அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் இலவச கல்வி
பதிவு செய்த நேரம்:2013-05-22 10:45:48
Shruti Hassan Whistles for CSK
நாகை, : நாகை பாப்பாக்கோவில் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் சிறப்புரையாற்றினர். முகாமில் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பதற்கு இலவச கல்வி சான்றுகள் வழங்கப்பட்டன. நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மாணவி லியோனா, விழுந்தமாவடி அரசு பள்ளி மணிராஜ், செம்போடை அரசு பள்ளி வெங்கடேஷ், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பள்ளி முருகையன் ஆகியோருக்கு சான்றுகளை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.
No comments:
Post a Comment