நாகை,ஜன.19:
எந்த அரசுத்துறையிலும் இல்லாத வகையில், திறன் மதிப்பீட்டு படிவத்தை கொடுத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கக முடிவை திரும்ப பெற வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட் டார பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் லெட்சுமி நாராய ணன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் பாலசண்முகம் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நகர செய லாளர் தாமோதரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், எந்த அரசுத்துறையிலும் இல்லாத வகையில், திறன் மதிப்பீட்டு படிவத்தை கொடுத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கும் போக்கை அனைவருக்கும் கல்வி இயக்கக முடிவை திரும்ப பெற வேண்டும். நாகை உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, நலநிதி முன்பணம் உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்குவதில் ஏற்படும் காலத்தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கேட்டு கொள்வது, வடுகச்சேரி மற்றும் அந்தணப்பேட்டை ஆணிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிலுவை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உள்ளது. இத் தொகையை ஒருவார காலத்திற்குள் வழங்க நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கேட்டு கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார பொரு ளாளர் தனுசுமணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment