வங்கி ஊழியர்கள் குளறுபடி
அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதத்தில் 2 முறை சம்பளம்
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/6/2013 2:07:25 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் என அரசு ஊழியர்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பள பட்டுவாடா நடக்கிறது. பிப்ரவரி மாத சம்பளம் கடந்த 28ம் தேதி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களில் 70 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.இந்நிலையில், மார்ச் 1ம் தேதி மீண்டும் பிப்ரவரி மாத சம்பளம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. சில 2 சம்பளத்தையும் எடுத்து செலவு செய்தனர். இது பற்றி அறிந்த அதிகாரிகள் கருவூல கணக்குகளை சரி பார்த்தனர். இதில், முறையாக வங்கிக்கு கணக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது. ஆனால், வங்கி ஊழியர்கள் தவறுதலாக 2 முறை அப்லோடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக இரண்டாவது சம்பளத்தை திரும்ப பெறும் பணியில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த குளறுபடியால் மீதமுள்ள 30 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 2வது சம்பள பணத்தை எடுத்து செலவு செய்தவர்களிடம் உரிய தொகையை வசூலிக்கவும், இதுவரை எடுக்காதவர்களின் இரண் டாவது சம்பள பணத்தை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment