சேலம் மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வருகிற 28–ந் தேதி முதல் 4 நாட்கள் நடக்கிறது
சேலம்
சேலம் மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வருகிற 28–ந் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
சேலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சேலம் சிறுமலர் தொடக்கப்பள்ளியில் வருகிற 28–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.
28–ந் தேதி காலை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகல் ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. 29–ந் தேதி காலை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகல் பதவி உயர்வு பெறும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வும் நடைபெற உள்ளது. 30–ந் தேதி காலை ஒன்றியத்திற்குள் இடை நிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், 31–ந் தேதி காலை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க நாளை கடைசி
எனவே, இந்த கலந்தாய்வில் பணியிட மாறுதல் கோரும் ஆசிரியர்கள் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) மாறுதல் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட படிவங்களிலேயே பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment