பாராளுமன்றத் தேர்தல் 2014 தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பணியமர்த்தப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பும் மிகத் தொலைவில் உள்ள ஒன்றியங்களிலேயே நடத்தப்படுகிறது.
இதை கோரிக்கையாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது . நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மனு அளித்திருந்தனர்.
வேதாரண்யம் வட்டாட்சியர் 14.04.2014 அன்று காலை பேச்சு வார்த்தைக்கு ஆசிரியர் சங்கங்களை அழைத்திருந்தார். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சென்ற போது பேச்சுவார்த்தைக்கு அவர்கள் அழைக்கப்படவில்லை.
இதனால் இன்று (
14.04.2014) அன்று வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து
ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. 300க்கு மேற்பட்ட
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்துக்கு விரைந்து வந்த நாகை மாவட்ட ஆட்சியர்
அவர்கள் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் மாவட்டச் செயலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
போராட்டத்தை திரும்ப பெறும்படியும் மாலைக்குள் ஒரு நல்ல பதிலை அளிப்பதாகவும் நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு
இணங்க போராட்டம் கைவிடப்பட்டது.
இன்று மாலை 6 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் திரு. லெட்சுமிநாராயணன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் திருகாந்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாவட்டச் செயலாளர் திரு. பார்த்தசாரதி மற்றும் இயக்கப்பொறுப்பாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர்
அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்திய நாடு முழுவதும் தேர்தல் பணியமர்த்துவதில்
இந்த முறையே பின்பற்றப்படுவதால் நாகை மாவட்டத்துக்கு மட்டும் பயிற்சியையும் தேர்தல்
பணியையும் மாற்றிமையக்க முடியாதென நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தேர்தல் பயிற்சிக்கும் தேர்தல் பணிக்கு சென்று
வருவதற்கும் போக்குவரத்து வசதி வேண்டுமென இயக்கப்பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் இலவச பேருந்து வசதி செய்து தருவதாக உத்தரவாதமளித்தார்
No comments:
Post a Comment