ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
By dn, மைசூர்
First Published : 15 May 2013 12:13 PM IST
மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4 வருட பி.எஸ்சி.,இடி, 4 வருட பி.ஏ.,இடி, 6 வருட எம்.எஸ்சி.,இடி, 1 வருட எம்.எட், டிசிஜிசி ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
டிசிஜிசி படிப்பை தவிர, அனைத்துப் படிப்புகளும் மைசூர் பல்கலைக்கழகத்தில் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது.
விண்ணப்பப் படிவத்தை www.ncert.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப ரூ.500ம், எஸ்சி, எஸ்டி., பிரிவினர் ரூ.350 வரைவோலை எடுக்க வேண்டும்.
மே 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.riemysore.ac.in/images/latest-News/notification.pdf என்ற இணையதளத்தை காணலாம்.
No comments:
Post a Comment