SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, April 25, 2014

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

ந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி
அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).
அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.
பூங்கொடிக்கு வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் தும்பேரி சென்றார். அங்கு நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
ஓட்டுப்பதிவு எந்திரங்களை பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் எடுத்து செல்ல நள்ளிரவு ஆனது. இதனையடுத்து வேகமாக பணிகளை முடித்து விட்டு அந்த வாக்குச்சாவடியில் இருந்த அனைவரும் ஊருக்கு செல்ல வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
நள்ளிரவு 1.30 மணிக்கு பூங்கொடி அரக்கோணம் ரெயில்கள் நிற்கும் இடத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வேகமாக வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பூங்கொடி மீது மோதியது.
ரெயில் என்ஜினீல் சிக்கிய ஆசிரியை உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலின் ஒருபகுதி ரெயிலில் தொங்கியபடி சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இதனால் ரத்தம், சதையுமாக அவரது உடல் சிதறியது. இதனை பார்த்து அவருடன் வந்த ஆசிரியர்கள் திடுக்கிட்டு அலறினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியை உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியை பூங்கொடியின் மகள் சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 4–ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. பூங்கொடியும் அவரது கணவரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பூங்கொடி இறந்ததால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Sunday, April 20, 2014

DINATHANTHI NEWS ABOUT NAGAI KOOTTANI GENERAL BODY MEETING


மதிப்பூதியத்தை உயர்த்தி தர வாக்குச் சாவடி அலுவலர்கள் கோரிக்கை

மதிப்பூதியத்தை உயர்த்தி தர வாக்குச் சாவடி அலுவலர்கள் கோரிக்கை

First Published : 20 April 2014 02:43 AM IST
வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதையொட்டி, வாக்குச் சாவடி அலுவலர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் தங்க. மோகன், சி. பிரபா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை நகரச் செயலாளர் தாமோதரன், வட்டாரச் செயலாளர்கள் கி. பாலசண்முகம், சண்முகசுந்தரம், சரவணன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பூ. திருமுருகன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விரைவாக விலையில்லா சீருடைகள் வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்காததைக் கருத்தில் கொண்டு, வரும் கலந்தாய்வில் முன்னுரிமைப் பட்டியல்படி பதவி உயர்வு வழங்கக் கேட்டுக் கொள்வது.
வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பதையொட்டி, வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியைக் கேட்டுக் கொள்வது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ப. ஜோதி நன்றி கூறினார்.

Saturday, April 19, 2014

வாழ்த்துக்கள் அண்ணே

சிவகங்கை மாவட்டச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேவியர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

Friday, April 18, 2014

ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொதுக்குழு செய்தி 18.04.2014


photos of asiriyar koottani podhukuzhu

சின்னப் பாட்டிதோட்டத்திலே சிவப்புத் தக்காளி !

சின்னப் பாட்டிதோட்டத்திலே சிவப்புத் தக்காளி !


வி.எஸ்.சரவணன்

''திமுக்கு தக்கா திமுக்கு தக்கா
திமுக்கு தக்காளி
சின்னப் பாட்டி தோட்டத்திலே
சிவப்புத் தக்காளி
சமைக்கும் முன்னே தொண்டைக்குள்ள
நீர் சுரந்துச்சே
சக்கை பிழிஞ்சு போட்ட இடத்தில்
விதை முளைச்சுச்சே... ''

ம.லெ.தங்கப்பாவின் இந்தப் பாடலுக்கு, மொட்டு வகுப்பில் படிக்கும் சிட்டுகளின் நடனத்துக்கு பலத்த கைத்தட்டல். தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதையே மறந்து, பார்வையாளர்கள் ரசித்தனர்.
திருப்பூர், தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் கலை விழாவில்தான் இந்த அழகுக் காட்சி.ஒரு பள்ளியின் கலைவிழா என்றால், அந்தப் பள்ளியில் இருந்து 20 அல்லது, 30 மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். ஆனால், இந்தப் பள்ளியிலோ, படிக்கும் 300 மாணவர்களும் பாடல், நடனம், நாடகம் என்று ஏதாவது ஒன்றில் கலக்கி எடுத்தனர். மேலும், சமூக விழிப்பு உணர்வு உண்டாக்கும் பல்வேறு விஷயங்களை எளிமையாகவும் அழகாகவும் மாணவர்கள் நடத்தினார்கள்.
பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு, ''இந்தத் தாய்த் தமிழ்ப் பள்ளியை 1995 முதல் நடத்திவருகிறோம். எங்கள் பள்ளியின் கலைவிழா இந்தப் பகுதி மக்களிடையே புகழ்பெற்றது. வெறும் நடனம், ஃபேஷன் நிகழ்ச்சியை நடத்தி, பரிசு கொடுப்பது இல்லை. சூழலியல் தொடர்பான செய்திகளையும் நமது நாட்டுப்புறக் கலைகளையும் பிஞ்சு மனங்களில் பதியவைப்பதே எங்களின் நோக்கம்'' என்றார்.
தக்காளி பாடல் முடிந்ததும், மரபணு மாற்றத்தினால் வரும் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட தனிநபர் நாடகம், வாழைப்பழத்தில் மருந்து வைத்துத் தருவதைப் போல, சிரிப்போடு சிந்தனையையும் தூண்டியது.
நம்மாழ்வார் வேடமிட்டு வந்த ஒரு மாணவன், ''நமது ஆரோக்கியமான உணவுமுறை எப்படி மாறிப்போனது தெரியுமா?'' என்று கேட்டு, அவரைப்போல பேசிக் காட்டினான். காந்தி வேடத்தில் வந்த மாணவன், வெள்ளைக்காரர் தந்த கல்விச் முறை பற்றிசொன்னது சிந்திக்கவைத்தது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கரகாட்டம் பற்றி ஒரு சுவையான ஃப்ளாஷ்பேக் சொன்னார்கள். ''இதுக்காக, தனியாகப் பயிற்சி ஆசிரியர்கள் யாரும் கிடையாது. 10 ஆண்டுகளுக்கு முன், சிவகாமி என்ற ஆசிரியை இந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கரகாட்டம்  கற்றுத்தந்தார். பிறகு, அவர் பணியில் இருந்து விலகிட்டார். அடுத்த வருஷம்  அந்த மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். இது அப்படியே தொடர்ந்து, 10 ஆண்டுகளாக சீனியர் மாணவர்களே, ஜூனியர் மாணவர்களுக்குக் கற்றுத்தந்து அரங்கேற்றம் செய்கிறோம்'' என்றார் ஒரு மாணவி.
பரதம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், சக்கை குச்சி நடனம், பறை என்று விதவிதமாக அசத்தினர்.
நான்காம் வகுப்பு மாணவர்கள் நடித்த 'கல்லணை’ நாடகம், வரலாற்று நிகழ்வுகளைப் பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்தது.
ஒழுங்கற்ற நம் உணவுமுறை, சூழலியல் பாதுகாப்பு என  முழுக்க முழுக்க சமூக விழிப்பு உணர்வை மையமாகவைத்து நடந்த இந்தப் பள்ளியின் ஆண்டு விழா, மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் ஒரு பாடம்.
நாமும் கைதட்டி வரவேற்போம்.

Tuesday, April 15, 2014

20 கி.மீ. தூரத்துக்குள் தேர்தல் பணியிடம் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Paper news about vedaranyam agitation


ஆசிரியைகளுக்கு அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

ஆசிரியைகளுக்கு அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் - ஆசிரியைகளுக்கு குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்படும் எனத் தெரிகிறது.
அதற்கு முன்னோட்டமாக தேர்தல் பணிகள் பற்றிய 2-ம் கட்ட பயிற்சிகளை 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள ஒன்றியங்களில் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டகிளையினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.தேர்தல் பணியாற்றும் ஆசிரியைகள் எளிதில் சென்றுவரும் வகையில் 20 கிலோமீட்டருக்குள் உள்ள வாக்குச்சாவடிகளில் பணி வழங்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போது 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதனை மாற்றி பெண் ஆசிரியைகளுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பயிற்சி வகுப்பும், பணியும் வழங்க ஆட்சியர் ஆவன செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Monday, April 14, 2014

REQUEST FOR CONTINATION FOR WORKING DAYS FOR ELEMENTARY SCHOOLS

தேர்தல் பயிற்சிக்கும் தேர்தல் பணிக்கு சென்று வருவதற்கும் இலவச பேருந்து வசதி செய்து தருவதாக நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவாதமளித்தார்






பாராளுமன்றத் தேர்தல் 2014 தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பணியமர்த்தப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பும் மிகத் தொலைவில் உள்ள ஒன்றியங்களிலேயே நடத்தப்படுகிறது.   
                இதை கோரிக்கையாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக  நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஏப்ரல் 12 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது . நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மனு அளித்திருந்தனர்.
                வேதாரண்யம் வட்டாட்சியர்  14.04.2014 அன்று காலை பேச்சு வார்த்தைக்கு ஆசிரியர் சங்கங்களை அழைத்திருந்தார். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சென்ற போது பேச்சுவார்த்தைக்கு அவர்கள் அழைக்கப்படவில்லை.
                    இதனால்  இன்று ( 14.04.2014) அன்று வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. 300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     வேதாரண்யத்துக்கு விரைந்து வந்த நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் மாவட்டச் செயலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தை திரும்ப பெறும்படியும் மாலைக்குள் ஒரு நல்ல பதிலை அளிப்பதாகவும்  நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டம் கைவிடப்பட்டது.
     இன்று மாலை 6 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் திரு. லெட்சுமிநாராயணன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் திருகாந்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் திரு. பார்த்தசாரதி மற்றும் இயக்கப்பொறுப்பாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
     இந்திய நாடு முழுவதும் தேர்தல் பணியமர்த்துவதில் இந்த முறையே பின்பற்றப்படுவதால் நாகை மாவட்டத்துக்கு மட்டும் பயிற்சியையும் தேர்தல் பணியையும் மாற்றிமையக்க முடியாதென நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

     தேர்தல் பயிற்சிக்கும் தேர்தல் பணிக்கு சென்று வருவதற்கும் போக்குவரத்து வசதி வேண்டுமென இயக்கப்பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் இலவச பேருந்து வசதி செய்து தருவதாக உத்தரவாதமளித்தார்

Thursday, April 03, 2014

SPORTS HOSTEL, CENTRE OF EXCELLENCE, SPORTS HOSTEL EXCELLENCE ADMISSION - 2014-2015 - REG.




--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை