SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, June 15, 2014

நாகையில் தொடக்க கல்வித் துறை கலந்தாய்வு

நாகையில் தொடக்க கல்வித் துறை கலந்தாய்வு

First Published : 15 June 2014 04:25 AM IST
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாகையில் ஜூன் 16-ல் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 2014-15-ம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாகை, அண்ணாசிலை அருகே உள்ள புனித அந்தோனியார் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஜூன் 16-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
ஜூன் 16-ம் தேதி காலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிமாறுதல் கோருவதற்கான கலந்தாய்வும் நடைபெறும். 17-ம் தேதி காலை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
18-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும். 19-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும். 21-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும்.
23-ம் தேதி காலை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், பிற்பகலில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும். 24-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், 25-ல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
26-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், 28-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
இந்தக் கலந்தாய்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கும். மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும், தேர்ந்தோர் பட்டியல்படி பதவி உயர்வுக்குத் தகுதிபெற்ற ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான கலந்தாய்விலும் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வு முடிவில் உரிய ஆணைகள் வழங்கப்படும்.

No comments: