பள்ளி கல்வித்துறையில் உளவியல்
வல்லுனர் பணிஏப்ரல் 19,2013,07:18 IST
சென்னை: பத்து, "சைக்காலஜிஸ்ட்" பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
பள்ளி கல்வித்துறையில், பிரச்சனைக்குரிய மாணவ, மாணவியருக்கு, கலந்தாய்வு அளிப்பதற்கான திட்டம், கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 10 மாதம் பணியாற்ற, 10, உளவியல் வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தற்போது, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதற்கான மாதிரி விண்ணப்பம், தமிழக அரசு இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. எம்.எஸ்சி., சைக்காலஜி படித்தோர், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, தொகுப்பூதியமாக, மாதம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பத்தை, "பதிவிறக்கம்" செய்தோ, அதே மாதிரி தட்டச்சு செய்தோ விண்ணப்பிக்கலாம். வரும், 25ம் தேதியில் இருந்து, மே, 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "ஜாய் எபினேசர், உதவி இயக்குனர், பள்ளிகல்வி இயக்குரனகம், கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு, பதிவு அஞ்சல் மூலம் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment