திவு செய்த நாள் : பிப்ரவரி 05,2013,01:36 IST
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை. வீட்டிலிருந்தே தட்டு கொண்டு வந்து சாப்பிட, மாணவர்கள் சங்கடப்படுகின்றனர். இதையடுத்து, சத்துணவு வழங்க, 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் தேவை என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1982 - 83ம் கல்வியாண்டில், பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தை, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்தார். அப்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும், 35 ஆயிரம் பள்ளிகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
"வெரைட்டி ரைஸ்' : இதற்காக, ஒரு மாணவனுக்கு, 10 ரூபாய் என்ற அடிப்படையில், அலுமினிய தட்டு, டம்ளர் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கி கொள்ள உத்தரவிடப்பட்டது. தற்போது, 43 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும், சத்துணவு திட்டத்தின் மூலம், 52 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 25 லட்சம் மாணவர்களும்; 6ம் வகுப்பு முதல், 10ம்

வருகை பதிவேட்டுக்காக... சில மாணவர்கள், வருகை பதிவேட்டுக்காக சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக,வீட்டில் இருந்து சிறிய தட்டு எடுத்து வருகின்றனர். முட்டையுடன், சத்துணவு வாங்கி, முட்டையை மட்டும் சாப்பிடுகின்றனர். சாப்பாட்டை அப்படியே கொட்டி விடுகின்றனர். இதனால் சத்துணவு வீணாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த பிரச்னை குறித்துல எங்கள் கவனத்துக்கும் வந்தது. 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் வாங்க வேண்டியிருப்பதாகவும், இதற்காக, 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். விரைவில் அரசு தரப்பில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
No comments:
Post a Comment