இன்னும் 10 நாளில் பள்ளிகள் திறப்பு நோட்டுப் புத்தகங்கள் விலை 10% உயர்வு
கருத்துகள்
Shruti Hassan Whistles for CSK
நெல்லை : பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நோட்டு, புத்தகப்பை உள்ளிட்டவை விற்பனைக்கு குவிந்துள்ளன. கடந்த ஆண்டை விட 10 சதவீதம் இவற்றின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடபுத்தகங்கள், முக்கியமான நோட்டுகள் பள்ளி திறக்கும் நாளன்றே இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பெரும்பாலும் நோட்டுகள் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கினாலும் அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கடைகளிலும் ஏராளமான நோட்டுகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்காக சிறப்பு தரத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ள நோட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஷாட் சைஸ், கிங் சைஸ், லாங் சைஸ் என மூன்று அளவுகளில் தலா 160 பக்க நோட்டுகள் அழகிய இயற்கை காட்சிகள் அடங்கிய அட்டையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டுகள் விலை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நெல்லையை சேர்ந்த புத்தக வியாபாரி நியூட்டன் கூறியதாவது:
காகிதம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டு நோட்டுகள் விலை 10 சதவீதம் கூடியுள்ளது. 20 ரூபாய் நோட்டு 25 ரூபாய், 40 ரூபாய் நோட்டு 45 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பென்டென், சோட்டாபீம், ஆங்கிள் பேட், ஹானாமோட்டா போன்ற தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சிகளின் கதாபாத்திரங்கள் அடங்கிய படங்களுடன் புத்தகப்பைகள் விதவிதமாக தயாராகி விற்பனைக்கு வந்துள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் விதவிதமான புத்தகப்பைகள் வந்துள்ளன. இவை 150ல் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு உள்ளது.
எழுதுபொருள் பாக்ஸ், டிபன்பாக்ஸ் போன்றவையும் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பொம்மை படங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன. அடுத்த வாரம் முதல் இவற்றின் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment