பண்ருட்டி : பண்ருட்டி அடுத்தசேமக்கோட்டை ஆதிதிராவிட நலதுவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணியில் பள்ளி மாணவர்களைபயன்படுத்தும் அவலம் நடந்துவருகிறது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளி இயங்கிவருகிறது. 180 மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவுநேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும்பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதனால், பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனையேற்று பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் பணியில் ஒரு கொத்தனார் மட்டுமே ஈடுபட்டுள்ளார். செங்கல் எடுத்துக் கொடுக்கசித்தாளுக்கு பதிலாக மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் தினா, முத்துக்குமரன், கவுதமன், சசிதரன் ஆகியோர்கொத்தனாருக்கு செங்கல் எடுத்துக் கொடுத்தனர். இதனை போட்டோ எடுத்ததை அறிந்த, தலைமைஆசிரியர் கிரேசி, "பள்ளி வேலையை மாணவர்கள் தான் செய்ய வேண்டும். இதில் என்ன தவறுஉள்ளது" என கூலாக பதில் அளித்தார்.
மாணவர்கள் படிக்க பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், ஆசிரியர்கள் சிலர்அத்துமீறி மாணவர்களை இதுபோன்று பிற பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து கொண்டுதான்உள்ளது. இந்த அத்து மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment