பிப்ரவரி 04,2013,07:11 IST
:
சிவகங்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு முடியும் தறுவாயில் கூட, புத்தகப் பை உட்பட, இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பஸ் பாஸ், சீருடை, நோட்டுப் புத்தகம், காலணி உட்பட, 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், 13 பொருட்களை மட்டுமே வழங்கி உள்ளனர்.
கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி - ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10 ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவச பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்கு பின், விடுமுறை நாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்" என்றார்.
வாசகர் கருத்து
கல்வி துறை.. ஒவொரு இலவச பொருட்களுக்கும்.. தனி தனியே .. மாணவர் பற்றிய அணைத்து விவரங்களையும் கேட்கிறது.. உதரணமாக ... இலவச geomentry box க்கு .. மாணவர் பெயர், பிறந்த தேதி ..முகவரி, பெற்றோர் விவரம்... (ஏறக்குறைய 20-25 விவரங்கள்) திரும்பவும் இலவச செருப்பு க்கு ..மாணவர் பெயர், பிறந்த தேதி ..முகவரி, பெற்றோர் விவரம்... (ஏறக்குறைய 20-25 விவரங்கள்) இதை ஒரு DATABASE வைத்து தேவை பட்ட additional விவரங்களை மட்டும் .. உதரணமாக கால்-சைஸ் மட்டும் INPUT கொடுக்க SETUP செய்ய கல்வி துறை க்கு தெரியவில்லை... ஒரு சாதாரண ComputerOperator தெரிந்த விவரம் கூட ... INTERGRATED DATABASE வைத்து manage பண்ண கல்வி துறை க்கு தெரியவில்லை... இதில் .. அமைச்சர் - பல IAS அதிகாரிகள் ..பல லட்சம் சம்பளம் வங்கி கொண்டு ..சிறப்பாக செயல் படவில்லை இதுபோல் 20-25 இலவச பொருட்களுக்கும் 20-25 முறை ..மாணவன் பற்றிய அணைத்து விவரங்கை ..தொகுத்து அனுப்ப.. பல நாட்கள் ஆகின்றது.. பள்ளியில் உள்ள ஆபீஸ்-அச்சிச்டன்ட் க்கு ... யெனவே காலம் கடந்து வழங்கி ..பயன் இல்லாமல் போகின்றது பல பொருட்கள் (செருப்பு .. geomentry பாக்ஸ்..ஏறக்) TNPSC போன்று திறமையாக- விரைவில் Computerize செய்ய தெரிந்த ஒருவர் கல்வி துறைக்கு தேவை...
|
by தனுஷ்,India 2/4/2013 11:36:11 AM IST
|
No comments:
Post a Comment