பள்ளித் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரிக்கை
By DN, நாகப்பட்டினம்
First Published : 05 November 2014 04:05 AM IST
நாகை ஊராட்சி ஒன்றியப் பள்ளித் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அலுவலர்களுக்கு அனுப்பிய கோரிக்கை
மனு: நாகை ஒன்றியத்தில் 27 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும், 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், 18 பள்ளிகளில் மட்டுமே துப்புரவுப்
பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 150-ல் ரூ. 30 குடும்பநல நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு ரூ. 120 மட்டுமே வழங்கப்படுகிறது. இதுவும் கடந்த 20
மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால், மன உளைச்சலுக்குள்ளான துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள மறுப்பதோடு, போராடும்
மனநிலையிலும் உள்ளனர்.
நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து உரிய காலத்தில் இவர்களின் ஊதியப் பட்டியலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பாததே துப்புரவுப்
பணியாளர்களின் ஊதியப் பிரச்னைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, துப்புரவுப்
பணியாளர்களின் ஊதிய நிலுவையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், துப்புரவுப் பணியாளர்களுடன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்
No comments:
Post a Comment