- Magizhnan17-01-2015 | 22:58:48ஆசிரியர்கள் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடவேண்டும் என்றும் தனித்தனியாக அக்கறை எடுத்து கற்பிக்கவேண்டும் எனவும் தலையங்கம் கூறுகிறது காலியாக உள்ள பல்லாயிரகணக்கான பணியிடங்களை நிரப்பினால் ஆசிரியரின் யோசனையை செயல்படுத்தலாம் இந்த கட்டுரையை படித்துவிட்டு என் உடலையே கிள்ளி பார்த்துக்கொண்டேன் முதன்முறையாக தினமணி அரசு பள்ளிகளை பாராட்டியிருக்கிறது அதுவும் தலையங்கத்தின் கடைசி பாரா சூப்பர்.15-1-2015 தேதி டைம்ஸ் நாளிதழில் இதே ப்ராதம் தன்னார்வ நிறுவனம் இன்னொரு புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது 2010ஆம் வருடம் அரசு பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் தமிழ்,ஆங்கில எழுத்துகளை படிக்ககூடியவர்களின் சதவீதம் 75 ஆக இருந்தது இந்த சதவீதம் 2014இல் 76 ஆக உயர்ந்துள்ளது அதே கால கட்டத்தில் தனியார் பள்ளிகளில் இந்த சதவீதம் 85 லிருந்து 79 ஆக சரிந்துள்ளது புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகிவருவதும் பயிற்சி பெறாத ஆசிரியர்களை தனியார் பள்ளிகள் குறைந்த சம்பளத்தில் பணிக்கமர்த்தி கல்லா கட்டுவதுதான் காரணம்
- சிவ.தணிகாசலம், நாமக்கல்கவிஞர் பேரவை, நாமக்கல்17-01-2015 | 21:02:18மத்திய அரசின் "அனைவருக்கும் கல்வி" என்கிற திட்டமே, இந்தியா முழுவதும் எட்டாம் வகுப்புவரை படிப்பவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி தருகிறது. பத்தாம்வகுப்பு வரை "அனைவருக்கும் இலவசக் கல்வி" என்பதை முதலில் நடைமுறைப்படுத்திவிட்டுப் பிறகு, பத்தாம்வகுப்பு வரை "அனைவருக்கும் கட்டாயக் கல்வி" என்பதைச் சட்டமாக்கவேண்டும். அவற்றை ஒழுங்காக நடைமுறைப்படுத்தவேண்டும். அதன்பிறகே பத்தாம்வகுப்பு வரை "அனைவருக்கும் தரமான கல்வி" என்பதைப் பல்வேறு ஆணையங்கள்மூலம் மத்திய அரசு கட்டுப்படுத்தமுடியும். தற்போது தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை ஓரளவுக்குக் கண்காணிப்பது பெற்றோர் ஆசிரியர் கழகங்களே! போதுமான சட்டங்களியற்றிய பின்னர் அப்பணியைப் பல்வேறு கல்வியாளர் குழுக்கள், தன்னார்வலர் குழுக்கள் அடங்கிய ஆணையங்கள் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.
- Karthik17-01-2015 | 15:10:59மொழி என்பது ஒரு குழந்தைக்கு மனதில் மட்டும் பதிந்து irupathu இல்லை, அக்குழந்தையின் பெற்றோர் மூலம் கிடைத்த மரபு அணுக்களிலும் பதிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் அதன் தாய் மொழயில் பயிற்சி கொடுத்து,கற்றுத்தேர்ந்தபின் பிறமொழிகள் எதைவேண்டுமானாலும் எளிதாக கற்றுக்கொடுத்துவிடலம். ஒரு கட்டிடம் நன்றாக கட்டவேண்டுமானால் அஸ்திவாரம் முழுமையாக கட்டப்படிருக்க வேண்டும், அதேபோல ஒரு குழந்தை அதன் தாய் மொழியில் பேச,எழுத,படிக்க முழு அளவில் தேர்ந்து இருக்கவேண்டும் அப்படி ஒரு குழந்தை கற்கும்பட்சதில் அந்தக்குழந்தையின் கற்கும் திறன் முழுமையாக மேம்படும். நம் நாட்டுமக்களின் அறியாமை மற்றும் மோகம் அழியும் வரை நாம் அரைகுறைகளாகவே இருப்போம்!
