20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளிஏப்ரல் 19,2013,07:17 IST
சென்னை: சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக, 10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் உள்ளன. 95 ஆயிரம் மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். 99 ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், மேலும், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படும் வகையில், முதல் வகுப்புகள் துவங்கப்படும் எனவும், 10 இடங்களில், மழலையர் பள்ளிகள் துவங்கப்படும் எனவும், மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
இதன்படி, வரும் கல்வியாண்டு முதல் இந்த பள்ளிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் அமையும் இடங்களை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கிய உடன், இதற்கான சேர்க்கை நடக்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
புதிய ஆங்கில வழி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் பழைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. விரிவாக்க பகுதிகளில் இந்த பள்ளிகள் துவங்கப்படவில்லை.
இதுகுறித்து, மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விரிவாக்க பகுதிகளில், 133 பள்ளிகள் உள்ளன. இவை, அரசின் கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டங்களின் கீழ் செயல்படுகின்றன. மாநகராட்சி கல்வி துறையின் கட்டுப்பாட்டிற்குள் வராததால், ஆங்கில வழி, மழலையர் பள்ளிகள் துவங்க முடியவில்லை" என்றனர்.
எப்போது, இணைக்கப்படும் என, கேட்ட போது, "பள்ளிகளை இணைப்பது அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து, அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
எங்கெங்கே ஆங்கில வழிக்கல்வி?
வார்டு பள்ளி, இடம்
35 நடுநிலைப் பள்ளி, சின்னாண்டி மடம்
37 தொடக்கப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்
46 நடுநிலைப் பள்ளி, வியாசர்பாடி
48 நடுநிலைப் பள்ளி, 40, டி.எச்.,சாலை
58 நடுநிலைப் பள்ளி, வைக்கங்கராயன் தெரு
60 நடுநிலைப் பள்ளி, அங்கப்பா தெரு,
65 தொடக்கப் பள்ளி, கொளத்தூர்
67 தொடக்கப் பள்ளி, ஜி.கே.எம்.காலனி
68 நடுநிலைப் பள்ளி, கோபாலபுரம்
75 நடுநிலைப் பள்ளி, வெங்கடம்மாள் தெரு
76 நடுநிலைப் பள்ளி, அங்காளம்மன் தெரு
102 நடுநிலைப் பள்ளி, அமைந்தகரை
102 நடுநிலைப் பள்ளி, குஜ்ஜி தெரு
104 நடுநிலைப் பள்ளி, புல்லாபுரம்
114 நடுநிலைப்பள்ளி, பெல்ஸ் சாலை
120 நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணாம்பேட்டை
123 தொடக்கப் பள்ளி, வன்னிய தேனாம்பேட்டை
140 தொடக்கப் பள்ளி, வண்டிக்காரன் தெரு
175 தொடக்கப் பள்ளி, இந்திரா நகர்
177 தொடக்கப் பள்ளி, குயில்குப்பம்
மழலையர் பள்ளிகள் எங்கே?
39 தொடக்கப் பள்ளி, டி.எச்.,சாலை
50 உருது தொடக்கப் பள்ளி, அரத்தூண் சாலை
73 தொடக்கப் பள்ளி, திரு.வி.க.நகர்
102 நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்
96 தொடக்கப் பள்ளி, பாலவாயல் தெரு
110 தொடக்கப் பள்ளி, காம்தார் நகர்
116 நடுநிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி
137 தொடக்கப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்
130 தொடக்கப் பள்ளி, புலியூர்
174 தொடக்கப் பள்ளி, மடுவன்கரை
No comments:
Post a Comment