நாகை ஒன்றியத்துக்குட்பட்ட
18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20
மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை
·
JhŒikahd
பாரதம் என்ற கோஷத்தை நமது பாரதப்பிரதமர் முன்வைத்துள்ள நிலையில்
நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு
20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை.
·
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும்
9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுமாக கூடுதல் 36 பள்ளிகள் உள்ளன. . இவற்றில் 18 பள்ளிகளில்
மட்டுமே கூட்டுநர்கள் உள்ளனர். மீதமுள்ள 18 பள்ளிகளில் கூட்டுநர் பணியிடம் காலியாக
உள்ளது.
·
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்தப்பள்ளி கூட்டுநர்களுக்கு
வழங்கப்படும் ஊதியம் மாதம் ஒன்றுக்கு வெறும் ரூபாய் 150 மட்டுமே. இதில் ரூபாய் 30 குடும்பநலநிதிக்காக
பிடித்தம் செய்யப்படுகிறது. கையில் கிடைப்பது ரூபாய் 120 மட்டுமே. ஒரு நாளைக்கு ரூபாய்
4 மட்டுமே. இன்று ஒரு தேநீரின் விலையே ரூபாய் 7 ஆகிவிட்டது. இந்த ஊதியேமே 20 மாதங்களாக
வழங்கப்படவில்லை. கீழ்வேளுர் ஒன்றியத்தில் மாத ஊதியம் ரூபாய் 350 வழங்கப்படுகிறது.
·
·
ன்படி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த
ஊராட்சி மன்றத்தலைவரும் துப்புரவு பணியாளர்களை பள்ளிகளை சுத்தம் செய்ய அனுப்புவதில்லை.
·
ன்படி எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு முழுவதும்
பள்ளியை சுத்தப்படுத்த இந்த பராமரிப்பு மானியத்தொகை போதவே போதாது.
·
நாகப்பட்டினம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் நேரத்தோடு சம்பளப்பட்டியலை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பாத காரணத்தாலும் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி
அலுவலர் மற்றும் அலுவலகப்பணியாளர்களின் அலட்சியத்தாலும் துப்புரவு பணியாளர்களுக்கு
ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
·
இதைப்பற்றிய செய்தி 31.08.2014 தேதியிட்ட தினகரன் நாளிதழில்
வெளிவந்தள்ளது. 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
·
20 மாதங்களாக ஊதியம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துப்புரவு
பணியாளர்கள் பள்ளியையும் வகுப்பறைகளையும் சுத்தம் செய்ய மறுக்கின்றனர். போராடும் மனநிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர். பள்ளியின் சுத்தம் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதினால்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
·
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாகை உதவித்தொடக்க
க்கல்வி அலுவலரையும் வட்டார வளர்ச்சி அலுவலரையும் அறிவுறுத்தி பள்ளி துப்புரவு பணியாளர்களின்
ஊதியத்தை உயர்த்தி மாதந்தோறும் வழங்கிட ஆவண செய்யுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் வட்டாரக்கிளை கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment