SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, April 18, 2014

சின்னப் பாட்டிதோட்டத்திலே சிவப்புத் தக்காளி !

சின்னப் பாட்டிதோட்டத்திலே சிவப்புத் தக்காளி !


வி.எஸ்.சரவணன்

''திமுக்கு தக்கா திமுக்கு தக்கா
திமுக்கு தக்காளி
சின்னப் பாட்டி தோட்டத்திலே
சிவப்புத் தக்காளி
சமைக்கும் முன்னே தொண்டைக்குள்ள
நீர் சுரந்துச்சே
சக்கை பிழிஞ்சு போட்ட இடத்தில்
விதை முளைச்சுச்சே... ''

ம.லெ.தங்கப்பாவின் இந்தப் பாடலுக்கு, மொட்டு வகுப்பில் படிக்கும் சிட்டுகளின் நடனத்துக்கு பலத்த கைத்தட்டல். தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதையே மறந்து, பார்வையாளர்கள் ரசித்தனர்.
திருப்பூர், தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் கலை விழாவில்தான் இந்த அழகுக் காட்சி.ஒரு பள்ளியின் கலைவிழா என்றால், அந்தப் பள்ளியில் இருந்து 20 அல்லது, 30 மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். ஆனால், இந்தப் பள்ளியிலோ, படிக்கும் 300 மாணவர்களும் பாடல், நடனம், நாடகம் என்று ஏதாவது ஒன்றில் கலக்கி எடுத்தனர். மேலும், சமூக விழிப்பு உணர்வு உண்டாக்கும் பல்வேறு விஷயங்களை எளிமையாகவும் அழகாகவும் மாணவர்கள் நடத்தினார்கள்.
பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு, ''இந்தத் தாய்த் தமிழ்ப் பள்ளியை 1995 முதல் நடத்திவருகிறோம். எங்கள் பள்ளியின் கலைவிழா இந்தப் பகுதி மக்களிடையே புகழ்பெற்றது. வெறும் நடனம், ஃபேஷன் நிகழ்ச்சியை நடத்தி, பரிசு கொடுப்பது இல்லை. சூழலியல் தொடர்பான செய்திகளையும் நமது நாட்டுப்புறக் கலைகளையும் பிஞ்சு மனங்களில் பதியவைப்பதே எங்களின் நோக்கம்'' என்றார்.
தக்காளி பாடல் முடிந்ததும், மரபணு மாற்றத்தினால் வரும் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட தனிநபர் நாடகம், வாழைப்பழத்தில் மருந்து வைத்துத் தருவதைப் போல, சிரிப்போடு சிந்தனையையும் தூண்டியது.
நம்மாழ்வார் வேடமிட்டு வந்த ஒரு மாணவன், ''நமது ஆரோக்கியமான உணவுமுறை எப்படி மாறிப்போனது தெரியுமா?'' என்று கேட்டு, அவரைப்போல பேசிக் காட்டினான். காந்தி வேடத்தில் வந்த மாணவன், வெள்ளைக்காரர் தந்த கல்விச் முறை பற்றிசொன்னது சிந்திக்கவைத்தது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கரகாட்டம் பற்றி ஒரு சுவையான ஃப்ளாஷ்பேக் சொன்னார்கள். ''இதுக்காக, தனியாகப் பயிற்சி ஆசிரியர்கள் யாரும் கிடையாது. 10 ஆண்டுகளுக்கு முன், சிவகாமி என்ற ஆசிரியை இந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கரகாட்டம்  கற்றுத்தந்தார். பிறகு, அவர் பணியில் இருந்து விலகிட்டார். அடுத்த வருஷம்  அந்த மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். இது அப்படியே தொடர்ந்து, 10 ஆண்டுகளாக சீனியர் மாணவர்களே, ஜூனியர் மாணவர்களுக்குக் கற்றுத்தந்து அரங்கேற்றம் செய்கிறோம்'' என்றார் ஒரு மாணவி.
பரதம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், சக்கை குச்சி நடனம், பறை என்று விதவிதமாக அசத்தினர்.
நான்காம் வகுப்பு மாணவர்கள் நடித்த 'கல்லணை’ நாடகம், வரலாற்று நிகழ்வுகளைப் பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்தது.
ஒழுங்கற்ற நம் உணவுமுறை, சூழலியல் பாதுகாப்பு என  முழுக்க முழுக்க சமூக விழிப்பு உணர்வை மையமாகவைத்து நடந்த இந்தப் பள்ளியின் ஆண்டு விழா, மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் ஒரு பாடம்.
நாமும் கைதட்டி வரவேற்போம்.

No comments: