பிகாரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு; போலீஸ் தடியடி
By dn, பாட்னா
First Published : 06 March 2013 02:09 AM IST
பிகாரில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தலைநகர் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 2 போலீஸ் ஜீப்புகள் எரிக்கப்பட்டன. பஸ்கள், கார்கள் என 10-க்கும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரின் காரும் அடங்கும். இதையடுத்து ஆசிரியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
பிகார் சட்டப் பேரவை அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த சம்பவங்கள் அரங்கேறின.
"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். இதையடுத்து அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. அதே நேரத்தில் போலீஸ் ஜீப்புகளுக்கு தீ வைப்பது, வாகனங்களை கல்வீசி தாக்குவது என வன்முறையில் இறங்கினர். இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது' என்று நகர போலீஸ் கமிஷனர் ஜெயகாந்த் தெரிவித்தார். போராட்டத்தால் நகரின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்பிரச்னையை சட்ட மேலவையில் எழுப்பியதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பணி நிரந்தரம், சம ஊதியம் கேட்டு ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது போலீஸ் தடியடி ஆர்ப்பாட்டக்காரர்கள் 5 வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள்
பதிவு செய்த நாள் : Mar 05 | 09:20 pm
பாட்னா, -
நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் 5 வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள்.
ஆசிரியர்கள் போராட்டம்
பீகார் மாநிலம் பாட்னாவில் ஆர்–பிளாக் பகுதியில் சட்டசபை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.தங்களை முழு நேர ஆசிரியர்களாக நிரந்தரம் செய்ய வேண்டும், ஆசிரியர்களுக்குரிய ஊதியம் தரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கலவீச்சு
நேற்று இந்த போராட்டம் தீவிரமடைந்து திடீர் வன்முறையாக மாறியது. இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பல போலீசார் காயம் அடைந்தனர்.இதனால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கற்கள் வீசியதில் 6–க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. இதில் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் வாகனமும் சேதமடைந்தது.
தீவைப்பு
பின்னர் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடி கலைந்து சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரின் 2 ஜீப்புகள் உள்பட 5 வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள். இந்த மோதல் காரணமாக பாட்னா நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்த பிரச்சினையை எதிர்க்கட்சியினர் அம்மாநில சட்டசபையிலும் எழுப்பினார்கள். கேள்வி நேரத்தில் இடையூறு ஏற்படுத்தியதுடன், இந்த பிரச்சினை தொடர்பாக கல்வி மந்திரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள்.ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டத்தால் சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது
No comments:
Post a Comment