- 1
- Murthy17-01-2015 | 14:44:18சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கற்கும், கற்பிக்கும் தரம் இன்று இல்லாமல் போனதன் காரணம் ஆட்சிகள்தான், அதாவது கழக ஆட்சிகள். எதில்தான் அரசியல் என்றில்லாமல், "சாமானியனுக்கு" உதவுவதாக பாவனை செய்துகொண்டு அவனைப் படுகுழியிலே தள்ளிவிட்டுவிட்டார்கள். தரமான கல்வியை வழங்காமல் 8-ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' எதற்கு? வசதியானவன் தனியார் பள்ளியில் கற்றுத் தேருகிறான்; இல்லாதவன் முன்னேறும் வாய்ப்பை இழக்கிறான். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. முன்பு அரசு பள்ளிகளிலே கற்றவர்கள் பல அரசு துறைகளின் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்தார்கள்; ஆனால், இன்று அது சாத்தியம் இல்லை. இன்றைய அரசு பள்ளி மாணவர்களின் தேவை 'தரம் பாஸ்' அன்று, தரமான கல்வி.
- 1
- C As B Balchandhar17-01-2015 | 14:14:02When I was a student in the year 1952 - 1967 the education system was excellent. Good english, excellent tamil and what not. We even afraid of our class teachers even in colleges where we studied, but now ?????? Teachers worked and taught us various cultures of TN and there was no TASMAC. Now you can't see a teacher or a student without this. Nadir in education system is because of politicians and teaching methods also. Unless and otherwise this is changed you can't expect any improvement in the life of students. In those days people used to say rather proudly that INDIA IS BEING RULED BY 3 Ts i.e., HIGH EDUCATIONISTS AND IAS AND IPS WERE FROM TIRUCHY, TANJORE AND TIRUNELVELI DISTRICTS ALL THESE 3 Ts ARE ERSTWHILE UNDIVIDED DISTRICTS IN TN. But now ????
- Raji Dhanabal17-01-2015 | 12:14:37ஒருகாலத்தில் தமிழக அரசுப்பள்ளிகளில் கற்றவர்கள்தான் அரசின் பல்வேறு துறைகளையும் திறம்பட நிர்வாகம் செய்தனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் இன்று அரசுப்பள்ளிகள் தரம் தாழ்ந்து போனதற்கும்,கற்பித்தல் திறன் குறைந்து போனதற்கும்,மாணவர்களின் வாசிப்பு திறன் அதல பாதாளத்திற்கு சென்றதற்கும் காரணம் கல்வித்துறையின் ஊழல்,திறமையின்மை, மெத்தனம் என்றால் அது மிகையல்ல. மொத்தத்தில் அரசுத்துறைகளில் படிந்துள்ள ஊழல் கறை, தமிழக கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வர்.
- 1
- Manohar17-01-2015 | 10:18:32அருமையான தலையங்கம். கடைசி மூன்று பத்திகள் மிக அருமை.
- Pandian17-01-2015 | 09:39:53தலையங்கம் அருமை ..... கடைசி வரிகள் மட்டும் நிதர்சனம் ஆகிவிட்டால் .. நாமக்கல்லில் வெறிகொண்டு வியாபாரம் நடத்தும் பல கொழு கொழு "கோழி பண்ணைகள்" ஏலத்திற்கு வரலாம் ....
- 1
- Ramesh17-01-2015 | 08:33:29எந்த செயல்வழிக்கற்றல் நீங்கள் உதவுகிறது என்று கூறுகிறீர்களோ அதே செயல் வழிக்கற்றல் தான் இன்றைய கல்வித்தரம் தாழ்ந்ததுக்கு காரணம் என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அதிகாரிகள் கொடுக்கும் போலியான புள்ளி விவரங்களை வைத்து தயவு செய்து தினமணி இந்த முடிவுக்கு வர வேண்டாம்.
- Magizhnan17-01-2015 | 19:26:55தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் எந்த அரசு அதிகாரியும் தந்ததல்ல தலையங்கத்திலேயே குறிப்பிட்டிருப்பதுபோல ப்ராதம் என்ற தன்னார்வு அமைப்பு நாடு முழுவதும் நடத்திய ஆய்வு மூலம் கிடைத்த புள்ளிவிவரங்கள் இந்த புள்ளி விவரங்கள் டைம்ஸ் மற்றும் ஹிந்து நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன தமிழ்நாடு கல்வியில் முன்னேறுவது உங்களுக்கு பிடிக்காத ஒன்றா?
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Sunday, January 18, 2015
தினமணி தலையங்கம் பற்றி வாசகர் கருத்துகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment