அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள்
By வேதாரண்யம்,
First Published : 29 August
2014 03:33 AM IST
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவியுடன்
செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 16 பள்ளிகளில்
மாலை நேர சிறப்பு இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் உள்ள எயிம்ஸ் இந்தியா பவுன்டேஷன், நாம்கோ நிறுவனம் இணைந்து
நடத்தும் திட்டத்தின் தொடக்க விழா கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா தொடக்கப்
பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நாம்கோ நிறுவன இயக்குநர் சி. ஜீவானந்தம் தலைமை வகித்தார். பள்ளி
நிர்வாகி ஆர். சின்னசாமி முன்னிலை வகித்தார்.
ஊராட்சித் தலைவர் சு. சிங்காரவேல், தலைமையாசிரியர் வே. சித்திரவேலு உள்ளிட்டோர்
பங்கேற்று பேசினர்.
No comments:
Post a Comment