அரசு பள்ளியில் ஆங்கிலவழி கல்வி இளைஞர் பெருமன்றம் எதிர்ப்பு
பதிவு செய்த நேரம்:2013-05-22 10:45:11
Shruti Hassan Whistles for CSK
நீடாமங்கலம், : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வியை கொண்டு வருவது என்பது தாய்மொழி கொள்கைக்கு எதிரானதாகும் என்று ஆங்கிலவழி கல்விக்கு அனைத்து இளைஞர் பெருமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய கூட்டம் அதன் துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் பாலதண்டாயுதம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அரசியல் விளக்க உரையாற்றினர். ஒன்றிய செயலாளர் அறிவழகன் அமைப்பு நிலை கடமைகள் குறித்து பேசினார்.
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் போது கல்வியும் தாய் மொழியான தமிழிலேயே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை கொண்டு வருவது என்பது தாய்மொழி கொள்கைக்கு எதிரானதாகும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியில் கல்வி கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்கள் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி நீடாமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் சாதியை குறிப்பிடும் வகையில் பிளக்ஸ் போர்டு வைக்கப்படுவதும், துண்டு பிரசுரங்கள் வெளியிடுவதும் மக்களிடையே மற்றும் இளைஞர்களிடையே சாதி கலவர தன்மையை உருவாக்கும் அபாய நிலை உள்ளது. இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்திட வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment