நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
By நாகப்பட்டினம்
நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக
நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக்
கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் இரா. முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் மு. லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம், மாவட்டப் பிரதிநிதி ஆவராணி ஆனந்தன், மாவட்டச்
செயற்குழு உறுப்பினர்கள் கோ. சம்பத், இ. பரமநாதன், வட்டாரப் பொருளாளர் தொ.மு.
தனுசுமணி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பள்ளி வேலை நேரங்களில் உதவித்
தொடக்கக் கல்வி அலுலர்களால் நடத்தப்படும் பள்ளித் தலைமையாசிரியர் கூட்டங்களால்
கற்பித்தல் பணி தடைபடுவதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கூட்டங்களின் எண்ணிக்கையைக்
குறைத்து வரைமுறைப்படுத்த வேண்டும்.
நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்ட நாள்களாக காலியாக உள்ள 5 காலிப்
பணியிடங்களில் ஆசிரியர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க,
உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நாகை ஒன்றியத்தில் 13 பள்ளிகளில் உள்ள கூட்டுநர்களுக்கு கடந்த 18 மாதங்களாக
வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment