கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/4/2013 3:49:30 PM
தமிழ்நாட்டில் 5 நிலைகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கூட்டுறவுத் தேர்தல் ஏப்ரல் 5 ஆம் தேதி துவங்கி 5 கட்டமாக நடைபெறுகிறது.
முதல் நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. . முதல் நிலையில் 22,192 சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம் 5,12,19,27ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டத்தில் 5,855 சங்கங்களுக்கும் , 2 வது கட்டத்தில் 5,603 சங்கங்களுக்கும்,3 வது கட்டத்தில் 5,481 சங்கங்களுக்கும் , 4 வது கட்டத்தில் 5,525 சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்நிலை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் ஜூன் 6-ல் நிறைவடையும். 2 ஆம் நிலை முதல் 5 ஆம் நிலை வரையிலான சங்க தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை: பல கட்ட சட்டப் போராட்டங்களை கடந்து, 11 ஆண்டுகளுக்குப் பின், கூட்டுறவுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. "கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், ஏப்., 5ம் தேதி துவங்கி, மே 6ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக நடக்கும்' என, தமிழக கூட்டுறவு தேர்தல் ஆணையர் மோகன் அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழக கட்சிகளுக்கு பலப்பரீட்சையாக இது அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"உள்ளாட்சி தேர்தலைப் போல, கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் நடத்த வேண்டும்' என, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
22,532 சங்கங்கள்: இதையடுத்து, முதல்முறையாக, கூட்டுறவு தேர்தலை நடத்த, தனி தேர்தல் ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது. இயங்காத கூட்டுறவு சங்கங்களை நீக்கி, தேர்தல் நடத்தப்படுகிறது. கூட்டுறவு தேர்தல் குறித்து, ஆணையர் மோகன் அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், பால் வளம், மீன் வளம், தொழில் வணிகம், கதர், கிராம தொழில்துறை ஆணையர்கள், கைத்தறி, கால்நடை பராமரிப்பு, சர்க்கரை, வீட்டுவதி, சமூக நலம், வேளாண் துறை இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, 22 ,532 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குகின்றன. இவற்றுக்கான தேர்தல், ஐந்து கட்டங்களாக நடக்கின்றன. முதல் கட்டமாக, கூட்டுறவு விற்பனை சங்கங்களை தவிர, இதர தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
இரண்டாவது கட்டமாக, கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, மத்திய வகை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கும். மூன்றாவதாக, மத்திய கூட்டுறவு வங்கிகள், மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் இதர தலைமை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடநத்தப்படும். நான்காவது கட்டத்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, நுகர்வோர் கூட்டுறவு இணையம், தொழில் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு தேர்தல் நடக்கும். இறுதியாக, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல், ஏப்., 5ம் தேதி துவங்கி, மே 6ம் தேதி வரை நடக்கிறது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய, மாவட்ட வாரியாக, தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். விதி மீறல் இன்றி, அமைதியான தேர்தலை பார்வையாளர்கள் உறுதி செய்வர். நேற்று முதல் துவங்கிய தேர்தல் நடைமுறைகள், மே 6ம் தேதி வரை, அமலில் இருக்கும்.
கட்டுப்பாட்டு அறை: தேர்தல் குறித்த விவரங்களை பெறவும், புகார்களை தெரிவிக்கவும், தேர்தல் ஆணைய அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. 044 - 24351403 என்ற தொலைபேசி எண்ணில், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என,
Advertisement
கண்டறியப்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். ஓட்டுப் பதிவு மற்றும் ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றுக்கும், உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு, அதிகபட்சமாக, 10 மாதங்களே உள்ள நிலையில், நடக்க இருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலிலும், அதன் தாக்கம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிற
ஏப்ரல் 5–ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறும்: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல்-மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
சென்னை,
தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் எம்.ஆர்.மோகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கூட்டுறவு சங்கங்கள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர செயற் பதிவாளர்களான பால்வளத்துறை ஆணையர், கைத்தறித்துறை இயக்குனர், மீன்வளத்துறை ஆணையர், தொழில் வணிகத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர், சர்க்கரைத்துறை இயக்குனர், பதிவாளர் (வீட்டு வசதி), சமூக நலத்துறை இயக்குனர், கதர் கிராம தொழில்துறை ஆணையர், வேளாண்மைத்துறை இயக்குனர் ஆகிய 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தமிழக அரசு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஒன்றை அமைத்தது. இதன் ஆணையராக நான் (எம்.ஆர்.மோகன்) பொறுப்பேற்று உள்ளேன். இந்த தேர்தல் ஆணையம்தான், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை தற்போது நடத்த உள்ளது.
5 கட்டங்களாக தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த தனியாக மாநில தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதைப்போல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தவிர இதர தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயற் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வகை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்
மூன்றாம் கட்டமாக மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை தவிர) இதர தலைமை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. நான்காம் கட்டமாக மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஐந்தாம் கட்டமாக தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
ஏப்ரல் 5–ந்தேதி
முதல்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 22 ஆயிரத்து 192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 5 ஆயிரத்து 855 சங்கங்களுக்கும், 2–ம் கட்டத்தில் 5 ஆயிரத்து 603 சங்கங்களுக்கும், 3–ம் கட்டத்தில் 5 ஆயிரத்து 481 சங்கங்களுக்கும், 4–ம் கட்டத்தில் 5 ஆயிரத்து 253 சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5–ந்தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 12–ந்தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 19–ந்தேதியும், நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 27–ந்தேதியும் நடைபெறுகிறது.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
கூட்டுறவு சங்க தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், ஓட்டுப்பெட்டிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் இல்லாத வகையில் தற்போது கூட்டுறவு தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விதிமீறல்கள் இல்லாமலும், அமைதியான முறையிலும் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வார்கள்.
தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது
முதல் கட்ட தேர்தல் நடைமுறைகள் நேற்று தொடங்கியது. இந்த நடைமுறைகள் வரும் மே மாதம் 6–ந் தேதியுடன் முடிவடையும். இரண்டாம் நிலைக்கான தேர்தல் அட்டவணை தொடர்ந்து வெளியிடப்படும். இவ்வாறே அடுத்த நிலைகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த விவரங்கள் பெறவோ அல்லது புகார்கள் இருந்தால் அதுபற்றி தெரிவிக்கவோ தேர்தல் ஆணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் 044–24351403 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு கூறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment