தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான புதிய பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்படுமா?
கருத்துகள்
Shruti Hassan Whistles for CSK
தமிழகத்தில் கல்வித்துறை கடந்த 20ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக நடந்தது. தொடந்து, முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வு நடத்துவதற்கு முன் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 50 மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட் டது. ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு மே 20ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சட்டசபையில் முதல்வர் இந்த கல்வி ஆண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
மேல்நிலைப் பள்ளியாக தகுதி பெறும் 100 பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் என 900 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோல் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 50 தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 500 பேராவது நியமிக்கப்படலாம்.
எனவே, தரம் உயர்வு பெறும் 150 பள்ளிகளின் பெயர் பட்டியல்களை கலந்தாய்வுக்கு முன் உடனடியாக வெளியிட வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கத்தினரும் வலியுறுத்துகின்றனர். ஒருவேளை தாமதமாக பட்டியல் வெளியிடப்பட் டாலும், இதனால் உருவாகும் புதிய பணி இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தி, மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment