அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்றபெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார்சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதைதவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.சிவகங்கை: பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல,சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.
பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும்.இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.
சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளைஅறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாதகாரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்நேரில் வரவழைக்க வேண்டும்.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளிஅலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்தவிதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ.,அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Saturday, January 12, 2013
பள்ளிப் பணிகளை கவனிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடிஜனவரி 12,2013,07:15 IST
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment