்ற ஒன்று. அரசு பள்ளிகளை எப்படி தரம் உயர்த்தவேண்டும் என்று அரசு யோசித்து அதை நிறைவேற்ற முயற்சித்தாலே மிகவும் சிறப்பானது. நான் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன் இப்போது ஒரு விமான துறை சார்ந்த பொறியாளராக உலகின் மிக சிறந்த ஒரு நிறுவனத்தில் பனி புரிகின்றேன். அரசு பள்ளியில் படித்தால் இதை அடைய முடியாது என்பது தவறான கருத்து.
'அரசு அதிகாரிகள் பிள்ளைகள், அரசுப் பள்ளி யில் மட்டுமே சேர்க்க வேண்டும்' கட்டாயம். அப்பொழுதுதான் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முயற்சி செய்வார்கள். இல்லையேல் நெலைமை இன்னும் மோசம் ஆகும்....
முதலில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் ..அதனால் மாணவர்கள் எண்ணிக்கை கூடும் ... தரம் சரி இல்லை என்றால் ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்பார்கள் ...கண்டிப்பாக தரம் உயரும் ..நல்ல முயற்சி ....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.