நாகை பள்ளிகளுக்கு ஜூலை 2-ல் விடுமுறை
நாகப்பட்டினம், ஜூன் 27: நாகையை அடுத்த நாகூரில் உள்ள நாகநாதசுவாமி திருக்கோவில் தேர் திருவிழாவையொட்டி, நாகை நகரம் மற்றும் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை, ஜூலை 14-ம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment