அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்க உத்தரவு
ஏப்ரல் 19,2013,07:21 IST
சென்னையை அடுத்த குன்றத்தூர், திருநாகேஸ்வரத்தில், வள்ளுவர் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு, பிப்ரவரியில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், ஒரு புகார் அளித்தனர்.சென்னை: "குன்றத்தூரை அடுத்த, திருநாகேஸ்வரத்தில் உள்ள, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதில், "எங்கள் பள்ளியில், கழிப்பறை வசதி இல்லை. வகுப்பறைகளும் பழுதடைந்துள்ளதால், திறந்தவெளியில் பாடம் நடத்த வேண்டி உள்ளது. இதனால், மழைக்காலத்தில், மாணவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எங்களுக்கு, ஊதிய உயர்வையும், பள்ளி நிர்வாகம் தரவில்லை" என, தெரிவித்திருந்தனர்.
புகார் தொடர்பாக, ஆரம்ப பள்ளிக் கல்வி இயக்குனர், காஞ்சிபுரம் மாவட்ட ஆரம்ப பள்ளிக் கல்வி அதிகாரி ஆகியோரிடம் இருந்து, விரிவான அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஜெயந்தி பிறப்பித்துள்ள உத்தரவு:
அரசு உதவி பெறும் பள்ளியான, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, ஆரம்ப பள்ளிக் கல்வி இயக்ககம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இப்பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment